என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மழை"
மரக்காணம்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடல் அலையின் சீற்றம் இன்று அதிகமாக காணப்பட்டது. மேலும் மரக்காணம் பகுதியில் இன்று காலை முதல் லேசான மழை தூறிக்கொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மரக்காணத்தை சுற்றியுள்ள எக்கியார்குப்பம், அனு மந்தை குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மழைகாலங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பனிச்சமேடு, செட்டிக்குப்பம், வசந்த்குப்பம் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் முகாமிட்டுள்ளனர்.
கஜா புயல் கரையை கடக்கும்போது மரக்காணம் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையொட்டி மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் 1800 மணல் மூட்டைகள் மற்றும் சிமெண்ட் மூட்டைகள், 5 டன் சவுக்கு கட்டைகள், ஜே.சி.பி. எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனர் பழனிசாமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பனிச்சமேடு பகுதிக்கு சென்று அங்கு மேற் கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை பார்வையிட்டு பேரிடர் மீட்பு குழு வினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் தாசில்தார் தன லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, பேரூராட்சி அலுவலர் ராஜீ மற்றும் மரக்காணம் இன்ஸ்பெக்டர் மைக்கெல் இருதயராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #gajacyclone #gaja #rain
புதுச்சேரி:
கஜா புயல் இன்றிரவு புதுவை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், கனமழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலை எதிர்கொள்ள கடந்த 5 நாட்களாக புதுவை அரசு, மாவட்ட நிர்வாகம் ஆயத்த பணிகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்துள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரை திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அனைத்து மீனவர்களும் கரைக்கு திரும்பியுள்ளனர்.
மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைக்க சமுதாய நலக்கூடம், அரசு பள்ளி ஆகியவை திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
கஜா புயலையொட்டி 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு புதுவை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவைக்கு வந்தனர். அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு குழு காரைக்காலுக்கு சென்றுள்ளது. மற்றொரு குழுவினர் புதுவை மீட்பு பணிகளில் ஈடு பட தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு உடனடியாக நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் தனித் தனியே ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.
அரசின் பொதுப்பணித் துறை, மின்துறை, உள்ளாட் சித் துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புயல் தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் அவசர கால செயல் மையமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதி பாதிப்புகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்களும் துறைவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை புதுவையில் புயலுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்று வீச தொடங்கியது. இன்று அதிகாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் புதுவையே இருண்டது. காலை 10 மணிக்கு மேல் இடியுடன் லேசான மழையும் பெய்ய தொடங்கியது.
புயல் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. ஒரு மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
புயல் காரணமாக புதுவை சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம் ஆகியவற்றில் படகு சேவை ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகவும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் புதுவைக்கு வர வேண்டிய பெங்களூரு, ஐதராபாத் விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது.
கஜா புயல் இன்று இரவு 11 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவு, குடிநீர், தேவையான மருந்து பொருட்களை இருப்பு வைத்து கொள்ளும்படியும் வருவாய்த்துறை அறிவுறுத்தி உள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கவும் மின்துறை திட்டமிட்டுள்ளது. #plane #gaja #CycloneGaja
புதுச்சேரி:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும் புதுவையில் கடந்த 5 நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல பயந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல் கடும் புழுக்கத்தினால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். நேற்று பகலிலும் இதே நிலை நீடித்தது. ஆனால், மாலையில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தாலும் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 45 நிமிடம் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக ஒருசில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை வரை மழை தூறிக் கொண்டே இருந்தது.
கடந்த 5 நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலினால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த பலத்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். #Rain
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவில் மழை பெய்தது. சுமார் 40 நிமிடங்கள் வரை இந்த மழை நீடித்தது.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், பேரளம், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து சென்றது.
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், தலைஞாயிறு, மணல்மேடு ஆகிய இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது.
வேதாரண்யத்தில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் உள்ள நேரசி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.
தற்போது காவிரி , வெண்ணாறு, கொள்ளிடத்தில் தண்ணீர் சென்றாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதிகளுக்கு இன்னும் செல்லவில்லை. இதனால் சம்பா சாகுபடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெய்த மழையால் பாசனத்துக்கு தண்ணீருக்காக ஏங்கி நின்ற கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்தால் நல்லது என்று அவர்கள் தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
முள்ளியாறு - 37.4, கோரையாறு - 32.4, மன்னார்குடி - 29.6, வேதாரண்யம் - 28.4, மஞ்சலாறு - 24.6, தலைஞாயிறு - 21.8, சீர்காழி - 17.2, ஒரத்தநாடு - 15.4, திருவாரூர் - 14.4, வலங்கைமான் - 7.4, நாகை - 4.3.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பில்லூர் அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 100 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேரம் செல்லச் செல்ல பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் தண்ணீர் வரத்தொடங்கியது. அணையின் நீர்மட்ட உயரத்தை ஒரே சீராக வைத்திருக்க அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று மாலை 5 மணிக்கு அணைக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இன்று காலை 6 மணி நிரவரப்படி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தற்போது அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் 14 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இன்று 5-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதே போல் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிகள் கடல் போல் காட்சி அளிக்கிறது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள காந்த வயலில் பவானிசாகர் அணை நீர்த் தேக்கப்பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருந்தது.
இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்து உள்ளது. நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஊட்டியில் இன்று ரம்யமான சூழல் இருந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்