என் மலர்
நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி"
- கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.9 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடிதான், இதுவரை கிடைத்த அதிகபட்ச வசூலாக இருந்தது.
புதுடெல்லி:
கடந்த மார்ச் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ஆகும். இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.9 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடிதான், இதுவரை கிடைத்த அதிகபட்ச வசூலாக இருந்தது. அதையடுத்து, 2-வது அதிகபட்ச வசூல் இதுவே ஆகும்.
- மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது.
- லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தலைமறைவாகிவிட்டார்.
மும்பை:
பால்கரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் துணை கமிஷனராக பணிபுரிந்து வருபவர் தாத்யாசேப் தேரே. இவர் நபர் ஒருவரிடம் வணிக வரியை குறைத்து கணக்குகாட்ட தனக்கு ரூ.15 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஜி.எஸ்.டி. அதிகாரியை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார்தாரரிடம் பணம் கொடுக்க ஒப்புக்கொள்வதாக கூறும்படி கூறியுள்ளனர். அதன்படி புகார்தாரரும் ஜி.எஸ்.டி. அதிகாரி தாத்யாசாகேப் தேரேவை தொடர்புகொண்டு பணத்தை கொடுப்பதாக தெரிவித்தார்.
இதன்பேரில் மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி புகார்தாரர் பணத்துடன் ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு ஜி.எஸ்.டி. அதிகாரிக்கு பதிலாக அவரது உதவியாளரும், தனியார் வரி ஆலோசகருமான ஏக்நாத் பெட்னேகர் வந்து அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டார். இதை அங்கிருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏக்நாத் பெட்னேகரை சுற்றிவளைத்து கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து அறிந்ததும் லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தாத்யாசாகேப் தேரே தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
- ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- 2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்றது.
இந்தியாவில், பா.ஜ.க.வை சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் ஜி.எஸ்.டி.க்கான விதை தூவப்பட்டது. ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு, அப்போது மேற்கு வங்காள நிதி மந்திரியாக இருந்த அசிம் தாஸ்குப்தா தலைமையில் 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு விஜய் கேல்கர் கமிட்டி, வரி சீர்திருத்தத்தை பரிந்துரைத்ததோடு, ஜி.எஸ்.டி.யின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறியது.
மறைமுக வரிக்கு மாற்றாக ஜி.எஸ்.டி.யை கொண்டு வரவும் பரிந்துரை செய்தது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் 2006-07 பட்ஜெட்டில், 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, 2008-ம் ஆண்டு ஜி.எஸ்.டி.யை செயல்படுத்த மாநில நிதி மந்திரிகளை உள்ளடக்கிய அதிகாரமளிக்கும் வகையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்பதற்காக ஜி.எஸ்.டி. விவாத அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியின் அடிப்படை கட்டமைப்புகளை அப்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. ஜி.எஸ்.டி.க்கு அடித்தளம் இடும் வகையில் வணிக வரிகளை கணினி மயமாக்கும் திட்டம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
எனினும், ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கான தேதி 2011-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி என மாற்றியமைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கு 115-வது சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிதி மந்திரி மற்றும் மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் ஜி.எஸ்.டி. தொடர்பான விவகாரங்களை பேசி முடித்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற நிலைக்குழு ஜி.எஸ்.டி. மசோதாவில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த, இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். கீழவையில் இருந்த ஜி.எஸ்.டி. மசோதாவும் காலாவதியானது.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 122-வது சட்ட திருத்த மசோதாவாக பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதாவை மீண்டும் கொண்டு வந்தது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, பாராளுமன்ற நிலைக்குழு மீண்டும் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வலியுறுத்தியது. 2015-ம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற கீழவை ஒப்புதல் கொடுத்ததோடு, மேலவைக்கும் அனுப்பப்பட்டது.
2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மேலவையில் இந்த மசோதா பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து கீழவை மற்றும் மேலவையின் உறுப்பினர்கள் அடங்கிய இணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மேலவையில் ஜி.எஸ்.டி. மசோதா பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் மாதம் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது. அதே மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. அதன் முதல் கூட்டமும் நடந்தது.
