என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித் ஷா"

    • LoC-யில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கதல்.
    • விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

    இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லை அருகில் உள்ள மாநிலங்களில் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைக்கலாம் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் எல்லை மற்றும் விமான நிலையங்கள் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிஸ்எஃப், சிஐஎஸ்ஃப் டைரக்டர் ஜெனரல்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து உளவுத்துறை இயக்குனருடன் ஆலோசனை நடத்தினார்.

    எல்லை பாதுகாப்பு மற்றும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்திய ராணுவத்தை எண்ணி பெருமை அடைகிறோம்.
    • பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்தி உள்ள ஆபரேஷன் சிந்தூரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத்தை எண்ணி பெருமை அடைவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர்.

    இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான எந்தநொரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேரில் இருந்து அழிப்பதற்கு பாரதம் உறுதியாக உள்ளது. 

    • இன்று காஷ்மீரிகள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் உணர வேண்டும்.
    • இன்று அவர்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி காஷ்மீர் மக்கள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி அமித் ஷாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறுகையில் "காஷ்மீரிகள் ரத்தக்களரிக்கு ஆதரவாக இல்லை என்பதைக் காட்டியுள்ளனர். மேலும் அவர்கள் நாட்டின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பயங்கரவாதச் செயலைச் செய்தவர்கள் மீது ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்துறை அமைச்சருக்கு என்னுடைய வேண்டுகோள்.

    இருப்பினும், (பஹல்காம்) தாக்குதலுக்குப் பிறகு தனது ரத்தத்தைக் கொடுத்து ஒரு சுற்றுலாப் பயணியைத் தோளில் சுமந்து மருத்துவமனைக்குச் சென்ற காஷ்மீரியை விட்டுவிடுங்கள்.

    22ஆம் தேதி தாக்குதலுக்கு முன் அங்குள்ள (பைசாரன்) மக்கள் வாழ்வதற்கு வருவாய் ஈட்டி வந்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்கு காலையிலேயே அழைத்துச் செல்லப்பட்டனர். நாள் முழுவதும் உணவு வழங்கப்படாமல் மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். என்னஇது?.

    இன்று காஷ்மீரிகள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் உணர வேண்டும். இன்று அவர்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். உங்கள் காயங்களையும் குணப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் மீது புதிய காயங்களை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்" என்றார்.

    • இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை
    • சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை இந்தியை திணிப்பதாக கூறி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், "இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    "மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

    இது தொடர்பான செய்தி துணுக்கை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்கள்.

    இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். 'வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்" என்கிறோம். "இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை' என்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். 

    • பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.
    • பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம்.

    ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொது வெளியில் பேசியுள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் கூறியதாவது:-

    பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு துணையாக இருக்கிறது.

    பயங்கரவாதிகள் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள். அனைத்து பயங்கரவாதிகளையும் எச்சரிக்கிறோம்.

    பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம்.

    பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மணிப்பூர் மக்கள் ஜனாதிபதி ஆட்சியை வரவேற்றனர்.
    • ஜனாதிபதி ஆட்சி 3 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வெளிப்படையான நடவடிக்கை ஏதும் இல்லை.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தி- குகி பிரிவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து வன்முறை நடைபெற்று வந்த நிலையில் முதல்வராக இருந்த பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இருந்தபோதிலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. இந்த நிலையில் மணிப்பூரில் அமைதி திரும்ப ஜனநாயக அரசை அமையுங்கள் என அமித் ஷாவுக்கு 13 பாஜக எம்.எல்.ஏ.-க்கள், 3 என்பிபி, 3 நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மணிப்பூர் மக்கள் ஜனாதிபதி ஆட்சியை வரவேற்றனர். எனினும், ஜனாதிபதி ஆட்சி 3 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வெளிப்படையான நடவடிக்கை ஏதும் இல்லை.

    மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடிக்கும் என்ற உறுதியான அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. ஏராளமான அமைப்புகள் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரான வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜனநாயக அரசை அமைக்க வலியுறுத்தியுள்னர்.

