என் மலர்
நீங்கள் தேடியது "ஈராக்"
- துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
- 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர்.
அங்காரா:
துருக்கி தலைநகர் அங்காராவில் அரசுக்கு சொந்தமான ராணுவ மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த ஒரு ஆண், ஒரு பெண் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் குர்திஷ் படைகள் நடத்தியதாக துருக்கி தெரிவித்தது.
இந்த நிலையில் ஈராக், சிரியாவில் குர்திஷ் போராளிகள் படைகள் மீது துருக்கி பதிலடி தாக்குதலை நடத்தியது. வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் படைகள் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இதில் குர்திஷ் படையினரின் 32 முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், குர்திஷ் படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதல் குறித்த விவரங்களை துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் குர்திஷ் இலக்குகள் எதிர் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிப்பு.
- சிரியா, ஈராக், ஈரான் ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
ஈரான் மண்ணில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் உடனடியாக தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. கடந்த 1-ந்தேதி திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தால் தடுத்து முறியடித்தது.
அதில் இருந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனால் ஈரான் எப்போது வேண்டுமென்றாலும் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரான், ஈரான் மற்றும் சிரியா ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக தங்களது வான் எல்லைகளை மூடியுள்ளது. விமான சேவையை ரத்து செய்துள்ளது.
ஆனால் ஈரான் விரைவில் விமான சேவையை தொடங்குவோம் எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஈரான் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஈரான் வான் எல்லையில் சுதந்திரமாக பறக்கும் வகையில் வான் எல்லைகள் திறக்கப்படடுள்ளன இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட குளோபன் ஹைட்ஸ் பகுதியில் இருந்தும், லெபனானில் இருந்து தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது வான் பாதுகாப்பை ஏற்படுத்தும் தேவையை அதிரிக்க வைத்துள்ளது என சிரியா தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஷியா மற்றும் அரசியல் குழுக்கள் ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
- ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் இதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
- எனவே இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.
பெண்களின் சுதந்திரத்தை மதத்தின் பெயரில் முற்றிலுமாக படுகொலை செய்யும் இந்த மசோதாவுக்கு சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த மசோதாவின்படி திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் சார்பில் ஈராக் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர அதிக அழுத்தம் தரப்பட்டு வருகிறது. கால மாற்றத்தில் சமீப காலமாக மதம் மற்றும் அதன் தத்துவங்கள் வாயிலான மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது சிரமமாகி வரும் காரணத்தால் மீண்டும் அதை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஷியா பிரிவு முஸ்லீம் ஆதிக்க கட்சிகள் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்சி வருகிறது.

தற்போதுவரை ஈராக்கில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. 1959 இல் கொண்டுவரப்பட்ட சட்டப் பிரிவு 188 மதம் கடந்து இந்த உரிமையை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியது. ஆனால் இந்த பிரிவு திருத்தப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுமானால் பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.
சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள்ளது. இந்நிலையில் தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் பெண்கள் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல், கல்வி இடைநிற்றல் அபாயம் ஏற்படும். எனவே இதனை சுட்டிக்காட்டி மனித உரிமை குழுவினர் பெண்கள் அமைப்பினர், ஆகியோர் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஈராக் நாட்டின் திக்ரித் பகுதியில் உள்ள உணவகம் அருகில் இன்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.