என் மலர்
நீங்கள் தேடியது "பயணிகள் உயிர் தப்பினர்"
மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு பிரபல தனியார் நிறுவன ஆம்னி சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 58) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் பின் பகுதியில் உள்ள ஏர்கண்டிஷன் எந்திரத்தில் புகை வந்தது. இதை பின்னால் வந்த ஒரு வாகன டிரைவர் கண்டுபிடித்து ஆம்னி பஸ்சின் டிரைவர் மாதேஸ்வரனிடம் கூறினார். உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரமாக நிறுத்திவிட்டார். ஆஞ்சநேயர் கோவில் குழாயில் உள்ள தண்ணீரை எடுத்து வந்து அதில் டிரைவர் ஊற்றினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 36 பேரையும் கீழே இறக்கி மாற்று பஸ்களில் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார்.

பஸ் எரிந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் எரிய காரணம் என்ன? என்று பஸ்சின் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் நடந்தபோது பயணிகள் அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகளை எழுப்பி விட்டதால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினார்கள். மேலும் அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்திவிட்டதால் மேலும் வாகனங்கள் எரிவதும் தடுக்கப்பட்டது.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு இதே மலைப்பாதையில் தேங்காய் எண்ணெய் லாரிக்கு டிரைவர் தீவைத்தார். அந்த லாரி பின்னோக்கி வந்தபோது இன்னொரு கியாஸ் டேங்கர் லாரி, 2 கார்கள் எரிந்து சேதமாகின. நல்லவேளை தனியார் ஆம்னி பஸ் எரிந்தபோது அங்கிருந்த பொதுமக்களின் உதவியால் பெரிய அளவில் சேதம் அடைவது தடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தினால் அந்த பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. #Omnibus #Fireaccident
வாலாஜா:
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை சொகுசு பஸ் புறப்பட்டது. டிரைவர் உமேஷ் (வயது 46). என்பவர் ஓட்டிவந்தார். கண்டக்டராக மோகன் (57). என்பவர் உள்பட 37 பயணிகள் இருந்தனர்.
ராணிப்பேட்டை அருகே உள்ள காரை என்ற இடத்தில் பஸ் சென்ற போது லாரி ஒன்று பஸ்சை முந்தி சென்றது. இதனால் பஸ் டிரைவர் உமேஷ் பிரேக் போட்டுள்ளார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கண்டக்டர் மோகன் காயமடைந்தார். பயணிகள் 37 பேர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
காயமடைந்த மோகனை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பயணிகளை மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது விமானம் சற்று விலகி ஓட ஆரம்பித்தது. அருகில் இருந்த கட்டிடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதியது. இதனால் விமானம் குலுங்கியது.
அதிர்ஷ்டவசமாக விமானி அந்த விமானத்தை உடனடியாக நிறுத்தி விட்டார். இதனால் விமானத்தில் இருந்து 179 பயணிகளும் உயிர் தப்பினார்கள்.
விமானம் சற்று தடம் மாறி சென்றதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. உடனடியாக அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர வாசல் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
பிறகு பயணிகள் அனைவரும் ஸ்டாக்டோம் விமான நிலையத்தில் அமர வைக்கப்பட்டனர். அந்த விமானத்தை சுற்றி தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டன.
விமானம் கட்டிடத்தில் மோதியதற்கு காரணம் என்ன என்பது பற்றி சுவீடன் நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மணி நேரத்திற்கு பிறகு டெல்லி பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். #AirIndiaFlight #StockholmAirport
மொடக்குறிச்சி:
ஈரோட்டில் இருந்து வெள்ள கோவிலுக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர், மேட்டுபாளையத்தில் ஒரு வளைவில் திரும்பியது. அப்போது எதிரே எல்லக் கடையில் இருந்து ஒரு கார் வந்தது. பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதியது. பெரும் விபத்தை தவிர்க்க பஸ் டிரைவர் பஸ்சை ஒடித்து ஓட்டிய போது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ரோட்டோரத்தில் இறங்கி அதில் இருந்த பள்ளத்தில் இறங்கி சாய்ந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக, பஸ் கவிழவில்லை.
இதனால் பஸ் பயனிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் முன்பகுதியில் இருந்த 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் காரின் முன் பகுதி நொருங்கியது. பஸ்சின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மொடக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலாஜா:
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) பகுதியில் இருந்து சென்னைக்கு இன்று காலை அம்மாநில அரசு பஸ் 40 பயணிகளுடன்சென்று கொண்டிருந்தது.
சித்தூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு வளைவில் பஸ் திரும்பியது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் பயங்கரமாக மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் உடைந்து நொறுங்கியது. மின்வயர்கள் பஸ் கூரை மீது கொத்தாக விழுந்தது.பஸ்சுக்குள் இருந்த 40 பயணிகளும் ‘அபயக்குரல்’ எழுப்பினர். பஸ்சை விட்டு உடனடியாக கீழே இறங்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் மாற்று பஸ்களில் தங்களது ஊர்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வேட்டவலம்:
திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் அரசு விரைவு பஸ் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் கடை வீதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் டீசல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.
புகை அதிகளவு வந்ததை உடனடியாக கவனித்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். அடுத்த நொடி பஸ் நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.
ஏதே விபரீதம் ஏற்படும் என அச்சமடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சை விட்டு சற்று தூரம் தள்ளி ஓடி நின்று பீதியில் நின்றனர்.
தகவலறிந்ததும், வேட்டவலம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பஸ் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது.
30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மாற்று பஸ்சில் பயணிகள் தங்களது பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.