என் மலர்
நீங்கள் தேடியது "தெப்ப திருவிழா"
- திருக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- நாதசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று விளக்கொளிப் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் தெப்பத்திருவிழாவையொட்டி கோவிலில் இருந்து உற்சவர் விளக்கொளிப் பெருமாள் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீதேவி, பூதேவியருடனும் மற்றும் மரகதவல்லித்தாயாருடனும் அருகிலுள்ள வேதாந்த தேசிகர் சந்நிதியில் காட்சியளித்தார்.
அங்கு தேசிகருக்கு மரியாதை உற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் வேதாந்த தேசிகருடன் பெருமாளும், தாயாரும் தெப்பத்திற்கு எழுந்தருளி கேடயத்தில் திருக்குளத்தை வலம் வந்தனர். பின்னர் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அமர்ந்து 7 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தெப்பத்திருவிழாவையொட்டி திருக்கோவிலும், திருக்குளமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைளும் நடைபெற்றன. நாதசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. விழாவையொட்டி, காஞ்சீபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் திருக்குளத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, நிர்வாக அறங்காவலர் என்.தியாகராஜன், அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வெள்ளைச்சாமி, ஸ்ரீதரன், மற்றும் காஞ்சீபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.
- இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவத்தில் பவனி வருகிறார்.
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் நிறை வாக நடைபெறும் தெப் பல் உற்சவத்தின் 2ம் நாளான நேற்று அய்யங்கு ளத்தில் பராசக்தி அம் மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அதன் படி, தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்தார்.
அதைத்தொடர்ந்து, 2ம் நாளான நேற்று இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் பவனி வந்து பத்தர்களுக்கு அருள்பாலித் தார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.
முன்னதாக, இரவு 8 மணி அளவில், அண்ணாமலையார் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
தெப்பத்தை முன்னிட்டு, அய்யங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை. தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவத்தில் பவனி வருகிறார்.
- 29-ந்தேதி உலகப்பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நடக்கிறது.
- விழா நாட்களில் பெருமாள், தாயார் வீதி உலா நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் முக்கோடி தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை பெருமாள், தாயார் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனை செய்தனர். அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றம் நடைபெற்றது. அப்போது கொடிமரம் மற்றும் பெருமாள், தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வருகிற 29-ந்தேதி உலகப்பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கூடுதல் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தெப்போற்சவம் 5-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
- மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. தெப்போற்சவத்தின் முதல் நாளான ஜனவரி 1-ந்தேதி விநாயகர், சந்திரசேகரர், 2-ந்தேதி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், 3-ந்தேதி சோமஸ்கந்தமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
4-ந்தேதி காமாட்சியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5-ந்தேதி சண்டிகேஸ்வரர் மற்றும் சந்திரசேகரர் தெப்பத்தில் எழுந்தருளி 9 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேற்கண்ட 5 நாட்களில் மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது. தெப்போற்சவத்தையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சாரியார் திட்டத்தின் கீழ் தினமும் பக்தி கீர்த்தனைகள் பாடப்படுகிறது.
மேலும் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன மகோற்சவத்தையொட்டி ஜனவரி 6-ந்தேதி காலை 5.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
- தெப்போற்சவம் 5 நாட்கள் நடக்கிறது.
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 5 நாள் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி முதல் நாளான நேற்று இரவு உற்சவர்களான விநாயகர், சந்திரசேகரர் கபிலத்தீர்த்த குளத்தில் மிதந்த தெப்பத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கபிலத்தீர்த்த கரைகளில் அமர்ந்திருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தெப்போற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தெப்பத்திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- பிப்ரவரி 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழாவிற்காக மாரியம்மன் தெப்பக்குளத்தில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், துணை கமிஷனர் அருணாச்சலம் உள்பட கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிப்ரவரி 4-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தெப்பத் திருவிழா கொடியேற்றம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் நடை பெறுகிறது.
முன்னதாக, கொடிக்கம்ப மண்டபம் முன்பு சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் தனித்தனியே எழுந்தருளு கின்றனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காம தேனு, சிம்மாசனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்பட வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். பிப்ரவரி 3-ந் தேதி 11-ம் நாள் விழாவையொட்டி, சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பா டாகி கீழ மாசி வீதி வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.
அங்கு, கதிரறுப்பு திருவிழா நடைபெறும். பிப்ரவரி 4-ந் தேதி சுவாமி யும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். அன்று காலையில் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் 2 முறை தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வருகின்றனர். தொடர்ந்து, அன்று மாலை சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தரு ளுகின்றனர்.
பின்னர், மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். அதன்பிறகு முக்தீசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. பின்னர், அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சியம்மன் கோவிலில் எழுந்தருளுகின்றனர்.
விழாவையொட்டி, பிப்ரவரி 4- ந் தேதி அதிகாலை சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும்.
மேற்கண்ட நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 31-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக தை கார்த்திகை அன்று தெப்பம் தள்ளுதல், தேரோட்டம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளுவார். அங்கு காலை, இரவில் தெப்ப மிதவையில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தினை 3 முறை சுற்றி வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 30-ந்தேதி தேரோட்டமும், சிகர நிகழ்ச்சியாக 31-ந்தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டின் ஓரத்தில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. இருப்பினும் தெப்ப மிதவை வலம் வருவதற்கு வசதியாக கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் தெப்பக்குளம் மேல்புறத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டாரை இயக்கி அதன்மூலம் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
- 30-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும்.
