என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியங்கா காந்தி"

    • பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
    • உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் இது குறித்து வயநாடு காங்கிரஸ் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது ராணுவத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    நமது துணிச்சலான வீரர்கள் நமது சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கிறார்கள். கடவுள் அவர்களைப் பாதுகாத்து, பொறுமையுடனும் துணிச்சலுடனும் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு அபரிமிதமான தைரியத்தைத் தருவாராக. ஜெய் ஹிந்த் என்று தெரிவித்துள்ளார். 

    • பிரியங்கா காந்தி அவருடைய தொகுதியான வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • கோழிக்கோடு மாவட்டத்தில் பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.

    பிரியங்கா காந்தி கேரள மாநிலத்தில் உள்ள அவருடைய தொகுதியான வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    நேற்று மாலை கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஈங்காப்புலா சாலையில் பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் 2 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குடும்பத்தினர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டதும் பிரியங்கா காந்தி தனது வாகனத்தை நிறுத்தினார்.

    அவர் காரை விட்டு இறங்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு தன்னுடைய பாதுகாவலர்களிடம் தெரிவித்தார். மேலும் டாக்டர்களை வரவழைத்து முதல் உதவி அளிக்க ஏற்பாடு செய்தார்.

    அவருடைய பாதுகாப்பு குழுவுடன் வந்த ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.பின்னர் விபத்து குறித்து அவர் விசாரித்து விட்டு சென்றார்.

    பிரியங்கா காந்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய வீடியோவை கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பையை பாராமன்றத்துக்கு கொண்டு வந்தார்.
    • 17 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தனது தாய்க்கு ரூ.4 லட்சம் கொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, பாலஸ்தீனம் ஆதரவு மற்றும் வங்காளதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு ஆதரவு வாசகம் எழுதப்பட்ட பையை எடுத்து வந்து கவனத்தை ஈர்த்தார்.

    இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டு பாராளுமன்றக் குழுவில் உள்ள பாஜக பெண் எம்.பி.யான பன்சூரி ஸ்வராஜ், நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பையை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தார்.

    அதில் கொள்ளை என்று எழுதப்பட்டு இருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி. பன்சூரி ஸ்வராஜ்க்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்த கொள்ளையை நீங்கள் சுமக்கிறீர்களா?அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது.

    எதிர்க்கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து குறிவைக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்கிறார்கள். 17 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தனது தாய்க்கு ரூ.4 லட்சம் கொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டார்.

    இது என்ன மாதிரியான விசாரணை? விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டல் பிரசாரத்தை பாஜக திட்டமிட்டு செய்து வருகிறது.விசாரணை செய்யப்பட்டு பின்னர் பாஜகவில் சேருபவர்கள் திடீரென்று அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் மறைந்துவிடும் என்றார்.

    • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள், நிலங்கள், வாழ்வாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து விட்டார்கள்.
    • வயநாடு சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்போம்.

    கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை மற்றும் சூரமலைப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பாலான பகுதிகள் முற்றிலும் அழிந்துபோன அளவிற்கு சேதம் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயத்துடன் மீட்கப்பட்டனர். 32 மாயமாகியுள்ளனர்.

    இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய உத்தர விடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு தொடர்பாக மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பேரிடர் தொடர்பான ஆர்பிஐ-யின் வழிக்காட்டுதலின்படி வங்கி கடனை மறுசீரமைக்க மட்டுமே முடியும் எனத் தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் இந்த முடிவு நிலச்சரிவால் பாதிக்கப்பட் மக்களுக்கான துரோகம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள், நிலங்கள், வாழ்வாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து விட்டார்கள். இதுவரை, மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. மாறாக, வெறுமன கடனுக்கான மறுசீரமைப்பை மட்டுமே பெற்றுள்ளனர். இது நிவாரணம் அல்ல. இது துரோகம்.

    இந்த அக்கறையின்மையை வன்மையாகக் கண்டித்து, வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்போம். அவர்களின் வலி புறக்கணிக்கப்படாது. நீதி கிடைக்கும் வரை எல்லா இடங்களிலும் நாங்கள் அவர்களின் குரல்களை எழுப்புவோம்" என்றார்.

    • கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
    • அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    கேரளாவில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை மறித்து நின்ற யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி இரவு 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

    மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில் பிரியங்கா காந்தியின் வாகனத்துக்கு முன் சென்ற பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் அதனை மறித்து கேரள யூடியூபரான அனீஷ் ஆபிரஹாம் தனது காரை நிறுத்தியுள்ளார்.

    அவரைக் காவல்துறையினர் அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வாகனத்தை மறித்தது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்படி வாகனம் ஓட்டியது, காவல்துறையினரிடம் அத்துமீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் அனீஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

    மேலும் அவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் அவர் ஜாமீனில் வெளியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    • பாராளுமன்றத்தில் ஜனநாயக செயல்முறை திறம்பட செயல்படுவதை மத்திய அரசு தடுக்கிறது.
    • அரசாங்கமே பாராளுமன்ற நடவடிக்கையை சீர்கலைக்கின்றன.

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கிடைப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் என்னைக்கூட பேச அனுமதிப்பதில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி ஏற்கனவே மத்திய அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும், இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் சில செசன்களில் நான் பார்த்த வரைக்கும், எதிர்க்கட்சிகள் சில கருத்துகள் குறித்து போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்றால் அதை தடுக்கும் வகையில் அல்லது எதிர்க்கட்சி தலைவரை பேசவிடக்கூடாது என ஏதாவது ஒரு வகையில் விவாதத்தை தவிர்க்க பார்க்கிறார்கள்.

