என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sivarathri"
- இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
- இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.
சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும். அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.
மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.
இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.
ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.
சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் அவற்றை கூட வெட்டுவதில்லை.
கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.
இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.
இதன் அருகிலுள்ள தேவர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன! இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.
சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேவர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.
- மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம்.
- இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
தைப்பூச விரதம்:
நாள் :
தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் :
சிவபெருமான்
விரதமுறை :
காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் :
திருமண யோகம்
சிவராத்திரி விரதம்:
நாள் :
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் :
சிவன்
விரதமுறை :
மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம்.
முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம்.
இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் :
நிம்மதியான இறுதிக்காலம்
- சிவம் என்ற சொல்லுக்கு “மங்களமானது” என்று பொருள்.
- சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.
சிவம் என்ற சொல்லுக்கு "மங்களமானது" என்று பொருள்.
சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.
சிவபெருமானை காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும். நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும். மாலையில் தரிசிக்க - பாவம் அகலும். அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.
அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா, இலங்கை, நேபாளம் உட்பட பல நாடுகளில் கோவில்கள் பல உண்டு.
ஜோதி லிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள், பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்,சப்த விடங்க சிவத்தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள் (சிவதலங்கள்), தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோவில்கள் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும்.
மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள்.
- விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.
- அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.
சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.
அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து திரு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.
பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும்.
சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.
சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும்.
நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது.
மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பவாகும்.
தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.
சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.
கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும்.
கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம் வரவேண்டும்.
வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.
அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.
சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.
கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.
வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.
அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணைய் ஊற்ற வேண்டும்.
இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும்.
- துலாம் ராசிக்காரர்கள் பசு மாட்டு பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
- கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
மேஷம் ராசிக்காரர்கள் சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை கொண்டு சிவலிங்கத்திற்கு படைத்து சிவபஞ்சாட்சர மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ரிஷபம் ராசிக்காரர்கள் தயிரை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
மிதுனம் ராசிக்காரர்கள் கறும்பு சாறு கொண்டு அபிஷகம் செய்ய வேண்டும்.
கடகம் ராசிக்காரர்கள் சர்க்கரை சேர்த்த பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
சிம்மம் ராசிக்காரர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
கன்னி ராசிக்காரர்கள் வெறும் பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
துலாம் ராசிக்காரர்கள் பசு மாட்டு பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
விருச்சிகம் ராசிக்கார்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
தனுசு ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாராட்ர மந்திரத்தை படித்தால் இன்னல்கள் நீங்கும்.
மகரம் ராசிக்காரர்கள் நல்லெண்ணையால் அபிஷேகம் செய்து வில்வ பழத்தை படைத்து வழிபட வேண்டும்.
கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
மீனம் ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
- எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
- சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ரா¢த்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.
2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.
3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.
4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெரு மானுக்கு மனதில் அபிஷே கம் செய்து சிவனை வழி படலாம்.
5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.
7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.
8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
11. திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.
12. பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் "சங்கர - நாராயண" வடிவம் என்பார்கள்.
பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் "பாண லிங்கம்" இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.
13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடை வார்கள் என்பது ஐதீகம்.
14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப் பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.
15. சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.
16. திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.
17. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
19. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.
20. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
- வைகாசி- சந்தனம்.
- ஆனி -முக்கனிகள்.
சிவ பூஜைக்கான மாதங்களும், மலர்களும்
சித்திரை -பலாசம்,
வைகாசி -புன்னை,
ஆனி-வெள்ளெருக்கு,
ஆடி-அரளி,
ஆவணி- செண்பகம்,
புரட்டாசி -கொன்றை,
ஐப்பசி -தும்பை,
கார்த்திகை -கத்திரி,
மார்கழி-பட்டி,
தை-தாமரை,
மாசி- நீலோத்பலம்,
பங்குனி- மல்லிகை.
மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.
சித்திரை -மரிக்கொழுந்து,
வைகாசி- சந்தனம்,
ஆனி -முக்கனிகள்,
ஆடி-பால்,
ஆவணி- நாட்டுச்சர்க்கரை,
புரட்டாசி -அப்பம்,
ஐப்பசி- அன்னம்,
கார்த்திகை- தீபவரிசை,
மார்கழி- நெய்,
தை- கருப்பஞ்சாறு,
மாசி- நெய்யில் நனைத்த கம்பளம்,
பங்குனி- கெட்டித்தயிர்.
- மலை ஒருபக்கமா சரிய தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார்.
- அப்புறம் ஒரே ஸ்பீடு தான். அமுதம் உண்ணப்போகிறோம் என்கிற சந்தோஷத்தில் தேவர்கள் வேக வேகமாக கடைஞ்சாங்க.
ஒரு காலத்துல தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்துகிட்டே இருந்துச்சு.
தேவர்கள் எல்லாரும் அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பிரம்மனிடம் சென்று வழி கேட்டனர்.
பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து சாப்பிட்டால் இறப்பில்லாத இளமையான வாழ்வை பெறலாம். அப்புறம் அசுரர்களை சமாளிப்பது ரொம்ப ஈஸின்னு பிரம்மா வழி சொன்னார்.
திருமாலிடம் அனுமதி வாங்கிக்கிட்டு மந்திரமலையை மத்தாக்கினாங்க.
சந்திரனை அசைத்தூணாக்கி வாசுகிங்கற பாம்பை கயிறாக அந்த மலையில் கட்டி தேவர்கள் ஒருபக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் இழுக்க தொடங்கினாங்க.
மலை ஒருபக்கமா சரிய தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார்.
அப்புறம் ஒரே ஸ்பீடு தான். அமுதம் உண்ணப்போகிறோம் என்கிற சந்தோஷத்தில் தேவர்கள் வேக வேகமாக கடைஞ்சாங்க.
வாசுகி களைத்து துடித்தது. அதன் உடல் இறுக்கமாக இருந்ததால் உடலில் இருந்த விஷத்தை கக்கியது. அதோடு பாற்கடலில் இருந்தும் நிறைய விஷம் வெளிப்பட்டது.
இரண்டும் சேர்ந்து ஆலகால விஷம் எனும் கொடிய நஞ்சாக மாறிடுச்சு. விஷத்தோட வீரியம் தாங்காம அவர்கள் சிவன் கிட்ட ஓடிப்போய் முறையிட்டாங்க.
நமசிவாய மந்திரம் உச்சரிச்சாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன்.
தேவர்களை காப்பதாக உறுதியளித்தான்.
சுந்தரரை விஷத்தை கொண்டு வரும்படி பணித்தான். சுந்தரர் சென்று அவ்வளவு விஷத்தையும் உருட்டி உருண்டையாக நாவல்கனிபோல் ஆக்கிக்கொண்டு வந்து சிவனிடம் கொடுத்தார்.
தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன்.
அன்னை சக்தி பதறிப்போனாள்.
உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்துவிடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை.
விஷம் அன்னையின் கைபட்டு கழுத்து பகுதியில் அப்படியே நின்றது. ஈசன் திருநீலகண்டன் ஆனார்.
அவரது உடலில் இருக்கும் விஷத்தின் உஷ்ணம் குறைவதற்காக பிரம்மா, திருமால், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், முனிவர்கள், ரிஷிகள், அசுரர்கள் இவர்களுடன் பார்வதி தேவியும் சிவனை நினைத்து ஆறுகால பூஜை செய்து வழிபட்ட தினம் தான் சிவராத்திரி.
அப்படி சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக ஆலகால விஷத்தை அமுது போல் எண்ணி அருந்தியதை நமக்கு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது தான் சிவராத்திரி.
- விநாயர் வழிபட்ட தலம்- திருச்செங்கோடு
- முருகன் வழிபட்ட தலம்- திருமுருகன் பூண்டி
1. வெள்ளை யானை,. சிலந்தி, பாம்பு, முக்தி நிலை பெற்றன. ஸ்ரீ காளகஸ்தி ராகு, கேது கிரகங்கள்.
2. கண்ணப்பர் முக்தி அடைந்தார். ஸ்ரீ காளகஸ்தி.
3.மார்க்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்றார். திருக்கடையூர்.
4. அம்பிகை வழிபட்ட தலம்- காஞ்சீபுரம்,
5. விநாயர் வழிபட்ட தலம்- திருச்செங்கோடு
6. முருகன் வழிபட்ட தலம்- திருமுருகன் பூண்டி
7. திருமால் வழிபட்ட தலம்- திருவீழிமிழலை
8. பிரமன் வழிபட்ட தலம்- சீர்காழி.
9. இந்திரன் வழிபட்ட தலம்- மதுரை
10. யானை வழிபட்ட தலம்- திருவானைக்கா.
11. எறும்பு வழிபட்ட தலம்- திருவெறும்பூர்
12. பார்வதிதேவி மயிலாக வழிபட்ட தலம்- மயிலாப்பூர்.
- சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடை பிடிக்கப்பட்டது.
- ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர்.
சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடை பிடிக்கப்பட்டது.
ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர்.
திருவானைக்கா கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகப் பெருமானையும் ஒரு லிங்கத்தில் முருகப் பெருமானையும் அமைந்திருக்கிறார்கள்.
சிவ மூல மந்திரம்
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.
- சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.
- ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.
சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.
சுத்தமானப பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.
சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.
எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.
சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.
இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.
பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.
தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.
கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.
மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.
திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.
பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.
அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.
அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.
தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.
சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.
ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.
ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.
- சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுஷ்டிக்க கூடியது.
- ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகர முடியாத சிவானந்தத்தை தர வல்லது சிவராத்திரி விரதமாகும்.
மகா சிவராத்திரி தினத்தன்று கோவில்களில் வீதி வலம் வரும் போது சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும், சிவபுராணம் கேட்டும், தேவாரம், திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுஷ்டிக்க கூடியது.
ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகர முடியாத சிவானந்தத்தை தர வல்லது சிவராத்திரி விரதமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்