search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 151724"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிட வேண்டும்.
    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தருவார்கள்.

    வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா 5 எம்.பி.க்களுக்கும், கூட்டணி கட்சிகள் 10 எம்.பி.க்களும் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது அண்ணாமலையின் மலைக்க வைக்கும் கணக்கு.

    இதுதான் சரியான கணக்கு என்பதற்கு அண்ணாமலை டெல்லிக்கு சொல்லியிருக்கும் விளக்கம் வித்தியாசமானது. அதாவது தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பலவீனமாகத்தான் உள்ளது. எனவே பா.ஜனதா தலைமையில் பா.ம.க. உள்பட சில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க வேண்டும். அதுதான் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.

    இப்படி கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிட வேண்டும். தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும். இதில் பா.ஜனதா 5 தொகுதிகளில் நிச்சயம் ஜெயிக்கும்.

    ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தருவார்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில்தான் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். ஆனால் டெல்லி மேலிடம் தி.மு.க. வலுவான அணியாக இருப்பதால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதே பலம் சேர்க்கும். 2026-ல் தமிழக அரசியல் களம் என்பது தி.மு.க.-பா.ஜனதா இடையேதான் இருக்கும் என்று உறுதியாக கூறி இருக்கிறார்கள். இப்போது பா.ஜனதா போட்டியிட விரும்பும் தொகுதியில் பணிகளை செய்யுங்கள் என்று டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் கூட்டணியில் பா.ஜனதாவும் இருக்கும். இது உறுதியான கூட்டணி இதில் எந்த குழப்பமும் வேண்டாம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் கூறினார். டெல்லியில் நடந்த உரையாடல்கள் பற்றி அண்ணாமலையிடம் கேட்ட போது "நான் பல விஷயங்களுக்காக டெல்லி செல்வேன். அதையெல்லாம் பொது வெளியில் சொல்ல முடியாது. யூகங்களுக்கு பதில் சொல்லவும் விரும்பவில்லை" என்றார்.

    • கட்சிக்காரர்களின் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு என இரண்டும் இருந்தால்தான் இவர்கள் தான் தலைமை என்று சொல்ல முடியும்.
    • தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இன்னொரு முறை நாங்கள் கொடுக்க மாட்டோம்.

    சென்னை:

    சசிகலா வேளாங்கண்ணியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்தை சந்தீப்பீர்களா? சந்தித்தால் என்ன மாற்றம் நிகழும் என்று கேட்கிறீர்கள். அரசியலில் என்ன மாற்றம் நிகழும் என்பது 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது தெரியும். எல்லோரையும் சந்திப்பேன்.

    என்னுடைய அரசியல் நகர்வு மெதுவாக போவதாக நான் நினைக்கவில்லை. அதாவது ஒரு கட்சி என்று இருந்தால் அதில் தொண்டர்களின் விருப்பம் தான் என்றைக்கும் வெற்றி பெறும். அதன் அடிப்படையில் பார்த்தீர்கள் என்றால் தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரியும், தொண்டர்களுக்கும் தெரியும். அதனால் விரைவில் நல்லபடியாக எல்லாம் நடக்கும்.

    கட்சிக்காரர்களின் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு என இரண்டும் இருந்தால்தான் இவர்கள் தான் தலைமை என்று சொல்ல முடியும். அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. வருங்காலத்தில் தேர்தலின் போது அதனை பார்ப்பீர்கள்.

    எல்லோரையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டு போவது தான் என்னுடைய வேலை. இதை நான் ஏற்கனவே ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் தனி அணியாக தேர்தலை சந்தித்த பிறகு எல்லோரும் ஒன்று சேர்க்கும் பணியினை அந்த காலக்கட்டத்தில் கூட நான் செய்திருக்கிறேன்.

    அதனால் இதை இப்போதும் செய்வது பெரிதாக தெரியவில்லை. என்ன பொருத்தவரை நான் நினைத்ததை முடித்துக் கொண்டே வருகிறேன்.

    தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இன்னொரு முறை நாங்கள் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அ.தி.மு.க.வால் தான் காப்பாற்ற முடியும். அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

    அதனை நிச்சயம் செய்து ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆட்சி நடத்தினாரோ அதனை நாங்கள் நிச்சயம் செய்வோம். அ.தி.மு.க. என்று நான் சொல்வது எங்களை தான். அனைவரும் ஒன்று சேர்ந்து 2024 தேர்தலை நிச்சயம் சந்திப்போம். அதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது.

    நான் வெளியில் செல்லுகின்ற போது அங்கே பொதுமக்கள் சொல்வது, என்னிடம் பேசுவது, எல்லோரும் நினைப்பது நான் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை வெளிப்படையாக பேசுகிறார்கள். நான் நம்பி ஒருவரிடம் பொறுப்பை கொடுத்திருந்தேன்.

    அவரவர்கள் எடுத்துக்கொள்ளும் முறையில் தான் இருக்கிறது. அப்படி தான் நான் எடுத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா நிறைய இதுபோன்று சந்தித்திருக்கிறார்.

    என்னை பொறுத்த வரைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில பேர் மாற்று எண்ணத்திற்கு சென்று விடுவார்கள். இதனை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

    ஜெயலலிதா வேண்டாம் என்று சொன்ன ஆர்.எம்.வீரப்பனாக இருக்கட்டும். எஸ்.டி.சோமசுந்தரமாக இருக்கட்டும், தலைவர் இருக்கின்ற காலத்தில் இருந்தே ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் இருந்தால் கூட பிளவுபட்ட கழகம் ஒன்றாக இணைந்த பிறகு, ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான காங்கேயத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு விட்டு கொடுத்தார்கள். அவரையும் அமைச்சராக்கினோம். ஆகையால் ஒரு கட்சி என்று இருந்தால் இதுபோன்றெல்லாம் இருக்கும்.

    பொதுமக்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. 39 ஆண்டு காலம் நாங்கள் அரசியலில் பயணம் செய்திருக்கிறோம். தமிழகத்தில் நாங்கள் போகாத இடமில்லை. எங்கள் வண்டியில் டயர் படாத இடமில்லை. அந்தளவுக்கு நாங்கள் குக்கிராமங்கள் எல்லாம் சென்றிருக்கிறோம். அந்த மக்களை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பொதுமக்களுக்காகவே நான் வந்தாக வேண்டும் என்ற முயற்சியில் தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

    என்னை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தான் 2024 பாராளுமன்றத் தேர்தலை சந்திப்போம். ஒன்றிணைந்தால் தான் தி.மு.க.வை வேரோடு எடுக்க முடியும்.

    தி.மு.க. மாதிரி எங்கள் தொண்டர்கள் யாரும் இப்படி இருக்கமாட்டார்கள். ஜெயலலிதா கட்சியை மிகவும் கட்டுப்பாடாக வைத்திருந்தார்கள். கட்சியினர் எப்போதும் பொதுமக்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். தி.மு.க.வினரிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. 2026-ல் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வால் நிச்சயம் ஆட்சிக்கு வரும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

    இவ்வாறு சசிகலா கூறினார்.

    • ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
    • தற்போது 11,344 பட்டு சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் இல்லை என்று கூறுகின்றனர்.

    பெங்களூரு :

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் அரசு வக்கீலாக கிரண் எஸ்.ஜவலி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5-ந் தேதி விசாரணையின் போது ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என கோர்ட்டு உத்தரவிட்டு, சொத்துகளை ஒப்படைத்துள்ளதால், கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்களையும், அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வக்கீல் கூறி இருந்தார். அப்போது இந்த வழக்கில் முறையாக ஆஜராகி வாதாட ஜெ.தீபா தரப்பில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் இந்த வழக்கை தொடர்ந்திருந்த நரசிம்மமூர்த்தி கூறியபடி ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், சால்வைகள் இல்லை என்று நீதிபதி கூறி இருந்தார். இதையடுத்து, அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்கள் குறித்து கருவூல துறையிடம் இருந்து ஆவணங்களை பெற்று கொடுப்பதாக நரசிம்மமூர்த்தி கூறினார்.

