என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத் பவார்"

    • நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.
    • இந்த விழாவின் போது, ​​பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

    அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், மும்பையின் வோர்லியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மகாராஷ்டிர மஹோத்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது.

    மே 1 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு மே 4 வரை தொடரும். இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

    இந்த நிகழ்வில் இன்று அஜித் பவாரிடம் மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், வரும் காலங்களில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஒரு பெண் வர முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அஜித் பவார், "நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதற்கு, தற்செயலாக ஏதாவது நடக்க வேண்டும்.

    இப்போது பாருங்கள், நானும் பல வருடங்களாக முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் விஷயங்கள் ஒருபோதும் பலனளிப்பதில்லை. அந்த நாள் எப்போதாவது வரும்" என்று பெருமூச்செறிந்தார்.

    2023 ஆம் ஆண்டு சரத் பவாரின் தேசியவாத கட்சியை உடைத்த அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனார்.

    ஆனால் முதல்வர் ஆக முடியாத ஆதங்கத்தை அவர் பல மேடைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சர் தகவல்.
    • விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.

    மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இதற்கு கொள்கை வகுக்க வேண்டும் என சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, சட்டசபையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பாக வெளியான தகவல் கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சரியான தரவுகளை சேகரிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    மேலும், சரத் பவார் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் கட்சிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியானது குறித்து கேட்க கேள்விக்கு, இது தொடர்பாக மீடியாவுக்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்" என்றார்.

    பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஜெயந்த் பாட்டீல் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர், தான் விரக்தியில் உள்ளது. தன்னுடைய கருத்தில் இருந்து தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • அதானி குழுமம் மீது குறிவைக்கப்பட்ட விஷயம் போலவே தெரிகிறது.
    • இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட தொழில் குழுமத்தை குறிவைத்து தாக்குவது போல் ஹிண்டனர்க் அறிக்கை அமைத்திருக்கிறது.

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது.

    இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மேலும் பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பினர். இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை. இதுபோன்ற அறிக்கைகள் இதற்கு முன்பாகவும் சில தனிநபர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்திலும் சில நாட்கள் கடும் அமளி ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்திற்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவிட்டது. அதானி குழுமம் மீது குறிவைக்கப்பட்ட விஷயம் போலவே தெரிகிறது. இதுபோன்ற பிரச்னைகள் எழுப்பப்படும்போது, நாட்டில் சலசலப்பை உண்டாக்குகிறது. செலவு ஏற்படுகிறது. பொருளாதாரத்தை பாதிக்கிறது.

    இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட தொழில் குழுமத்தை குறிவைத்து தாக்குவது போல் ஹிண்டனர்க் அறிக்கை அமைத்திருக்கிறது. அப்படி ஏதேனும் அவர்கள் தவறு செய்திருந்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருது வழங்கும் விழாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அலட்சியமாக செயல்பட்டது என்றார்
    • எதிர்க்கட்சிகளை ஒழிப்பதற்காக பாஜக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சரத் பவார் குற்றம் சாட்டினார்.

    மும்பை:

    2002ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத் மாநிலம் முழுவதும் கடும் வன்முறை வெடித்தது. இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கலவரத்தின்போது அகமதாபாத்தின் நரோதா காமில் 11 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 67 பேரையும் குஜராத் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

    இந்த தீர்ப்பு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அதிருப்தி தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றும், இது நேற்றைய தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கடந்த 16ம் தேதி நடந்த விழாவில் வெப்ப அலையால் மக்கள் உயிரிழந்தது குறித்து பேசிய சரத் பவார், விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்ததில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    எதிர்க்கட்சிகளை ஒழிப்பதற்காக பாஜக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சரத் பவார் குற்றம் சாட்டினார்.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் அறிவித்துள்ளார்.
    • சரத் பவாரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து, அவரே தலைவராகத் தொடர வேண்டும் என தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

    நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். 1958-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சரத்பவார் அரசியலில் அத்தனை உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் அறிவித்துள்ளார். சரத் பவாரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து, அவரே தலைவராகத் தொடர வேண்டும் என தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

    • ராஜினாமா முடிவை திரும்ப பெறாவிட்டால் கட்சி அலுவலகத்தில் இருந்து செல்லமாட்டோம் என்று தொண்டர்கள் கூறினர்.
    • செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்று அஜித் பவார் பரிந்துரை செய்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் (வயது 83) இன்று திடீரென அறிவித்தார். வயது முதிர்வை காரணம் காட்டி அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.

    'புதிய தலைமுறையினர் கட்சியையும், கட்சி செல்ல நினைக்கும் பாதையையும் வழிநடத்த வேண்டிய நேரம் இது. தலைவர் பதவிக்கான காலியிடத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு செய்வதற்காக கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்' என சரத் பவார் கூறினார்.

