search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 126608"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
    • அஜாக்கிரதையாக இருந்ததால் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிவளங்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தக்கலைப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நெல்லையிலிருந்து தக்கலை வழியாக அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த வாகனத்தை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் வந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இப்புகார் தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வாகன சோதனையின் போது போலீசார் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனத்தை கவனிக்காமல் விட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு பணியில் இருந்த 2 போலீசாரை உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment
    சென்னை:

    * சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * சென்னை மாநாகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி ஆணையாராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜியாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சுகாதாரத்துறை செயலாளராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    * ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    * புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவம்,ஹோமியோபதி இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி, கோவை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * திருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு குடிநீர்,வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் திருவாரூர் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #TNGovernment
    திருவனந்தபுரம் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சோதனை செய்ததாக பெண் போலீஸ் இடமாற்றம் செய்யப்பட்டார். #ChaitraTeresaJohn
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வீச்சு நடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருவனந்தபுரம் சட்டம்- ஒழுங்கு டெபுடி போலீஸ் கமி‌ஷனராக பெண் அதிகாரி சைத்திரா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இவர், மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மீது கல்வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    இதில், போலீஸ் நிலையம் மீது கல்வீசியவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர் என்றும், அவர்கள் திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மறைந்திருப்பதாகவும், பெண் போலீஸ் அதிகாரி சைத்திராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா, நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்.

    அங்கு, மறைந்திருந்த குற்றவாளிகளை போலீசார் துணையுடன் பிடிக்க முயன்றார். இத்தகவல் அறிந்து ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பெண் போலீஸ் அதிகாரி கம்யூனிஸ்டு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். முதல்-மந்திரி அலுவலகத்திலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

    இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா உடனடியாக சட்டம்-ஒழுங்கு டெபுடி போலீஸ் கமி‌ஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அவர், பெண்கள் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கம்யூனிஸ்டு அலுவலகத்தில் சோதனைக்கு சென்றதாலேயே பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா இடமாற்றம் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். #ChaitraTeresaJohn
    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வீரசோழனில் பணியாற்றிய திருக்கண்ணன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்திற்கும், வன்னியம்பட்டியில் பணியாற்றிய கார்த்திகேயன் வீரசோழனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    நத்தம்பட்டியில் பணியாற்றிய சந்தோஷ் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சுழி சப்-இன்ஸ்பெக்டர் அசோக், விருதுநகர் மேற்கு நிலையத்திற்கும், வெம்பக்கோட்டை அந்தோணி செல்வராஜ் சூலக்கரைக்கும், ராஜபாளையம் வடக்கு நிலைய சப்- இன்ஸ்பெக்டர் சீனிராஜ் வெம்பக்கோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    ராஜபாளையம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் அம்மாபட்டிக்கும், அருப்புக்கோட்டை டவுன் செந்தில்வேலன், கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் பஜார் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வித்யாலட்சுமி சைபர் கிரைம் பிரிவுக்கும், நெடுஞ்சாலை ரோந்துப்பணி சப்- இன்ஸ்பெக்டர் ராம்குமார் மனித உரிமை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் பிறப்பித்துள்ளார்.
    திருப்பூரில் லஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து கமி‌ஷனர் உத்தரவிட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர பகுதிகளில் மிக முக்கிய போலீஸ் நிலையங்களாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் இந்த போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் குடும்ப பிரச்சினை, அடிதடி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸ் நிலையங்களை நாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருப்பூர் பகுதியை சேர்ந்த அக்பர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்றுள்ளார்.

    வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்யாமலேயே இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் பணம் கேட்டு அலைக்கழிப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் மீது பாதிக்கப்பட்ட அக்பர், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஊரக போலீஸ் நிலையத்திற்கு பணிமாறுதலில் சென்றார்.

    இதுபோல தொடர்ச்சியாக அவர் மீது புகார் எழுந்துள்ளன. இது குறித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் விசாரணை நடத்தினார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவியை தர்மபுரி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    இது போன்று ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமி‌ஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #tamilnews
    தமிழகத்தில் 5 சப்-கலெக்டர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #TNGovernment
    சென்னை:

    தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, தி.நகர் மண்டல குடிமைப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் சி.நயினார் பிள்ளை, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியராகவும், தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இரா.செழியன், சேலம் வருவாய் கோட்டாட்சியராகவும், நெல்லை, தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் (நில எடுப்பு) முன்னாள் தனித்துணை ஆட்சியர் சீ.மஹேஸ்வரன், சேலம் மாவட்டம், சங்ககிரி, வருவாய் கோட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல, சென்னை பெருநகர மாநகராட்சி வடக்கு மண்டல நிர்வாக துணை ஆணையர் அ.லலிதா, சேலம் மாவட்டம், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியராகவும், திருச்சி கலால் உதவி ஆணையர் சி.ராஜ்குமார், காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNGovernment
    திருச்சி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகரில் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த சுப்பிரமணியன் தில்லை நகர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், கோட்டை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தில்லைநகர் குற்றப்பிரிவுக்கும், மாநகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவுக்கும், அரியமங்கலம் சட்டம் ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகைய்யன் எடமலைப்பட்டிபுதூர் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் எடமலைப்பட்டி புதூர், ஸ்ரீரங்கம், தில்லை நகர், கோட்டை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் செயல்முறை பயிற்சி முடித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 7 பேர் மாநகருக்குள் உள்ள வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளார்.