    இதையடுத்து, அன்றைய தினம் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதி (இன்று) ஒத்திவைத்திருந்தார். அதன்படி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சொத்து குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றிய போது, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 11,344 பட்டு சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் இல்லை என்று கூறுகின்றனர்.

    இதுபற்றி கர்நாடக அதிகாரிகள், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் இருந்து ஆவணங்கள், தகவல்களை பெற்றுள்ளேன். நீதிபதி உத்தரவின்படி ஆவணங்கள், தகவல்களை கோர்ட்டில் அளிப்பேன். இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி ஒருவர் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கிறேன், என்றார்.

    • தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வந்தது.
    • தி.மு.க.வுக்கு எதிரி அ.தி.மு.க.தான் என்பதை நிரூபிக்க தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு பல அணிகளாக அ.தி.மு.க. செயல்பட்டது. பின்பு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து இரட்டை தலைமையுடன் செயல்பட தொடங்கியது.

    இது கட்சிக்கு பல்வேறு முடிவுகளை எடுக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. இதன் காரணமாக ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டு பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றனர். கோர்ட்டு பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதை தேர்தல் கமிஷனும் அங்கீகரித்தது.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.

    முதல்கட்டமாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆலோசனை கூட்டம் நடத்தி உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இளைஞர்கள், இளம்பெண்களை அதிகமாக உறுப்பினர்களாக சேர்க்க வலியுறுத்தினார்.

    அது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்ட செயலாளர்களை அடிக்கடி அவரே தொடர்பு கொண்டு எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். பணிகளை தீவிரப்படுத்துங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.

    ஓ.பி.எஸ். சமீபத்தில் டி.டி.வி. தினகரனை சந்தித்தார். சசிகலாவை விரைவில் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து கட்சியினரிடம் கழக பணியில் தீவிரமாக ஈடுபட்டு அதிக உறுப்பினர் சேர்க்கையால் நமது அணியை பலப்படுத்த அறிவுறுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய பலியை கண்டித்தும் முறைகேடுகளை விசாரணை செய்யக் கோரியும் அவர்கள் மாளிகை நோக்கி பேரணி நடத்தி கவர்னரிடம் புகார் மனு கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.

    அடுத்த கட்டமாக பொதுமக்கள் அடிப்படை பிரச்சினையை உடனடியாக ஆங்காங்கே பிரமாண்ட போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வந்தது. தி.மு.க.வுக்கு எதிரி அ.தி.மு.க.தான் என்பதை நிரூபிக்க தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலியாக உள்ள மாவட்ட செயலாளர்கள் பதவிகளுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கட்சியில் ஸ்லீப்பர் செல்லாக சில மாவட்ட செயாளர்கள் செயல்படுவதாக புகார் வருவதை தொடர்ந்து அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பாணியில் தவறு செய்வோர் உடனடியான தண்டிக்கப்படுவதும் தி.மு.க. எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவதும் தீவிரம் அடைவதாக தெரிகிறது.

    • சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
    • அரசு கருவூலத்தில் சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை, தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாக நீதிபதி கூறினார்.

    பெங்களூரு

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பெங்களூரு செசன்சு கோர்ட்டில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஏற்கனவே கிரண் எஸ்.ஜவலி நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்ற போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தரப்பில் வக்கீல் சத்யமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.

    அப்போது ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என்று கூறி சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அறிவித்து, சொத்துகளை ஒப்படைத்துள்ளது. எனவே கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் பொருட்கள், பிற உடைமைகளை தீபாவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    இந்த வழக்கில் உங்களது தரப்பில் இருந்து முறையாக மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி கூறினார். மேலும் முறையாக மனு தாக்கல் செய்யும்படி தீபா தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    அதே நேரத்தில் நரசிம்மமூர்த்தி கூறியபடி அரசு கருவூலத்தில் சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை, தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாக நீதிபதி கூறினார்.