    ஒரு ஜனநாயக அரசு அமைப்பதற்கு உரிமை கோராததற்காகவும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான பொறுப்பை நிர்ணயித்ததற்காகவும் ஆளும் எம்.எம்.ஏ.-க்களை குற்றம்சாட்டி பேரணிகள் நடத்தப்படுகின்றன.

    ஜனநாயக அரசு அமைப்பதன் மூலமாக மட்டுமே மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப முடியும் என உணர்கிறோம். மணிப்பூர் மக்களின் நலன் கருதி விரைவில் ஜனநாயக ஆட்சி அமைய உள்துறை அமைச்சர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு.
    • ஏப்ரல் 27ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர்களுடன் அமித் ஷா பேசியுள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் ஆண்கள் ஆவார்கள்.

    இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. முக்கியமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதியுள்ளது. வாகா எல்லை மூடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாநில அரசுகளும், அந்தந்த மாநிலத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதல்வர்களுக்கும் போன் செய்துள்ளார்.

    அப்போது காலக்கெடுவுக்குள் பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதை உறுதி செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

    அப்போது முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியேற்றப்படுவார் எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விசாவை தடைசெய்தது. சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அத்துடன் இன்று சிந்து நதி நீரை நிறுத்தியது.

    பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், மத்திய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது.

    • உளவுத் துறையின் தோல்வி என உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    • பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

    இந்த தாக்குதல் உளவுத் துறையின் தோல்வி என உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வைத்துக்கொண்டு, இனி பாஜக ஆட்சியமைக்க முடியாது.

    கடந்த கால அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் போன்று, இவர்களுக்கும் ஓய்வளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு- காஷ்மீருக்கான எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற கதை போதும்.
    • நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷா நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்த வந்த போதிலும், பாதுகாப்பு குறைபாடு, உளவுத்துறை தோல்வி இதற்கு முக்கிய காரணம் என விமர்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஸ் கூறும்போது "நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷா நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். எது மிகப்பெரிய மற்றும் மன்னிக்க முடியாத பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வி ஆகும். அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மவுமா மொய்த்ரி "ஜம்மு- காஷ்மீருக்கான எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற கதை போதும். போலி கதைகளை பரப்புவதை நிறுத்திவிட்டு இனிமேல் அப்பாவி மக்கள் உயிரிழக்காதபடி உறுதியான நடவடிக்கை எடுங்கள்" என தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க மாநில கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாஸ் கூறுகையில் "பயங்கரவாதிகள் ஏன் பஹல்காமை அடைய அனுமதிக்கப்பட்டனர்? இந்த அர்த்தமற்ற படுகொலையைத் தடுக்க படைகள் ஏன் தலையிடவில்லை?. இது மீண்டும் புல்வாமா. அமித் ஷா ராஜினாமா செய்வதன் மூலம் தேசத்திற்கு ஒரு நன்மை செய்வார்" எனத் தெரிவித்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இறந்த உடல்கள் மீது தனது மலிவான அரசியலை செய்ய திரிணாமுல் காங்கிரஸ்க்கு போதுமான நேரம் இருக்கும். ஆனால் இது சரியான நேரம் இல்லை. குற்றவாளிகளை பிடிக்க மத்திய அரசும் பாதுகாப்பு அமைப்புகளும் எல்லாவற்றையும் செய்கின்றன. பயங்கரவாதிகள் தப்பிவிட முடியாது" என்றார்.

    • பஹல்காம் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
    • அமித் ஷா சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் உளவுத்துறையின் தோல்விதான் தாக்குதலுக்கு காரணம் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். அவர் பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு இன்று காலை அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.

    இன்று அவரது இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதமர் மோடி வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

    • பஹல்காம் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர்.
    • தாக்குதலில் பலியானர்வர்கள் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.

    ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தாக்குதலில் பலியானர்வர்கள் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு ராணுவ ஹேலிகாப்டரில் சென்ற அவர் நேரில் ஆய்வு செய்தார். மேலும் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ×