search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து"

    • இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து பங்கேற்றது.
    • நியூசிலாந்து 3 போட்டிகளிலும் வென்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.

    மும்பை:

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.

    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 3-வது நாள் முடிவதற்குள் இந்தப் போட்டியில் நியூசிலாந்து 25 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    ஆட்டநாயகன் விருது அஜாஸ் படேலுக்கும், தொடர் நாயகன் விருது வில் யங்குக்கும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற மகத்தான சாதனையை நியூசிலாந்து படைத்தது.

    • இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அபாரமாக வென்றது.
    • இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டது.

    துபாய்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி என 62.82 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.

    இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (50.00 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
    • இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் சிறிது முன்னேற்றம் கண்டது.

    துபாய்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து நியூசிலாந்து 6வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு முன்னேறியது.

    இங்கிலாந்து 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று மற்றும் அரையிறுதி முடிந்துள்ளன.

    இந்நிலையில், துபாயில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அமெலியா கெர் 43 ரன்களும் ப்ரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஓரளவு தாக்குப் பிடித்து 33 ரன்கள் எடுத்தார்.

    முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
    • அக்டோபர் 24 ஆம் தேதி புனேவில் 2 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்

    அண்மையில் ரஞ்சி கோப்பையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளை வென்று இந்திய அணியை தொடரை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    அக்டோபர் 24 ஆம் தேதி புனேவில் 2 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன் ), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன் ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    • சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை கே.எல்.ராகுல் தொட்டு பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
    • முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கே.எல்.ராகுல் 2 ஆவது இன்னிங்சில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் ஆட்டம் நடந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

    பின்னர் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 107 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை கே.எல்.ராகுல் தொட்டு பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தை தொட்டு பார்ப்பார். அதனையும் கே.எல்.ராகுலின் இந்த வீடியோவையும் நெட்டிசன்கள் தொடர்புப்படுத்தி தனது கடைசி டெஸ்டில் கே.எல். ராகுல் விளையாடியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கே.எல்.ராகுல் 2 ஆவது இன்னிங்சில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

    இப்போட்டியில் காயம் காரணமாக விளையாடாத சுப்மன் கீல் அடுத்த போட்டியில் இந்திய அணியில் இணையவுள்ள நிலையில் கே.எல்.ராகுலின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 2 ஆவது இன்னிங்சில் சதமடித்ததால் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
    • இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் ஆட்டம் நடந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

    நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே 91 ரன்களும், வில் யங் 33 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும்ம், டிம் சௌதி 65 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

    இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 52, விராட் கோலி 70, சர்ஃபராஸ் கான் 150, ரிஷப் பண்ட் 99 ரன்களை அடிக்க இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 107 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நியூசிலாந்து அணி களமிறங்கியது.

    துவக்கத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறிய நியூசிலாந்து அணி மிக கவனமாக ஆடி வந்தது. அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இவருடன் களமிறங்கிய டெவான் கான்வே 17 ரன்களில் அவுட் ஆனார்.

    இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் அந்த அணி முதல் டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் வில் யங் 48 ரன்களையும் ரச்சின் ரவீந்திரா 39 ரன்களையும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜார்ஜியா பிளிம்மர் அதிக பட்சமாக 33 ரன்கள் எடுத்தார். சூஸ் பெட்ஸ் 26 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தியேந்திரா டோடின் 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். அந்த அணியின் தியேந்திரா டோடின் ஓரளவு போராடி 33 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • நியூசிலாந்து அணி 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னும், ரிஷப் பந்த் 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

    நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே 91 ரன்களும், வில் யங் 33 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும்ம்,டிம் சௌதி 65 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்து வருகிறது. 

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த நியூசிலாந்து 160 ரன்கள் குவித்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் சோபி டிவைன் அரை சதமடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர்.

    இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டும், லீ டஹுஹு 3 விக்கெட்டும், ஈடன் கார்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.
    • டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.

    துபாய்:

    இலங்கை, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.

    டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து 3 இடங்கள் சரிந்து 7-வது இடத்திற்கு சென்றது.

    இங்கிலாந்து 4-வது இடத்திலும், வங்கதேசம் 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன.

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியுள்ளது.
    • நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை.

    நேற்று நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம், ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரால் 2-ம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இந்த மைதானத்தில் பெண்களுக்கு கழிவறை கூட இல்லை என போட்டியை காணச் சென்றவர்களும் புகார் கூறியுள்ளனர்.

    2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×