என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"

    • ரவீந்திர குமார்,பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் ரகசியங்களை பகிர்ந்தார்.
    • ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர்.

    பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக ஆயுத தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆக்ரா அருகே ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் சார்ஜ்மேனாக பணிபுரியும் ரவீந்திர குமார் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் முக்கியமான ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய அரசு ஊழியர்களிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெறுவதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.

    இதற்காக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர். பணம் அல்லது பெண் மூலம் காதல் வலையில் வீழ்த்தி (ஹனி டிராப்) அவர்களை கவர்ந்திழுத்து இதில் சிக்க வைக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில்தான் ரவீந்திர குமார் சிக்கினார்.

    ரவீந்திர குமார், பேஸ்புக்கில் நேஹா சர்மா என்ற போலி பெயர் கொண்ட பெண்ணுடன் நட்பு கொண்டார். இவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி. இருவருக்கும் இடையே வாட்ஸ்அப் சாட்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் நடந்துள்ளன.

    படிப்படியாக, நேஹா சர்மா ரவீந்தரை காதல் வலையில் சிக்க வைத்து, ஆயுதத் தொழிற்சாலையின் ரகசியத் தகவல்களைக் கேட்கத் தொடங்கியுள்ளாள். அவள் மீது கொண்ட ஆசை காரணமாக, ரவீந்திரன் தொழிற்சாலையின் ரகசிய ஆவணங்களை அவருக்கு அனுப்பினார்.

    தற்போது கைதுசெய்யப்பட்ட ரவீந்திர குமாரின் தொலைபேசியிலிருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.

    அவற்றில் தொழிற்சாலையில் ட்ரோன்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான உற்பத்தி அறிக்கைகள், இந்திய இராணுவத்திற்கும் ஆலை அதிகாரிகளுக்கும் இடையிலான விவாதங்கள் அடங்கிய ரகசிய சந்திப்பு கோப்புகள், அரசு தொழிற்சாலைகளின் பங்கு பட்டியல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களின் அங்கீகரிக்கப்படாத நகல்கள் ஆகியவை அதில் அடங்கும்.

    தனியுரிமைச் சட்டம் 1923 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலும் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் ரவீந்திர குமாரின் கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • கராச்சியில் இருந்து உள்நாட்டு விமானம் புறப்பட்டு லாகூர் சென்றடைந்தது.
    • லாகூரில் தரையிறங்கும்போது லேண்டிங் கியரின் பின்புற சக்கரம் காணாமல் போனது தெரியவந்தது.

    பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்ளாட்டு விமானம் லாகூர் விமான நிலையத்தில் லேண்டிங் கியரின் பின்புற சக்கரங்களில் ஒன்று இல்லாத நிலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. என்றபோதிலும் பயணிகளுக்கு எந்தவித அசாம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்நாட்டு விமானம் கராச்சியில் இருந்து லாகூருக்கு புறப்பட்டுச் சென்றது.

    பயணிகளுடன் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின்னர்தான் லேண்டிங் கியரில் உள்ள 6 சச்கரங்கில் பின்புறம் இருக்கும் சக்கரங்களில் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. விமானம் காராச்சியில் இருந்து புறப்படும்போது கழன்று விழுந்ததா? அல்லது லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கழன்று விழுந்ததா? எனத் தெரியவில்லை.

    இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் கராச்சியில் இருந்து புறப்படும்போது ஒரு சக்கரம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.
    • 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் கடந்த மார்ச் 11 (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.

    பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது. 24 மணி நேரத்திற்கு பின் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவடிக்கையில் ரெயில் பயணிகள் மீட்கப்பட்டனர்.

    இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த ரெயில் கடத்தலில் ஈடுபட்ட பலுச் விடுதலைப் படைக்கு பின்னால் இந்தியா உள்ளதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் அதன் அண்டை நாடுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் பேசியிருந்தார்.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.

    உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பது முழு உலகிற்கும் தெரியும். பாகிஸ்தான் அதன் சொந்த உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உள்நோக்கிப் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
    • ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரெயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட ரெயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணியின் போது பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.

    பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.

    இதையடுத்து ரெயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி ரெயிலில் சிக்கி பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    "இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்று ஒரு ராணுவ அதிகாரி ஏ.எஃப்.பி. (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தார்.

    இந்தத் சம்பவத்துக்கு பலூச் விடுதலைப் படை (BLA) உரிமை கோரியது. தண்டவாளத்தில் வெடிப்பு நிகழ்ந்து, மலைகளில் மறைந்திருந்த இடங்களில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கி ஏந்தியவர்கள் வெளியே வருவது போன்ற வீடியோவை அது வெளியிட்டது.

    • ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் நேற்று கடந்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.

    பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.

    ரெயிலில் பெண்கள், குழந்தைகளை விடுவித்த பின்னர், மீதமிருந்த 214 ஆண் பயணிகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். மேலும் குறைந்தது ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவைக்கையில் பாதுகாப்புப் படையினரால் 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு ரெயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ரெயில் கடத்தப்பட்ட பரபரப்பு வீடியோவை பலுச் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது. 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

    இதை பயன்படுத்திய கிளர்ச்சியாளர்கள் சுரங்கப்பாதை எண் 8 அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தை வெடிக்கச்செய்து ரெயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர்.

    ரெயில் தண்டவாளம் வெடிப்பது, ரெயில் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காட்சிகள் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த கடத்தல் நடத்தப்பட்டுள்ளது புலனாகிறது. 

    • ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
    • சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் வழிமறித்தனர்.

    பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.

    பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.

    ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளில் 16 பேரை இதுவரை கொன்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    முன்னதாக, பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறும் போது, "பாதுகாப்புப் படையினர் 104 பயணிகளை (58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள்) - ஒரு பெட்டியிலிருந்து மீட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

    ரெயிலில் சுமார் 400 பயணிகள் இருந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலில் தீவிர துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரிண்ட் கூறியுள்ளார்.

    • இம்ரான்கானை எம்.பி. பதவியில் இருந்து தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.
    • இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகிறார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, தடைசெய்யப்பட்ட நாடுகளிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகார் குறித்து அந்த நாட்டு தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இதில் அக்கட்சி முறைகேடாக நிதி பெற்றதை உறுதி செய்த தேர்தல் ஆணையம் அக்கட்சியின் தலைவரான இம்ரான்கானை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகிறார். நேற்று 4-வது நாளாக பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய இம்ரான்கான் தன்னை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தலைவர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவுக்கு ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்போவதாக கூறினார்.

    • கார் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது டிரைவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது
    • காதல் ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்துள்ளனர்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானிய பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மாற்றும் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு அவரையே காதலித்து கரம் பிடித்து உள்ளார்.

    பணக்கார வீட்டு பெண்ணான அவர், கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் படு கில்லியாக இருந்திருக்கிறார். பயிற்சி கொடுத்தபோது அவரது கியர் மாற்றும் ஸ்டைலை கண்ட அந்த பெண்ணுக்கு, அவர் மீது காதல் வந்தது.

    உடனே அவர் தன்னுடைய வீட்டில் காதலை பற்றி கூறி, அந்த கார் டிரைவரையே திருமணம் செய்திருக்கிறார். இது தொடர்பாக `டெய்லி பாகிஸ்தான்' என்ற செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ள அந்த ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்கள்.

    அப்போது, அவர் கியரை மாற்றும் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது என அப்பெண் கூறியுள்ளார். மேலும் காதல் கணவருக்காக பாட்டு பாடச் சொல்லி கேட்டபோது அந்த பெண், ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா நடித்த பாபி படத்தில் இடம்பெற்ற ஹும் தும் ஏக் காம்ரே மேயின் என்ற பாடலை பாட, அதற்கு அப்பெண்ணின் கணவர் லைட்டா ஸ்வரம் குறையுது என கிண்டல் அடித்திருக்கிறார். இந்த காதல் திருமண தம்பதியின் பேட்டி வைரலாகி வருகிறது.

    • துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007-ல் ஒரு பேரணியின் போது எப்படி படுகொலை செய்யப்பட்டார்? என்பதை இன்றைய தாக்குதல் நினைவுபடுத்தியது.

    ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து அந்த நபர் துப்பாக்கியால் சுடும்போது பதிவான வீடியோ வெளியாகி உள்ளது.

    தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது காவல்துறையால் உறுதி செய்யப்படவில்லை. 

    • இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பு மங்கியது
    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது பாகிஸ்தான். ஆனால் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் இதுவரை 2-வது இடம் பிடிக்க முடியாமல் உள்ளது.

    நாளை கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஏறக்குறைய பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்டது. இருந்தாலும் அடுத்த அணிகளின் செயல்பாடுகளை பொறுத்து வாய்ப்புள்ளது.

    தற்போது இந்தியா 6 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +0.730) முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.441) 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.117) 3-வது இடத்தில் உள்ளது.

    நாளை தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்தையும், இந்தியா ஜிம்பாப்வேவையும், பாகிஸ்தான் வங்காளதேசத்தையும் எதிர்த்து விளையாட இருக்கின்றன.

    இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் வெற்றி பெற்றால் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். அப்படி இல்லாமல் இந்தியா வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும். இல்லையெனில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் தென்ஆப்பிரிக்காவுடன் ரன்ரேட் அடிப்படையில் போட்டியிட்டு அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நாளைய ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷான் மசூத் கூறியதாவது:-

    இழந்த தருணங்கள் எங்களுக்கு விலைமதிப்புமிக்கது என்பது நிரூபணமாகி உள்ளது. ஏனென்றால் நாங்கள் இன்னும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற முடியவில்லை.

    அதேசமயம் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. வாழ்க்கை நமக்கு கடினமான பாடங்களை கற்று தருகிறது. அதில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தோல்வி பாகிஸ்தான் வீரர்களின் தூக்கத்தை தொலைத்ததுடன், அவர்களின் மன உறுதியையும் கெடுத்துவிட்டது.

    அந்த பின்னடைவுகளுக்குப் பிறகு நாங்கள் எவ்வாறு மீண்டு வந்தோம் என்பது எங்கள் தன்மையை காட்டியது. அது ஒரு பெரிய விஷயம்.

    தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு சிறந்த விஷயம், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான். சமநிலையான பார்வையில் இருந்து நாம் பார்த்தோம் என்றால், ஜிம்பாப்வேயுடனான தோல்விக்குப்பின் நாங்கள் சிறப்பாக விளையாடி மீண்டு வந்தோம்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. பின்னர், நாங்கள் நன்றாக பந்து வீசி ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். மழைக்குப்பின் கூட நாங்கள் எங்களுடைய உத்வேகத்தை இழக்கவில்லை.

    ஆகவே, கடைசி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இரண்டு புள்ளிகள் பெறுவதில் கவனம் செலுத்துவோம். இதுதான் எங்கள் கையில் உள்ளது. எங்களுடைய குரூப்பில் கடைசி பந்து வீசும் வரை நாங்கள் நம்பிக்கையுடன் இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இம்ரான்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சதியின் பின்னணியில் பிரதமர், உள்துறை அமைச்சர் இருப்பதாக இம்ரான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஆளும் ஷபாஷ் செரீப் அரசுக்கு எதிராக அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான்கான் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரி, கடந்த வாரம் தமது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை அவர் தொடங்கிய நிலையில், பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகரில் இம்ரான்கான் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தம்மை கொலை செய்யும் சதித் திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்ப‌க் கூடாது என அந்நாட்டு ஊடக‌ங்களுக்கு ஷபாஸ் ஷெரீப் அரசு தெரிவித்துள்ளது. தவறான தகவல் அளித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த இம்ரான்கான் முயற்சிப்பதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒலிபரப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி ஒளிபரப்பும் ஊடகங்களின் உரிம‌ம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
    • பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    பெஷாவர் :

    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்வாவில் உள்ள மர்தான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதை தொடர்ந்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அந்த பயங்கரவாதி போலீசாரால் தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி மெஹ்முத் என்கிற ஒபைத் என்பது தெரியவந்தது.

    மர்தான் மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய ஒபைத் தலைக்கு கைபர் பக்துங்வா மாகாண அரசு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×