    பாராளுமன்றத்தில் ஜனநாயக செயல்முறை திறம்பட செயல்படுவதை மத்திய அரசு தடுக்கிறது. இதற்கு எம்.பி.க்கள் காரணமாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் பாராளுமன்ற நடவடிக்கையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றன, ஆனால் இந்த அரசாங்கத்தின் கீழ் நாம் காணும் செயல்முறை இதுதான். அரசாங்கமே பாராளுமன்ற நடவடிக்கையை சீர்கலைக்கின்றன. இது பார்ப்பதற்கு அனைவருக்கம் மிகவும் புதியதாக இருக்கலாம்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தக் கோரி போராட்டம் நடந்தது.
    • இதில் கேரள காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க அவர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரியும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், சசி தரூர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பிற கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மில்லியன் கணக்கான குடும்பங்களை வாழ்வாதாரமின்றி விட்டுச் சென்றுள்ளது. வறுமை மற்றும் துன்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியில் உடனடியாக கவனம் செலுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊதியம் இல்லாததால் வாழ்க்கையை நடத்த போராடும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக விடுவித்தல், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க ஊதியத்தை அதிகரித்தல், வேலை நாட்களை 150 நாளாக அதிகரித்தல் ஆகியவற்றை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

    • 1997-ம் ஆண்டு சோனியா காந்தி, கணவர் ராஜீவின் வழித்தடத்தில் அரசியலில் குதித்தார்.
    • 2017-ம் ஆண்டு வரையில் சோனியா தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார்.

    புதுடெல்லி :

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டபோது படுகொலை செய்யப்பட்டார்.

    அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு சோனியா காந்தி, கணவர் ராஜீவின் வழித்தடத்தில் அரசியலில் குதித்தார். மறு ஆண்டிலேயே கட்சியின் தலைவரானார். 2017-ம் ஆண்டு வரையில் அவர்தான் தலைவராக இருந்தார். அதன்பின்னர் அவர் மகன் ராகுல் காந்தி, கட்சிக்கு தலைவரானார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப்பொறுப்பேற்று அவர் பதவி விலகினார். அதன்பின்னர் மீண்டும் சோனியாவே கட்சியின் இடைக்கால தலைவரானார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா என அந்தக் குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. முன்னாள் மத்திய மந்திரிகள் மல்லிகார்ஜூன கார்கேயும், சசி தரூரும் நேருக்கு நேர் மோதினர். இதில் மல்லிகார்ஜூன கார்கே வென்றார். நேற்று அவர் முறைப்படி கட்சியின் தலைவர் பதவியை ஏற்றார். அவரிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சோனியா ஒப்படைத்தார்.

    அப்போது சோனியாவுக்கு நினைவுப்பரிசாக ராஜீவ் காந்தியின் 'பிரேம்' செய்யப்பட்ட புகைப்படத்தை மல்லிகார்ஜூன கார்கே வழங்கினார். அந்தப் படத்தைப் பெற்று சோனியா உயர்த்திப்பிடித்தபோது, கட்சித்தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இதையொட்டி இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்தில் பிரியங்கா ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், " உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன் அம்மா. உலகம் என்ன சொன்னாலும் சரி, என்ன நினைத்தாலும் சரி, எனக்குத் தெரியும், நீங்கள் அன்புக்காகத்தான் எல்லாவற்றையும் செய்தீர்கள்" என உருகி உள்ளார்.

    அத்துடன் அவர் தனது தாய் சோனியா, தந்தை ராஜீவ் இருவருடைய படத்தையும் வெளியிட்டுள்ளார்.

    சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றதையொட்டி அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான், " இந்த மகத்தான நாட்டின் மீது அவர் (சோனியா) கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பில் இருந்து அவர் தனது அரசியல் உத்வேகத்தைப் பெறுகிறார். மக்களும் அதே அன்பையும், நம்பிக்கையையும் அவருக்கு திரும்ப அளித்தனர்" என உருக்கமாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • காங்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்
    • இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும் என பேச்சு

    காங்ரா:

    இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்ராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.

    இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

    இமாச்சல பிரதேசத்தை ஆளும் பாஜகவை கடுமையாக சாடிய அவர், பாஜக ஆட்சியின் கீழ் மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது என்றும, 63,000 அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

    தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சுட்டிக்காட்டிய பிரியங்கா, அதேபோன்று இமாச்சல பிரதேசத்திலும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என உறுதி அளித்தார்.

    • ராகுல் காந்தி நாளை மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.
    • உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை.

    இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

    தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என தற்போது குஜராத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    நேற்றுடன் குஜராத் பயணம் முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தி நாளை மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி நாளை மத்திய பிரதேசத்தில் நுழையும்போது பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி வத்ரா இணைந்துக் கொள்வார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், " பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துகொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்பார்" என்றார்.

    • மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.

    இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

    தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என ராகுல் காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

    கடைசியாக குஜராத்தில் நடைபயணம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.

    இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்கு வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.

    அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.

    இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் யாத்திரையில் இணைந்துள்ளார்.

    • அனைத்து தலைநகரங்களிலும் மகளிர் பேரணியை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
    • இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும் என அக்கட்சி தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

    தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். பிறகு அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் எங்களது கட்சி சார்பில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்தப்படும்.

    இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடையும்போது, அதன் தொடர்ச்சியாக, பிரியங்கா காந்தியின் மகளிர் பேரணி தொடங்கி நடைபெறும் என தெரிவித்தார்.

    ×