    அவரது முடிவு கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமாவை பெரும்பாலான தொண்டர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அவரே தலைவராகத் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ராஜினாமா முடிவை திரும்ப பெறாவிட்டால் அங்கிருந்து செல்லமாட்டோம் என்றும் பிடிவாதமாக இருந்தனர். 

    இதையடுத்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் உறவினர் அஜித் பவார் ஆகியோர் சரத் பவாரை சந்தித்து ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது இதுபற்றி சிந்திப்பதாகவும், சில நாட்கள் அவகாசம் தேவை என்றும் சரத் பவார் கூறியிருக்கிறார்.

    "நான் ஒரு முடிவை எடுத்தேன், ஆனால் உங்கள் அனைவரின் வேண்டுகோள் காரணமாக எனது முடிவை மறுபரிசீலனை செய்வேன். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் தேவை. தொண்டர்கள் வீட்டுக்கு போனால்தான் யோசிப்பேன். சிலர் கட்சிப் பதவிகளையும் ராஜினாமா செய்கின்றனர். அதை நிறுத்தவேண்டும்" என சரத் பவார் கூறியதை மேற்கோள் காட்சி அஜித் பவார் தெரிவித்தார்.

    மேலும், சரத் பவார் தலைவராக இருக்க வேண்டும் என்றும், அவருக்கு கீழ் ஒரு செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்ததாகவும் அஜித் பவார் கூறினார்.

    • இந்திய அளவில் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான, பெரும் தலைவர்களில் ஒருவரான மரியாதைக்குரிய சரத்பவார்.
    • சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    2024 பாராளுமன்றப் பொதுத்தேர்தலை நோக்கி அகில இந்திய அரசியல் மையம் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய அளவில் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான, பெரும் தலைவர்களில் ஒருவரான மரியாதைக்குரிய சரத்பவார், தனது கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சரத் பவார் பதவியில் நீடிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியது.
    • அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் நீடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  சரத் பவார் பதவியில் நீடிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் அரங்கேறியது.

    கட்சியின் சூழல் குறித்து மூத்த தலைவர்கள் அவரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் சரத்பவார் கூறியிருக்கிறார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் தலைமையிலான இந்த கூட்டத்தில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, அண்ணன் மகன் அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சரத்பவாரின் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சரத் பவார் பதவி விலகுவதை யாருமே விரும்பவில்லை என்பதால், அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

    இன்றைய தீர்மானம், கட்சியில் சரத் பவாரின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • உயர்மட்டக்குழு கூட்டத்தில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க சரத்பவார் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சரத் பவார் பதவியில் நீடிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் அரங்கேறியது.

    கட்சியின் சூழல் குறித்து மூத்த தலைவர்கள் அவரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் சரத்பவார் கூறியிருந்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரத் பவார் பதவி விலகுவதை யாருமே விரும்பவில்லை என்பதால், அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

    தனது முடிவை உயர்மட்டக்குழு நிராகரித்த நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றதாக அறிவித்தார். புதிய உற்சாகத்துடன் கட்சிக்காக பணியாற்ற உள்ளதாகவும் கூறினார். 

    • வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார்.
    • இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.

    மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார். அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட உறுதி பூண்டனர்.

    சமீபத்தில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார். மேலும், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு சென்ற நிதிஷ்குமாரும், பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் முதல் மந்திரி ஹேமந்த் சோரனைச் சந்தித்துப் பேசினர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சென்ற நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் உத்தவ் தாகரே மற்றும் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிய்னர் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

    • கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
    • இது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.

    மும்பை:

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் புனேவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது கர்நாடக தேர்தல் வெற்றி.

    ராகுல் காந்தி சித்தாந்தத்தை மக்கள் வலுப்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக நிலைமை மாறி வருவதை நமக்கு காட்டுகிறது. அங்கு சாமானிய மக்களின் அரசு பதவியேற்றுள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் நாம் பார்த்ததை நாட்டின் பிற இடங்களிலும் பிரதிபலிக்க முடியும் என தெரிவித்தார்.

    ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் விபத்தில் சிக்கின.
    • இந்த கோர விபத்தில் சிக்கி 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகவேண்டும் என்றார் தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், லால் பகதூர் சாஸ்திரி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ஒரு விபத்து நடந்து, அது மீண்டும் நடந்தது. அதன்பிறகு, ராஜினாமா செய்யும் முடிவை ஜவகர்லால் நேரு எதிர்த்தார். ஆனால் அதற்கு எனது தார்மீக பொறுப்பு என்று சாஸ்திரி கூறிவிட்டு ராஜினாமா செய்துள்ளார். இதேபோன்ற சம்பவத்தை நாடு எதிர்கொள்கிறது, அரசியல்வாதிகள் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×