நவம்பர் மாதம் 4 வரி விகிதங்கள் அதாவது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என அமல்படுத்தப்படும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது. மேலும் வரி செலுத்துபவர்கள் பதிவு செய்வதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பிப்ரவரி மாதம் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடுகட்டுவதற்கான வரைவினை ஜி.எஸ்.டி. கவுன்சில் இறுதி செய்தது. மார்ச் மாதம் மத்திய மந்திரி சபை ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மே மாதம், சுமார் 1,200-க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் 5 முதல் 28 சதவீத வரி விகித வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.
ஜூன் மாதம், ஜம்மு-காஷ்மீரை தவிர்த்து அனைத்து மாநிலங்களும் மாநில ஜி.எஸ்.டி. சட்டத்தை இயற்றின. அதே மாதம் 30-ந்தேதி (ஜூன்) நள்ளிரவு முதல், ஜி.எஸ்.டி. வரி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஜூலை 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றியது.
- ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
- நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை.
கொல்கத்தா :
மேற்கு வங்காள மாநிலத்தில் பழங்குடியினர் நிறைந்த ஜார்கிராம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். கூட்டத்தில், அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
மம்தா பானர்ஜி பேசியதாவது:-
ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. எங்களுக்குரிய பங்கை மத்திய அரசு தந்து விடும் என்று நினைத்தோம். ஆனால், எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பங்கை மத்திய அரசு வழங்கவில்லை.
மாநிலங்களுக்கு பங்கு வழங்க முடியாவிட்டால், ஜி.எஸ்.டி. முறையையே மத்திய அரசு கைவிட்டு விடலாம். இது ஒன்றும் பா.ஜனதா பணம் அல்ல. மக்கள் பணம். அதை ஜி.எஸ்.டி. மூலமாக மத்திய அரசு பறித்துக்கொள்கிறது.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டேன். அதன்பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. அவர் காலை தொட்டு நான் பணம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். பாக்கி தொகையை கொடுங்கள் அல்லது பதவி விலகுங்கள்.
மேலும், மாநிலங்கள் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வசூலை செலுத்துவதை நிறுத்த வேண்டி இருக்கும்.
100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியையும் மத்திய அரசு விடுவிப்பது இல்லை. நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை. நிதி பெறுவதற்கான மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மம்தா பானர்ஜி, அப்பகுதி மக்களுடன் உரையாடினார். மத்திய அரசு நிதி அளிக்காததால், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அளிக்கும் 'ஜல் ஜீவன்' திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார்.
அங்குள்ள சாலையோர கடை ஒன்றில், மம்தா பானர்ஜி வடை சுட்டு கொடுத்தார்.
- உத்தர பிரதேசத்திற்கு ரூ.1202 கோடி, தலைநகர் டெல்லிக்கு ரூ.1200 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது.
- இந்த நிதியாண்டில் இதுவரை 115662 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு ரூ.17000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு ரூ.1188 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்திற்கு அதிகபட்சமாக 2081 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு ரூ.1915 கோடி, தலைநகர் டெல்லிக்கு ரூ.1200 கோடி, உத்தர பிரதேசத்திற்கு ரூ.1202 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது.
'2022-2023ம் நிதியாண்டில் இதுவரை 115662 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இந்த ஆண்டு மார்ச் இறுதி வரை வசூலிக்கப்படும் மொத்த செஸ் தொகையையும் முன்கூட்டியே விடுவித்துள்ளது. அக்டோபர் மாதம் வரையிலான மொத்த செஸ் வசூல் ரூ.72,147 கோடியாக இருந்தபோதிலும், மீதமுள்ள ரூ.43,515 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவிக்கிறது' என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் 1.45 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதம் ரூ.1,45,867 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் 1,45,867 கோடி.
இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,681 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ. 32,651 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.77,103 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.38,635 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,433 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.817 கோடி உட்பட) ஆகும்' என கூறப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
- 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.
- தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது தீப்பெட்டி மீதான சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.
தீப்பெட்டி செய்யப் பயன்படுத்தப்படும் அட்டை விலை கிலோவுக்கு ரூ.40-லிருந்து ரூ.90 ஆக உயர்ந்து விட்டது.
தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் சிவப்பு பாஸ்பரஸ் ஒரு கிலோ விலை ரூ.400-ல் இருந்து ரூ.1000 ஆக அதிகரித்து விட்டது.
90 சதவீதம் பெண்கள் உள்பட 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
- 2022 டிசம்பரில் ஜி.எஸ்.டி. ரூ.1,49,507 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.
