என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 112468"
- தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது.
- பச்சை நிறமாக காட்சியளித்த கடல் நீரை கண்ட மக்கள் அச்சத்துடன் கடலுக்கு அருகே செல்லாமல் இருந்து உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பொதுமக்கள் விடுமுறையை கொண்டாடுவதற்காக கடற்கரை பகுதிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் மக்கள் புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவுக்கு சென்றனர். அப்போது அந்த பகுதி கடல் முழுவதும் பச்சை நிறமாக காட்சி அளித்துள்ளது. அதே நேரத்தில் அலையின் வேகமும் அதிகமாக இருந்துள்ளது. இதனை பார்த்த மக்கள் அச்சத்துடன் கடலுக்கு அருகே செல்லாமல் இருந்து உள்ளனர்.
தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும் போது, கடலில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றங்களாலோ அல்லது பாசியாலோ இதுபோன்று ஏற்படலாம் என்று கூறினர்.
பாங்காக்:
அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானே தெப்பெட். இவரும் பிட்காயின் முதலீட்டாளர் ஆவார்.
கோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் இதன் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீசில் புகார் செய்தனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வீடு கடற்கரையில் இருந்து 13 நாட்டிகல் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் இது உள்ளது. எனவே தாய்லாந்தின் இறையான்மையை மீறவில்லை. என சாட் எல்வார்டோஸ் கி தெரிவித்தார்.
எனது காதலி சுப்ரானே எங்காவது சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினார். அவருக்காக வித்தியாசமாக கடலுக்குள் வீடு கட்டினேன் என்றும் அவர் கூறினார். தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. 17-ந் தேதி காணும் பொங்கலையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் பயணிகளின் கூட்டம் குவியும் முக்கியமாக கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, பட்டிபுலம், தேவநேரி, மாமல்லபுரம் கடற்கரையில் குவியும் பயணிகள் கடலில் குளிப்பார்கள்.
கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் ராட்சத அலை, புதைமணல்களில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே 700 மீட்டர் தூரத்திற்கு சவுக்கு மர தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்பாராஜு, இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவி, ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று முதல் ஈடுபட உள்ளனர்.
பொன்னேரி:
எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எம்.டி.கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது.
நேற்று முன்தினம் அதிகாலை கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கிய போது இணைப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 2.5 டன் கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கொட்டியது.
இதனால் கப்பலை சுற்றிலும், கடலில் எண்ணெய் படலமாக மிதந்தது. உடனடியாக அது பரவாமல் இருக்க மிதவை தடுப்புகள் போடப்பட்டன. துறைமுக அதிகாரிகளும் கடலோர காவல் படையினரும் விரைந்து வந்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை தீவிரப்படுத்தினர்.
ஸ்டிரிம்மர் எனப்படும் உறிஞ்சும் கருவி மூலம் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு பேரல்களில் சேகரிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக இந்த பணி வேகமாக நடந்து வந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டு உள்ளது. குறைந்த அளவில் எண்ணெய் திட்டுக்கள் மிதக்கின்றன. அதனையும் ஊழியர்கள் படகில் சென்று அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக துறைமுக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. ஆங்காங்கே மிதக்கும் எஞ்சிய கச்சா எண்ணெய் கருவிகள் மூலம் ஊழியர்கள் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.
கப்பலில் மொத்தம் 16, 500 டன் கச்சா எண்ணெய் இருந்தது. இதில் 5000 டன் இறக்கப்பட்டுள்ளது.
மீதியுள்ள கச்சா எண்ணெயை இறக்குவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். எண்ணெய் இறக்குவதற்கு பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்த பின்னர் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்.
விசாகபட்டினத்திலிருந்து சிறப்பு கப்பல் வந்தடைந்துள்ளது. கடலோர பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் பேரலில் அடைக்கபட்டுள்ளன. இவை சுமார் 2 டன் அளவுக்கு குறைவாகத்தான் உள்ளது. அதை சுற்றுசூழல் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #EnnorePort #CoralStars #OilSpill
நாகப்பட்டினம்:
வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. 1-ந் தேதி முதல் 4-ந் தேதி முதல் மழை பெய்தது.
நேற்று ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்தது. நாகை. வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.
இதற்கிடையே நாளை (6-ந் தேதி) முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மேலும் கரையோரங்களில் தங்களது விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேபோல் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று 5 -வது நாளாக கடலுக்கு செல்ல வில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்