என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபருக்கு கத்திகுத்து"
மதுரை:
மதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவரின் மகள் அகிலேஸ்வரி என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு அகிலேஸ்வரி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பதற்காக கண்ணன், மாமனார் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனார் கண்ணன், இவரது மனைவி செல்வி (39), உறவினர்கள் பஞ்சு (50), சத்யா (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தேனி:
பெரியகுளம் அருகில் உள்ள டி.கல்லுப்பட்டி நேருஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது45). இவர் வீடு கட்டும் பணிக்காக ஜல்லி கற்களை குவித்து வைத்திருந்தார். இவரது வீட்டிற்கு எதிரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் எதற்காக இங்கே ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளாய்? என கேட்டார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முனியாண்டி கத்தியால் ராஜாமணியை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த ராஜாமணி கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது குறித்து அவரது மகன் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அடுத்த நீடாமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பரப்பனமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சூர்யா. அதே ஊரை சேர்ந்தவர் முருகையன். கடந்த 3-ந்தேதி அப்பகுதி மாரியம்மன்கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சூர்யா நடனமாடி உள்ளார். இதனை முருகையன் தடுத்ததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செந்தில்குமார் வீடு வழியாக முருகையன் சென்றபோது அவரை வழி மறித்த செந்தில்குமார் மற்றும் அவரது மகன் சூர்யா ஆகிய இருவரும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாசன் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள தந்தை-மகனை தேடி வருகிறார்.