- 31-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது.
தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பைபுல், மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவிழாவில் தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னம், சேஷ, தங்க மயில், பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வருகிற 30-ந்தேதி தை கார்த்திகை நாளில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும்.பின்னர் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்.
முக்கிய நிகழ்ச்சியான வருகிற 31-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை தெப்பத்திருவிழா விமரிசை யாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று (24-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் கொடிமரம் முன்பு சிம்ம வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.
அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் ஓத அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டினர். தொடர்ந்து தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு சிம்ம வாகனத்தில் அம்மனும், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகின்றனர். 4-ந் தேதி வரை நடக்கும் 12 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் அன்னம், பூதம், காமதேனு, கைலாச பர்வதம், தங்கக்குதிரை, ரிஷப வாகனம், யாழி, நந்திகேசுவரர் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
விழாவில் 8ம் நாளான வருகிற 31-ந்தேதி காலை 9 மணிக்கு தங்க பல்லக்குகளில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் சித்திரை வீதி, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம், மகபூப்பாளையம் வழியாக வலைவீசி தெப்பக்குளத்தில் எழுந்தருளுகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தை தெப்ப உற்சவம் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணியளவில் வெள்ளி அவுதா தொட்டில் அம்மனும், சிம்ம வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளுகின்றனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகின்றனர். அதன் பின் தண்ணீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் தெப்ப உற்வசம் நடக்கிறது.
தெப்பத்தை சுவாமி-அம்பாள் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இங்கு மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்பின் இரவு சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புவார்கள்.
- தைத்தெப்பம் 3-ந்தேதி நடைபெறுகிறது.
- 5-ந்தேதி ரிஷபாரூட காட்சியுடன் தை தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இந்த கோவிலில் தை தெப்பத்திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
பின்னர் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து கோவிலை அடைந்தனர். தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவர். 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு சுவாமி வெள்ளிமஞ்சத்தில், அம்மன் கிளிவாகனத்தில், 26-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்தில், 27-ந்தேதி இரவு சுவாமி கைலாசபர்வதம் வாகனத்தில், அம்மன் அன்னபட்சி வாகனத்தில், 28-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில், 29-ந் தேதி இரவு சுவாமி யானை வாகனத்தில், அம்மன் பல்லக்கில், 30-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி மஞ்சத்தில், 31-ந் தேதி இரவு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில், அம்மன் பல்லக்கில் 4ம் பிராகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.
தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்பம் 3- ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மேல் மாலை 6.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர். 5-ந்தேதி காலை கேடயத்தில் சுவாமி அம்மன் புறப்பாடு, மாலை ரிஷபாரூட காட்சியுடன் தை தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
- 4-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர்பெறும் நிகழ்ச்சி நடக்கிறது.
- 2-ந்தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும், குடும்பம் செழிக்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூச திருவிழா ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, காலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். மேலும் மாரியம்மன் படம் வரையப்பட்ட துணியாலான கொடியை தங்க கொடிமரத்தில் கோவில் அர்ச்சகர்கள் காலை 7.40 மணிக்கு ஏற்றினர்.
அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இரவில் அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவில் பூத வாகனம், மரஅன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மரயானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8-ம் நாளன்று (2-ந்தேதி) அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9-ம் நாள் திருவிழா அன்று (3-ந்தேதி) இரவு 8 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
10-ம் நாளான 4-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வழிநடையாக ஸ்ரீரங்கம் வட திருகாவிரிக்கு வழிநடை உபயம் கண்டருள செல்கின்றார். மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர்பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 5-ந்தேதி அன்று அதிகாலை மகா அபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
காலை முதல் அன்று இரவு வரை அம்மன் வழி நடை உபயம் கண்டருளி மண்டகப்படி கண்டருளுகிறார். இரவு 11 மணிக்கு கோவில் வந்தடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- மாலை 6 மணியளவில் மின்னொளியில் தெப்பக்குளத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளுகிறார்.
- தெப்பத்திருவிழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலுக்குள்ளே உள்திருவிழாவாக தெப்பத்திருவிழா நடந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9-வது நாளான நேற்று (திங்கட்கிழமை) தை கார்த்திகை தேரோட்டம் நடந்தது.
இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தெப்பத்திருவிழா நடக்கிறது. இதனையொட்டி ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் சுற்றுச்சுவர் முழுவதுமாக வெள்ளை மற்றும் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது.
மேலும் 15 அடி உயரம் கொண்ட தெப்பக்குளத்தில் 6½ அடி உயரத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தில் சுவாமி உலா வருவதற்கு ஏற்ப 24 அடி நீளமும், 24 அடி அகலமும், 28 அடி உயரமும் கொண்ட தெப்ப மிதவை தேர் தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது.
திருவிழாவையொட்டி இன்று காலை 11 மணியளவில் தெப்பக்குளத்தில் தயாராகும் தெப்ப மிதவையில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல மீண்டும் மாலை 6 மணியளவில் மின்னொளியில் தெப்பக்குளத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் தெப்ப மிதவை தேரில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தெப்பத்திருவிழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.