search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெருசலேம்"

    இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்றுள்ளார். #Jerusalem #BenjaminNetanyahu
    ரியோ டி ஜெனிரோ:

    யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்தது. மற்ற நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், அதிரடியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இந்த முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.
     
    எனினும் அவற்றை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த மே மாதம் திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா, பராகுவே நாட்டின் தூதரகங்கள் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.



    இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக, பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் புதிய அதிபராக தேர்வான ஜயிர் போல்ஸ்னோரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரேலில் உள்ள பிரேசில் தூதரகம் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

    பிரேசில் அதிபரின் இந்த முடிவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார். #Jerusalem #BenjaminNetanyahu
    ஜெருசலேம் கவர்னர் அத்னன் காயித்தை இஸ்ரேல் போலீஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர். #Jerusalem #Governor #AdnanGheith
    ஜெருசலேம்:

    ஜெருசலேம் கவர்னராக அத்னன் காயித் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பெயித் ஹனினா நகரில் இருந்து ஆக்கிரமிப்பு ஜெருசலேமின் வட பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது காரை இஸ்ரேல் போலீஸ் படையினர் 3 கார்களில் சென்று வழி மறித்தனர். அதைத் தொடர்ந்து கவர்னர் அத்னன் காயித்தை போலீஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர். அவரை ரகசிய இடத்துக்கு அவர்கள் கொண்டு சென்றனர்.

    அத்னன் காயித் கைது செய்யப்பட்டதின் பின்னணி என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    முன்னதாக ஜெருசலேமில் பாலஸ்தீன உளவுத்துறை தலைவர் ஜிகாத் அல் பாகிஹ், தனது பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, அல் ஜூதெய்ரா கிராமத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஜெருசலேமுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். இவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதுவும் அறிவிக்கப்படவில்லை. #Jerusalem #Governor #AdnanGheith 
    அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் பிரதமர் பரிசீலித்து வருகிறார். #AustraliaPM #ScottMorrison
    கான்பெர்ரா:

    கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். இது உலகளாவிய எதிர்ப்புக்கு வழிவகுத்தது.

    ஆனாலும், அடுத்த கட்டமாக கடந்த மே மாதம், ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் பரிசீலித்து வருகிறது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்தார். மேலும், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு அளித்து வருகிற ஆதரவை மறுபரிசீலனை செய்யவும் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதையும் பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறி உள்ளார்.

    ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா ஒரு தரப்பினராக கையெழுத்திடாதபோதும், இப்போது தனது ஆதரவை வாபஸ் பெற்றால் அது அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதரவை இதில் எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #AustraliaPM #ScottMorrison
    ஜெருசலேத்திற்கு புனித புனித பயணம் செல்பவர்கள் அரசின் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விழுப்புரம்:

    ஜெருசலேத்திற்கு புனித புனித பயணம் செல்பவர்கள் அரசின் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட்டு வருகிற 10-ந் தேதிக்குள் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807 அண்ணா சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
    விருதுநகர்:

    கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. புனித பயணம் ஜூலை மாதம் முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்‘ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு வருகிற 6-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்கா தனது தூதரகத்தை ஜெருசலேமில் திறந்த இரண்டு நாட்களுக்குள் கவுதமாலாவும் தனது தூதரகத்தை அந்நகரில் இன்று திறந்துள்ளது. #JimmyMorales #BenjaminNetanyahu
    ஜெருசலேம்:

    இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

    ஆனால், அவற்றை பொருட்படுத்தாமல் கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் கடந்த 14-ம் தேதி  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

    ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கிறது என அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் 70 வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக மே மாதம் டெல் அவிவ் நகரில் உள்ள கவுதமாலாவின் தூதரகம் மாற்றப்பட்டு ஜெருசலேம் நகரில் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், ஜெருசலேம் நகரில் கவுதமாலா தூதரகத்தை இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தூதரகத்தை திறந்து வைத்து பேசிய ஜிம்மி மொரால்ஸ், மற்ற உலக நாடுகளும் இஸ்ரேலுக்கான தங்களது தூதரகத்தை  ஜெருசலேமில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து  பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வெளிநாட்டு பயணமாக கவுதமாலா செல்லப்போவதாக அறிவித்தார்.

    1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவாகிய போது அதை அங்கீகரித்த இரண்டாவது நாடு கவுதமாலா, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அங்கு தனது தூதரகத்தை திறந்துள்ள இரண்டாவது நாடும் கவுதமாலா என்பது குறிப்பிடத்தக்கது. #JimmyMorales #BenjaminNetanyahu
    ஜெருசலேம் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்படும் நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.

    இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலர் ஜெருசலேம் நகரில் முகாமிட்டுள்ளனர்.

    வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தவாறு திறப்பு விழாவின்போது வீடியோ கான்பிரன்சிங் மூலம் அமெரிக்க அதிபர் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு கூறுகையில், அமெரிக்காவை தொடர்ந்து தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க விருப்பம் தெரிவித்துள்ள கவுதமாலா, பரகுவே நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோன்ற முடிவை விரைவில் சில நாடுகள் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

    இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இனி ஜெருசலேம் இருக்கும் என்பதால் உலகில் உள்ள இதர நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem
    ஜெருசலேம் நகரில் நாளை திறக்கப்படும் அமெரிக்க தூதரகத்துக்கு எதிராக சிலர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #JerusalemUSembassy #Israeliprotestersrally
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது.

    இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலர் ஜெருசலேம் நகரில் முகாமிட்டுள்ளனர்.

    வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தவாறு திறப்பு விழாவின்போது வீடியோ கான்பிரன்சிங் மூலம் அமெரிக்க அதிபர் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இஸ்ரேலில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்கு திறப்பு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் சிலர் இந்த விழாவை புறப்பணிப்பார்கள் என கருதப்படுகிறது.

    இந்நிலையில், ஜெருசலேம் நகரில் நாளை திறக்கப்படும் அமெரிக்க தூதரகத்துக்கு எதிராக நேற்று சிலர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பல்வேறு பகுதிகளில் பேரணியாக சென்றனர். #JerusalemUSembassy  #Israeliprotestersrally 
    ×