- தொடர்ந்து 10-வது முறையாக மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
புதுடெல்லி:
2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1,49,507 லட்சம் கோடி வசூலாகி உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மத்திய ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.26 ஆயிரத்து 711 கோடி. மாநில ஜி.எஸ்.டி வருவாயானது ரூ.33 ஆயிரத்து 357 கோடி. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வருவாயானது ரூ.78 ஆயிரத்து 434 கோடி. இதில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி ரூ. 40 ஆயிரத்து 263 கோடி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்பட்டது உள்ளிட்ட செஸ் வரி ரூ.11 ஆயிரத்து 5 கோடியும் அடங்கும்.
தொடர்ந்து, 10-வது முறையாக நாட்டின் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.4 லட்சத்தை கடந்துள்ளது என்பது குற்ப்பிடத்தக்கது.
- ஒருவர் தனது பெயரில் இந்த மோசடி செய்துள்ளதாகவும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளியை ஜி.எஸ்.டி. துறை கண்டுபிடிக்க வேண்டும்.
- பல நிறுவனங்கள் மற்றும் சில நபர்கள் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள தெருக்களில் துணிகளை விற்பனை செய்பவர் இஜாஸ் அகமது. 40 வயதான இவர் நாள் ஒன்றுக்கு ரூ.500 சம்பாதித்துள்ளார். இந்த நிலையில் ரூ.366 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டு கூறப்பட்டு வழக்கு பதிவாகி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வேறு ஒருவர் தனது பெயரில் இந்த மோசடி செய்துள்ளதாகவும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளியை ஜி.எஸ்.டி. துறை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜி.எஸ்.டி. அதிகாரி கூறும் போது, ரூ.300 கோடிக்கு மேல் பில்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய மோசடியாக தெரிகிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் மற்றும் சில நபர்கள் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.
- ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.55 லட்சம் கோடி என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்த நிதியாண்டில் 3 மாதங்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜனவரி மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று மாலை 5 மணி வரை ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடியாக உள்ளது.
இதில் 37,118 கோடி இறக்குமதி பொருட்கள் மூலம் பெறப்பட்ட வருவாயாகும். செஸ் வரி ரூ.10,630 கோடியும் உள்ளடங்கியதாகும். நடப்பு நிதியாண்டில் ஜனவரியில், முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகமாக ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.
இந்த நிதியாண்டில் 3 மாதங்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வசூலான ஜி.எஸ்.டி. வசூல் வரலாற்றில் கடந்த 2022 ஏப்ரலில் வசூலான ரூ.1.68 லட்சம் கோடியே அதிகபட்சமாக இருக்கிறது. இந்த ஜனவரி வசூலானது அதற்கடுத்ததாக 2-வது அதிகபட்சமாக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
- எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்
புதுடெல்லி:
டெல்லியில் தொழில் வர்த்தக சபை சார்பில், பட்ஜெட் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசியதாவது:-
பட்ஜெட்டில் மூலதன செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக, பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பட்ஜெட் தாக்கலின் போதும் அதனை மனதில் வைத்துள்ளோம். பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் ஏற்கனவே உள்ளதுதான். முந்தைய நிதி மந்திரி இதற்கான வாய்ப்பை திறந்து வைத்திருந்தார்.
பெட்ரோலியம் கச்சா, மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), அதிவேக டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவை ஜிஎஸ்டியில் சேர்க்கப்படும் தேதியை ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானிக்கும். மாநிலங்கள் ஒப்புக்கொண்டால், பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவோம்.
எனவே, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். அவர்கள் என்னிடம் விகிதத்தை சொன்னவுடன், அதை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம்.
எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறோம். வளர்ச்சியின் வேகத்தை தளர்த்தவோ அல்லது நீர்த்துப்போகவோ விடக்கூடாது என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் டெல்லியில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அறிக்கை சிறிய மாற்றங்கங்களுடன் ஏற்கப்பட்டது.
- மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும் என தகவல்
புதுடெல்லி:
ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று வழங்கப்படும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து விடுவிக்க உள்ளது. தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும்.
பென்சில் ஷார்ப்னர் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கவும், தேசிய தேர்வு முகமைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அறிக்கை சிறிய மாற்றங்களுடன் ஏற்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.