என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107698"
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், நாகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது நாகூர் வெட்டாறு பாலம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்யும்போது பாண்டி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பனங்குடி சன்னமங்கலம் ஓடை மேடு தெருவை சேர்ந்த ராஜு (வயது 30) அதே பகுதி செவ்வந்தி வீதி தெருவை சேர்ந்த ரஞ்சித் (22) என்பதும் தெரியவந்தது இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்
தொடர்ந்து வாழ ஒக்கூர் பகுதியில் நடத்திய சோதனையில் பாண்டி சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு தெரு ஆனந்தகுமார் (25) அதே பகுதி பெருக்கு தெருவைச் சேர்ந்த சுமன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து 110 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:
நாகை எஸ்.பி. விஜயக்குமார் உத்தரவின் பேரில் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 200 லிட்டர் சாராயம் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து சாராயத்தோடு காரையும் பறிமுதல் செய்து காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் பெரம்பூர் அருகே வாகனதணிக்கை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 120லிட்டர் சாராயம் கடத்திவந்த மாங்கா.சண்முகம்(48) என்பவரை கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பெரேய்லி மாவட்டம் மல்காமாவில் கண்டோண்மென்ட் போலீஸ் நிலையம் உள்ளது.
அந்த பகுதியில் கள்ளச்சாராய நடமாட்டம் அதிகம் உண்டு. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்வது வழக்கமாக இருந்தது.
இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் கேன்களில் வைத்திருந்தனர்.
இது சம்பந்தமான வழக்குகளுக்கு சாட்சியாக தேவைப்படும் என்பதால் அவற்றை போலீஸ் நிலையத்திலேயே வைத்திருந்தார்கள்.
அதுபற்றி போலீஸ் நிலைய பதிவேட்டிலும் விவரங்களை பதிவு செய்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த போலீஸ் நிலையத்துக்கு தலைமை குமாஸ்தாவாக நரேஷ்பால் என்பவர் புதிதாக நியமிக்கப்பட்டார்.
அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் இருப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டார். பதிவேட்டில் 1000 லிட்டர் சாராயம் இருப்பதாக குறிப்பு இருந்தது. எனவே, சாராயம் முழுமையாக இருக்கிறதா? என்று அவர் ஆய்வு செய்தார். ஆனால், சாராய கேன்கள் அனைத்தும் காலியாக இருந்தன. சில கேன்களில் அடியில் ஓட்டைகள் காணப்பட்டன.
அந்த போலீஸ் நிலையத்தில் எலிகள் நடமாட்டம் உண்டு. அந்த எலிகள் 1000 லிட்டர் சாராயத்தையும் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
உண்மையிலேயே எலிகள் தான் குடித்ததா? அல்லது போலீசாரே அவற்றை குடித்து விட்டு நாடகம் ஆடுகிறார்களா? என்று தெரியவில்லை.
இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன்சிங் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் நிலைய பகுதியில் நடமாடிய அனைத்து எலிகளையும் பிடித்து விட்டோம். இனி, எலிகள் உள்ளே வராது என்றும் சூப்பிரண்டு கூறினார். #Rats
திருவாரூர்:
திருவாரூர் அருகே நாகக்குடி ஊராட்சிக்குட்பட்ட பன்ணை விளாகத்தில் ரவி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாக்கெட் சாராயத்தை மறைமுகமாக விற்பனை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாக்கெட் சாராயத்தை குடித்து அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் சாராய விற்பனையை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை பாக்கெட் சாராயம் விற்பனை செய்த ரவி, பாரதிமோகன், நெடுமாறன் ஆகிய 3 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், அங்கிருந்த சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை வீசினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சாராய வியாபாரிகள் 3 பேரையும் கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்’ என்று கூறினர். இதையடுத்து போலீசார், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடப்பட்டது. கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரியாங்குப்பம்:
பாகூர் அருகே ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது50). புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தும் தொழில் செய்து வந்த இவர் ஏற்கனவே 2 முறை காரில் சாராயம் கடத்தி கடலூர் கலால் பிரிவு போலீஸ் பிரபுவை கைது செய்து இருந்தனர்.
இந்த நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிரபு மீண்டும் புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்துவதாக கடலூர் கலால் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கலால் போலீசார் ரகசியமாக பிரபுவை கண்காணித்து வந்தனர்.
இன்றுகாலை பிரபு ஒரு காரில் அபிஷேகப்பாக்கத்தில் இருந்து டி.என்.பாளையம் வழியாக சாராயம் கடத்தி வந்த போது கடலூர் கலால் போலீசார் காரை நிறுத்தி பிரபுவை கைது செய்தனர். காரில் கடத்தி வரப்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
நாகூர் பகுதிகளில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழங்கநல்லூர் பஸ்நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பெரியார் தெருவை சேர்ந்த சுப்புவேல் (60) என்பதும், 110 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தை விற்பனைக்காக அவர் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சுப்புவேலை கைது செய்தனர். இதேபோல் சின்ன கன்னமங்களம் தெற்கு தெருவை சேர்ந்த மூர்த்தி மனைவி தமிழரசி(38) தனது வீட்டின் பின்புறம் புதுச்சேரி மாநில சாராயம் விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சாராயம் விற்ற கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் உப்புக்குழி பகுதியை சேர்ந்த கண்ணதாசன்(48), கீழ ஆவராணி மெயின் ரோட்டை சேர்ந்த வள்ளி(53), பெருங்கடம்பனூர் மில்லடி தெருவை சேர்ந்த தங்கபாண்டியன் (35) ஆகியோரை கீழ்வேளூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி நேதாஜிநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் திருப்பதி (வயது 24). சாராயம் விற்பனை செய்ததாக வெங்கடேசன் மீது வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்ட திருப்பதி கடந்தாண்டு குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் இருந்து திருப்பதி வெளியே வந்தார். அதன்பின்னரும் அவர் சாராயம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையிலான போலீசார் நேதாஜி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பெரிய கேனுடன் வந்த திருப்பதியை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த கேனில் சாராயம் இருந்தது. போலீசார் விசாரணையில், மோட்டார்சைக்கிளில் சாராயத்தை திருப்பதி கடத்தி வந்து நேதாஜி நகரில் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து திருப்பதியை போலீசார், கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி தொடர்ந்து சாராய விற்பனை செய்து வந்ததால், அவரை 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன், பரிந்துரை செய்தார். அதன்பேரில் திருப்பதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.
அதையடுத்து, அதற்கான ஆணையின் நகல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் திருப்பதியிடம் நேற்று போலீசார் வழங்கினர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த கெம்புராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பெண் சாராய வியாபாரிகள் ரூபாவதி, தனலட்சுமி ஆகியோரும் பிடிபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்