search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை"

    சீர்காழியில் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி தென்பாதி சங்கர் நகரை சேர்ந்தவர் லெட்சுமிகாந்தன் மகன் ரமேஷ்பாபு(46) அ.தி.மு.க. பிரமுகர். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் காரில் அமர்ந்திருந்தபோது மர்மகும்பலால் நாட்டுவெடிகுண்டுகள் வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி புதுத்துறை கிராமம், தென்பாதி தெருவைச் சேர்ந்த பார்த்திபன்(32) உள்பட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்திபன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து பார்த்திபன் சீர்காழி பகுதியில் உள்ள மணல் குவாரி நடத்தும் உரிமையாளர்கள், ஒப்பந்த காரர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுத்துறை பார்த்திபன் பேசுவதாக கூறி பல லட்சம் உடனடியாக தரவேண்டும். இல்லையென்றால் ரமேஷ் பாபுவை கொன்றதுபோல் படுகொலை செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் தான் அனுப்பும் நபர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்ப வேண்டும் எனவும் பார்த்திபன் கூறி வந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக சீர்காழி நகர் பகுதியில் உள்ள பல்வேறு நபர்களிடம் பார்த்திபனுக்கு ஆதரவாக மர்மநபர்கள் பணம் கேட்டு சென்றுள்ளனர். இதனால் சீர்காழியை சேர்ந்த பல தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் போனை எடுப்பதற்கே அச்சம் அடைந்து வந்தனர்.

    இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சில பிரமுகர்கள் நாகை எஸ்.பி. விஜயக்குமாரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்அடிப்படையில் நாகை எஸ்.பி உத்தரவின்பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்இன்ஸ்பெக்டர் ராஜா,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அகோரமூர்த்தி, இளங்கோவன், அருள்குமார் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரனையில் சீர்காழியை அடுத்த திருவாலி மெயின் ரோட்டைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் அன்புமாயவன்(26), அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் செல்வபருதி(23) ஆகிய இருவரும் தொழிலதிபர்களிடம் நேரில் சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அன்புமாயவன், செல்வபருதி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். பார்த்திபன் மீது நாகை மாவட்டம், சேலம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுமி மூழ்கடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா (வயது 32). இவர்களது மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4½). பிரபாகரன் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.

    எனவே சஜிதா பிரபாகரன் வேலை பார்த்த சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை 7 மணி முதல் தனது இளைய மகள் ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என சஜிதா கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் எம்.கைகாட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் வேலை பார்க்கும் பங்களா ஆகிய பகுதிகளில் சிறுமியை தேடினர். அப்போது சிறுமி பங்களா அருகில் உள்ள 8 அடி ஆழமுள்ள தொட்டியில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து குன்னூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தொட்டியில் இருந்து சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் தொட்டியின் மூடி இரும்பால் செய்யப்பட்டது. மூடியை சிறுமி திறக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த படுகொலை சம்பவத்தில் சிறுமியின் தாய் சஜிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் குன்னூர் போலீசார் நேற்று இரவு முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போடி அருகே மணல் திருட்டை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஆற்றங்கரை பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் தினசரி ரோந்து மேற்கொண்டு மணல் திருடும் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுத்தாலும் மணல் கடத்தலை தடுக்க முடிவதில்லை.

    கொட்டக்குடி ஆறு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது அனுமதியின்றி 2 டிராக்டர்களில் மணல் அள்ளி வந்ததை கண்டறிந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி டிராக்டரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் மணல் திருட்டு குறித்து ஆய்வுக்கு சென்ற தாசில்தார் ஆர்த்தியை ஒரு கும்பல் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து 6 மாட்டு வண்டிகளில் மணல் திருடி வந்ததை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிமாறன். இவர் சம்பவத்தன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் மணிமாறனை தகாத வார்த்தைகளால் திட்டி லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கண்டமனூர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அல்லிநகரம் பாண்டிக்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (49) என்பது தெரிய வந்தது.

    குடிபோதையில் அதிக வேகத்தில் லாரியை ஓட்டியதும், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    மதுரை அருகே போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை கே.புதூர் உலகநாதன் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). நேற்று இரவு ஆத்திக்குளம் பஸ் நிறுத்தம் அருகே இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த போக்கு வரத்து போலீஸ்காரர் கார்த்திக், தடுத்து நிறுத்தினார். அவர் ராஜ்குமார் மது அருந்தி உள்ளாரா? என்பதை அறிய அதற்கான கருவி மூலம் பரிசோதனை நடத்த முயன்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜ்குமார், போலீஸ்காரர் கார்த்திக்கை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ராஜ்-குமாரை கைது செய்தனர்.

    குழந்தை கடத்தல் பீதி நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது, அசாமிலும் 2 சுற்றுலா பயணிகளை கிராம மக்கள் அடித்து கொன்றுள்ளனர். #childkidnappingpanic

    கவுகாத்தி:

    குழந்தை கடத்தல் பீதி நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் அப்பாவிகள் பலர் அடித்து கொல்லப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவை தொடர்ந்து இப்பீதி வட இந்தியாவில் பரவியது.

    தற்போது வடகிழக்கு மாகாணங்களையும் ஆக்கிரமித்துள்ளது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல் நடமாடுவதாக ‘வாட்ஸ் அப்’பில் பீதி பரவியது.

    இந்த நிலையில் கவுகாத்தியை சேர்ந்த நிலோத் பால்தாஸ், அபிஜீத் நாத் ஆகிய 2 பேர் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தனர்.

    இவர்கள் இருவரும் மும்பை மற்றும் கோவாவில் பணிபுரிந்தனர். நிலோத்பால் ஆடியோ என்ஜினீயராகவும், அபிஜீத்நாத் டிஜிட்டல் நிபுணராகவும் பணிபுரிந்தனர்.

    இவர்கள் இருவரும் கர்பி மலையில் உள்ள பஞ்சூரி சாரிகான் என்ற கிராமத்துக்கு சென்று இருந்தனர். அங்கு காரை நிறுத்தி வழி கேட்டனர். அவர்களை குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என கிராம மக்கள் சந்தேகப்பட்டனர். எனவே அவர்களது காரை சுற்றி வளைத்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரையும் காரில் இருந்து வெளியேற்றினர். அவர்களை ரோட்டில் ‘தரதர’ வென இழுத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள் நாங்கள் குழந்தை கடத்தும் கும்பல் அல்ல. அசாமை சேர்ந்தவர்கள்தான் என மன்றாடினர்.

    இருந்தும் விடாமல் சுமார் 250 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து தாக்கியது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கும்பலிடம் இருந்து 2 பேரையும் மீட்டனர். அவர்களில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றொருவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த தகவலை கர்பி ஆஸ்லாஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.வி. சிவபிரசாத் தெரிவித்தார்.

    இத்தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அசாம் முதல் மந்திரி சர்பானந்தா கோனோவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் சமூக வலை தளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். #childkidnappingpanic 

    ×