    இதையடுத்து, அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்கள் குறித்து கருவூல துறையிடம் முறையான ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதாக நரசிம்மமூர்த்தி கூறினார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.
    • கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

    பெங்களூர்:

    சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் 27 வகை பொருள்களை மட்டும் ஏலம்விட்டு அதில் வரும் தொகையை கொண்டு சொத்துக்குவிப்பு வழக்கிற்கு செலவிடப்பட்ட நிதியை வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரா, சிறப்பு வழக்கறிஞரை நியமித்து ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார். அதன்படி, ஜெயலலிதாவின் வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள் ஆகியவை ஏலத்தில் விற்கப்பட இருக்கின்றன.

    இதனிடையே தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் சொத்துகளை ஏலம்விட வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இதுபற்றி விரைவில் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சிறப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்.ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் இவர் மேற்கொள்வார் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

    • அண்ணன் என்ற முறையில் நான்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆவேன்.
    • ஜெ.தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் ஆஜரானார்.

    சென்னை :

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பு பிறப்பித்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 83 வயது முதியவர் என்.ஜி.வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு 50 சதவீதம் பங்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் தந்தை ஆர்.ஜெயராமுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஜெ.ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன். 2-வது மனைவி வேதவல்லி என்ற வேதம்மாவுக்கு, ஜெயக்குமார், ஜெயலலிதா என்று இருவர் பிறந்தனர்.

    இந்த வகையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் என்னுடைய சகோதர, சகோதரி ஆவர். 1950-ம் ஆண்டில், என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு கோட்டில் என் அம்மா தொடர்ந்த வழக்கில், வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.

    ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டதால், அண்ணன் என்ற முறையில் நான்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆவேன்.

    எனவே, ஜெயலலிதாவின் மொத்த சொத்துகளில் 50 சதவீத பங்கை எனக்கு தர தீபா, தீபக் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு மாற்றியது. இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதை விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் கோர்ட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனால், இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு மாஸ்டர் கோர்ட்டு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் ஆஜரானார். ஆனால், எதிர்மனுதாரர்கள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வாசுதேவன் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாக மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    • வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
    • தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. உடனடியாக வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 11-ந்தேதி விசாரிக்கும் என்று தெரிவித்தது.

    • சிவகாசியில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    சிவகாசி

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி சிவகாசி சிவன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்குமாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான ராஜேந்தி ரபாலாஜி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிவகாசி சிவன் கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் சாமி என்ற ராஜா அபினேஷ்வரன், முன்னாள் நகர செயலாளர் அசன்ப தூரூதீன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செ யலாளர் வேண்டுராயபுரம் சுப்பிர மணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் ரிசர்வ்லை யன் தேவர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட மாணவரணி அஜய்கிருஷ்ணா மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    • ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
    • ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் நகர செயலாளர் பக்கரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, நிர்வாகிகள் அம்சேந்திரன் முன்னாள் தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் நாடி.செல்வமுத்துக்குமரன், வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், நெடுஞ்செழியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகளை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பி.வி.பி. கார்த்தி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இதில் அதிமுக நிர்வாகிகள் இறைஎழில், கல்யாணசுந்தரம், சுரேஷ், பரணிதரன், ரவி சண்முகம், விஜயக்குமார், மாலினி, தெட்சிணாமூர்த்தி, ரத்தினவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மற்றும் மாநகர அ.தி.மு.க. சார்பில், கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஓசூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது, ஜெயலலிதா படத்துக்கு பூஜைகள் செய்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
    • ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    காரைக்குடி

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் ஒன்றியம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரியக்குடியில் நடந்த விழாவில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தனர்.

    ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இதில் அரியக்குடி கிளை அவைத் தலைவர் சீனிவாசன், கிளை கழக செயலாளர்கள் சுப்பிரமணியன், செந்தில்நாதன், மோகன், முத்துராஜ், அந்தோணிமகிமை, முருகன், துரைராஜ்குமார், ஊராட்சிமன்ற துணை தலைவர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் என்.ஜி.ஓ.காலனியில் நடந்த விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள், மாவட்ட பேரவை துணை செயலாளர் நாகராஜன், கிளை செயலாளர் மகேந்திர குமார், ஐ.டி.விங் கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×