    கோவை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை உக்கடம் சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் சரவணம்பட்டி சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், செல்வபுரம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விக்னேஷ்வரன் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    பெரியகடை வீதி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகாசலம் செல்வபுரம் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், நீலகிரி மாவட்ட இன்ஸ்பெக்டர் ராஜவேல் உக்கடம் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், நெல்லை இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா பெரியகடை வீதி குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #IASOfficers #Transfer
    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், சர்க்கரை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் அவர் செயல்படுவார்.

    நில நிர்வாக இணை கமிஷனர் ஜெ.விஜயராணி, வேளாண்மை கூடுதல் இயக்குனராக மாற்றப் பட்டார்.

    தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் கே.கற்பகம், நில நிர்வாக இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் பிங்கி ஜோவெல், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    வணிக வரிகள், அதிக வரி செலுத்துவோர் பிரிவு கூடுதல் கமிஷனர் எம்.பாலாஜி, பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக (டெல்டா மாவட்ட பாசனம்) நியமிக்கப்பட்டார்.

    நில நிர்வாக இணை கமிஷனர் ஜெ.மேகநாத ரெட்டி, வணிக வரிகள், அதிக வரி செலுத்துவோர் பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டி.ஜெகனாதன், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் (வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகம்) இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    சமூக பாதுகாப்புத் திட்டங்கள் (வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகம்) கமிஷனர் அதுல் ஆனந்த், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

    வேளாண்மை கூடுதல் இயக்குனர் குமாரவேல் பாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) நியமிக்கப்பட்டார்.

    பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இயக்குனர் என்.வெங்கடாசலம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைமை செயல் அலுவலர் எம்.மதிவாணன், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #IASOfficers #Transfer
    தமிழ்நாடு முழுவதும் 22 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். #TNPolice
    சென்னை:

    சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. விசுவநாத் ஜெயன் தரமணி சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தரமணி சரக உதவி கமி‌ஷனர் சுப்பராயன் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் மாதவரம் போக்குவரத்து குற்ற புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    தலைமையிடத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் பரங்கிமலை சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாவட்ட பெண்கள் குற்றப்புலனாய்வு பிரிவின் டி.எஸ்.பி. மகேந்திரன் மதுராந்தகம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    தர்மபுரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சுப்பையா சத்தியமங்கலம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    காஞ்சீபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. கண்ணன் ராயபுரம் சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்ட நில மோசடி விசாரணை பிரிவு டி.எஸ்.பி. இளங்கோவன் நாங்குநேரி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். #TNPolice
    சி.பி.ஐ. சோதனை எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #TrichyAirport #GoldSmuggling
    திருச்சி:

    திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் சிலர், சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து கடந்த மாதம் திருச்சி விமான நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சிங்கப்பூர் தனியார் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் முழுவதையும் சோதனை நடத்தினர். சில பயணிகளை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



    விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் தங்கம் மற்றும் பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்வதற்கும், தங்கம் கடத்தலுக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இதில் தொடர்புடைய திருச்சி விமான நிலைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, கண்காணிப் பாளர்கள் கலுகாசல மூர்த்தி, ராமகிருஷ்ணன், இன்ஸ் பெக்டர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், ஊழியர் எட்வர்டு ஆகிய 6 பேரும், பயணிகள் 13 பேரும் சிக்கினர். அவர்கள் 19 பேர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

    கைதான அனைவரும் மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகளே உடந்தையாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் சி.பி.ஐ. சோதனை எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி திருச்சி சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 39 பேர், விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 41 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருச்சி தவிர வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார்.

    மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் அந்தந்த இடங்களில் நாளை 12-ந் தேதிக்குள் பணியில் சேருமாறு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த் யாதவ், யதுவேந்தர்சிங் ஆகிய 5 பேரும், கார்கோ பிரிவில் நரேந்திரகுமார், ரவிகேஷ் குமார் கேசன் ஆகியோரும் புதிதாக பொறுப்பேற்க உள்ளனர். #TrichyAirport #GoldSmuggling
    ஈரோடு அருகே வாகன சோதனையின் போது போலீஸ் அடித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த பெரிய அக்கரகாரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அருண் குமார் (வயது 18).அருண்குமார் ஈரோட்டில் உள்ள ஜவுளி கடைகளில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    அருண்குமார் கடந்த 5-ந் தேதி மாலை கனி ராவுத்தர் குளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அருண்குமார் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் சென்று விட்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து அருண்குமாரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அன்று இரவு அவரது வீட்டுக்கு கருங்கல்பாளையம் போலீசார் ஒருவர் சென்று விசாரணைக்கு வருமாறு அழைத்தார்.

    அதன்பேரில் அருண்குமார் தனது பெற்றோருடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் அருண்குமாரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையில் இருந்த அருண்குமார் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று அருண்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு அருண் குமாரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அருண்குமாரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பிரப்ரோடு வழியாக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு நடந்து சென்று எஸ்.பி.சக்தி கணேசிடம் மனு கொடுத்தனர்.

    எஸ்.பி.சக்தி கணேசன் அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.இதனை அடுத்து அருண்குமார் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஈரோடு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது.-

    அருண்குமார் உறவினர்கள் என்னை சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் இன்னும் ஆயுதப்படைக்கு மாற்றப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×