search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி"

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து பேசிய பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், குடும்ப கட்சியான காங்கிரசில் பிரியங்காவுக்கு பதவி கொடுத்தது பெரிய விவகாரமல்ல என தெரிவித்துள்ளார். #Congress #PriyankaGandhi #RavishankarPradsad
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.

    கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமலும், கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார். தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார். 

    இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் இன்று வெளியிட்டார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று தெரிவித்தார்.

    தற்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியில் முதல் முறையாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.



    பிரியங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதை அறிந்த ரேபரேலி காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து பேசிய பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், குடும்ப கட்சியான காங்கிரசில் பிரியங்காவுக்கு பதவி கொடுத்தது பெரிய விவகாரமல்ல என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கியது குடும்ப அரசியலின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் பல பாஜக தலைவர்கள் பிரியங்காவுக்கு பதவி வழங்கியது குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.#Congress #PriyankaGandhi #RavishankarPradsad
    ×