என் மலர்
நீங்கள் தேடியது "slogan"
- டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என கோஷம்.
- முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் நிறைவு.
சீர்காழி:
சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் சீர்காழி லயன்ஸ் சங்கம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணிக்கு லயன்ஸ் சங்க வட்டாரத்தலைவர் கே.வேல்முருகன் தலைமை வகித்தார். கே.எஸ்.செயலர் சந்துரு, பொருளாளர் எஸ்.ராமராஜ் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் எம்.சுரேஷ் பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கொசுவை ஒழிக்க வேண்டும், டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என கோஷங்கள் இட்டு சென்றனர்.
முக்கியவீதிகளின் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர். துணை முகாம் அலுவலர் ஏ.மணிகண்டன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ச.ஹரிஹரன் கலந்து கொண்டனர். திட்ட அலுவலரும், உதவி தலைமை ஆசிரியருமான எஸ்.முரளிதரன் நன்றி கூறினார்.
- ரூ.1000 நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை.
- விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட த்தில் கடந்த 10-ம் மற்றும் 11ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பல்லாயிரம் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, இரண்டு தாலுகாவுக்கு மட்டும் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நிவாரணம் வழங்க வேண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை. நிவாரணத்தை வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயாகவும் விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 35 ஆயிரம் ரூபாயாகவும் வழங்க வேண்டும்.
என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், டெல்டா விவசா யிகள் பாசனதாரர் சங்கம், வீரசோழன் விவசா யிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் பங்கேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தின் எதிரே கண்டன கோஷங்க ளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் ஊர்வலமாக மனு அளிக்க சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் வைத்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
- கள்ளக்குறிச்சியில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியி டங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட கோரி தமிழக அரசை வற்புறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சர்ச்சில் காரல் மார்க்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட சட்ட செயலாளர் முனியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வில்வபதி வரவேற்றார்.
ஆர்ப்பா ட்டத்தில் ஆசிரியர்க ளுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு எந்த பணியும் வழங்காதே. ஜூலை 1-ல் இருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவி லைப்படி உயர்வை உடனடியாக நிலுவைத் தொகையுடன் வழங்கிடு. ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியி டங்களை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு சான்றிதழ் பெறுவதற்கு தேவையற்ற புதிய, புதிய சிக்கல்களை சேர்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர் உள்ளங்களை புண்ப டுத்துவதை உடனடியா க கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரி க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர் . தொடர்ந்து கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சொத்து வரி, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள தஞ்சை கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் காந்தி தலைமை தாங்கினார்.
மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி ரத்தினசுந்தரம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பாலை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெங்கப்பா அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகள் குறித்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பனர்.
இதில் முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, நிர்வாகிகள் தம்பிதுரை, பிலிப், முத்துமாறன், குமார், மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம், வல்லம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சிங்.ஜெகதீசன், வார்டு செயலாளர் மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர் தெட்சிணமூர்த்தி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஐயப்பன், போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நீலகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் சிங் முருகானந்தம், மாணவரணி முருகேசன், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்.
- கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
வலங்கைமானில் அ.தி.மு.க. சார்பில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜராஜன், வலங்கைமான் ஒன்றிய தலைவர் குமாரமங்கலம் சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சாத்தனூர் இளவரசன், வலங்கைமான் நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாஸ்டர் ஜெயபால், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி தேவராஜன், ஒன்றிய துணை தலைவர் வாசுதேவன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் இளங்கோவன், வர்த்தக அணி துணை செயலாளர் பாலா, ஒன்றிய துணை செயலாளர் மாத்தூர் குருமாணிக்கையா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்.
- கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதலூர்:
பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து பூதலூர் ஒன்றிய திருக்காட்டுப்பள்ளி நகர அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தினசாமி தலைமை தாங்கினார்.
இதில் தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நடுக்காவிரி ராஜா, திருக்காட்டுப்பள்ளி நகர தலைவர் கேசியர்ராஜாங்கம், பூதலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கலியமூர்த்தி, தலைமை பேச்சாளர் அன்பு முருகன், திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், நகர பேரவை செயலாளர் கோவி கார்த்திகேயன், நகர பொருளாளர் செல்வராஜ், பூதலூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் காமராஜ், நகர இளைஞர் பாசறை செயலாளர் பிரபு, ஒன்பத்துவேலி கிருஷ்ணமூர்த்தி, நகர மகளிரணி செயலாளர் நேவிஸ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் அய்யாராசு, ஒன்றிய பொருளாளர் எழிலரசன், பூதலூர் ஒன்றிய துணை செயலாளர் மாரியய்யா மற்றும் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு கூட்டுறவு சங்க முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போதிய வடிகால் வசதி, கழிவுநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
- சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே பள்ளியேரி கிராமம் உள்ளது. இங்கு உள்ள பரிசுத்தம் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் போதிய வடிகால் வசதி, கழிவு நீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தரமான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, சாலை வசதி செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இது குறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை தஞ்சை - பூதலூர் சாலையில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுங்கள். நாங்களும் அதிகாரிகளிடம் பேசுகிறோம் என்றனர்.
இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு கண்டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம்.
- அ.தி.மு.க. கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க சார்பில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
மாவட்ட மகளிரணி செயலாளர் சுதா அன்புச்செல்வன்,தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் சண்முகசுந்தர் அனைவ ரையும் வரவேற்றார்.
மேலும், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேந்தர்,முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், மதிவாணன், லதா ஆசைத்தம்பி, சீதாலட்சுமி, குகநாதன், கார்த்தி, கலைமணி, மின்னல் கொடி, பாலகிருஷ்ணன், பாலதண்டாயுதம், நுணக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன், முருகதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- விவசாயிகள் பட்டை நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கபிஸ்தலம்:
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின் 50-வது நாளான நேற்று முன்தினம், விவசாயிகள் கோவிந்தா! கோவிந்தா ! சத்தமிட்டு பட்டை நாமம் போட்டு நூதன முறையில் முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்விற்க்கு இப்போராட்டக்குழு செயலாளர் நாக.முருகேசன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-
வரும் 22-ம் தேதி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சுவாமிமலையில் நடைபெறவுள்ளது. அதில், சென்னையில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளையும், திரட்டிச் சென்று முற்றுகை போராட்டம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.
நூதன முறையில் நடை பெற்ற கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு.
- திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோஷம்.
தஞ்சாவூர்:
தஞ்சை வருவாய் கோ ட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் என்.வி.கண்ணன், கக்கரை சுகுமாரன், கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அவர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பழைய ,புதிய நிர்வாகங்களை கண்டித்து தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், உடனடியாக தமிழக அரசு தலையிட்டு திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
- ரங்கநாதபுரத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது பாபநாசம் வட்டம் விழுதியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
விழுதியூர் பகுதியில் கடந்த காலங்களில் இரண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட ரெங்கநாதபுரத்தில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த மற்றொரு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் ஒரு வார காலமாக காத்து கிடக்கும் அவலம் உள்ளது. உடனடியாக ரெங்கநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பின்னர் மனுவை அளித்துவிட்டு அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று தரையில் நெல்லை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரங்கநாதபுரத்தில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- சங்கராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மதிய உணவு இடை வேளையில் கோரிக்கை முழக்க போராட்டம் நடை பெற்றது. துணை தலைவர் ராஜா, மகளிர் அணி செயலாளர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசால் அறிவிக்க ப்பட்ட அரசாணை எண் 207-ன் படி இளநிலை வருவாய் ஆய்வா ளராக பணிபுரிந்து வரும் சரவணனு க்கு பதவி உயர்வு வழங்க க்கோரி போராட்டம் நடை பெ ற்றது. இதில் கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.