search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோகித்சர்மா"

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் ரோகித்சர்மா புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. #INDvAUS #RohitSharma #JaspritBumrah
    பெங்களூர்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். அதே நேரத்தில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா, தொடக்க வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

    பும்ரா கடந்த ஆட்டத்தில் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 50-வது விக்கெட்டை தொட்டு 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

    பெங்களூர் போட்டியில் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினால் 20 ஓவர் சர்வதேச ஆட்டத்தில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அஸ்வின் 46 ஆட்டத்தில் 52 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பும்ரா 41 ஆட்டத்தில் 51 விக்கெட் கைப்பற்றி அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.

    ரோகித் சர்மா 94 ஆட்டத்தில் 102 சிக்சர்கள் அடித்து சர்வதேச அளவில் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), மார்டின் குப்தில் (நியூசிலாந்து) தலா 103 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் ரோகித்சர்மா 2 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 5 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இன்றைய போட்டியிலாவது அவர் சிறப்பாக விளையாடி 2 சிக்சர் அடித்து புதிய சாதனை நிகழ்த்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvAUS #RohitSharma #JaspritBumrah
    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது, உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று ரோகித்சர்மா கூறியுள்ளார்.#AsiaCup2018 #INDvBAN

    துபாய்

    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டித் தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இருந்தது. இந்தப் போட்டித் தொடரில் ஆதிக்கம் செலுத்தியதற்கு நல்ல வெகுமதி கிடைத்தது. வீரர்களின் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றோம். அனைத்து வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் கோப்பையை வென்று இருக்க முடியாது. எல்லா பெருமையும் அவர்களை சேரும்.


    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கள் (நடுவரிசை வீரர்) நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடியது முக்கியமானது. அவர்கள் ஆட்டத்தை முடித்த விதம் அருமையானது.

    அதோடு வங்காளதேச அணியையும் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். முதல் 10 ஓவரில் கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள். பந்து பழசாகிவிட்டால் எல்லாம் மாறும் என்று தெரியும். ரசிகர்களும் திரளாக வந்து தங்களது சிறப்பான ஆதரவை அளித்தார்கள். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×