என் மலர்
நீங்கள் தேடியது "சர்க்கரை நோய்"
- பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.
- காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும்.
வேர்க்குரு அல்லது வெப்ப சொரி என்பது மருத்துவ ரீதியாக மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, அக்குள் மற்றும் தொடைகளில் வேர்க்குரு பொதுவாகக் காணப்படுகிறது.

கோடை காலத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வியர்வை சுரப்பிகளில் இறந்த தோல் செல்கள் மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.
இது மிலியாரியா கிரிஸ்டலினா (படிக வேர்க்குரு), மிலியாரியா ருப்ரா (சிவப்பு வேர்க்குரு), மிலியாரியா ப்ரோஃபுண்டா (உட்புற வேர்க்குரு) என்று மூன்று வகைப்படும். வேர்க்குரு ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்.
வியர்வை சுரப்பிகள் முதிர்ச்சி அடையாத நிலை (பிறந்த குழந்தைகள்), அதிக வெப்பமான அல்லது ஈரப்பதமான சூழல், காய்ச்சல், தீவிர உடற்பயிற்சி, மரபணு காரணங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள் (டையூரிடிக்ஸ்), உடல் பருமன், நீரிழிவு நோய், புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்.
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலோருக்கு காணப்படும் நரம்பு பாதிப்பு (நியூரோபதி) மற்றும் ரத்த நாளங்களின் அடைப்புகளால் (பெரிபெரல் வாஸ்குலர் நோய்) தோல் வறட்சி உண்டாகி வேர்க்குரு ஏற்பட வழி வகுக்கிறது.

இதனை தடுக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தியாலான தளர்வான ஆடைகளை அணியவும். பாலியஸ்டர் துணிகளை அணிய கூடாது. சருமத்திற்கு எரிச்சலூட்டும் வாசனை சோப்பு மற்றும் இதர அழகு சாதன பொருட்களை தவிர்க்கவும்.
வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க குறைந்த பட்சம் தினமும் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெயிலில் குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி கண்டிப்பாக செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், குடை அல்லது தொப்பியை பயன்படுத்த வேண்டும்.

உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
பெரும்பாலும் வேர்க்குரு குளிர்ந்த சூழலுக்கு மாறும் போது தானாகவே சரியாகிவிடும். அரிப்பு குறையவில்லையெனில் மருத்துவரை கலந்தா லோசித்து காலமைன் லோஷன் அல்லது ஸ்டீராய்ட் கிரீம்களை பயன்படுத்தலாம்.
- பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.
- தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும்.
பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இந்தியாவில் பித்தப்பை கற்கள் நோயினால் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் ஏற்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பித்தப்பை கற்கள் ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்:
உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால், கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள்.
பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. இவை அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கான சிகிச்சை அவசியம்.
வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய தேவையில்லை. பித்தப்பை கற்களை கரைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இம்முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்றஅறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பித்தப்பை கற்களை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் கூடாது. ஏனெனில் விரதம் இருப்பது பித்தப்பை இயக்கத்தைக் குறைப்பதால், பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாக வழிவகுக்கிறது. புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பதப்படுத்தபட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
- வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்த உதவுகிறது.
- சொரியாசிஸ் நோய் விரைவில் குணமடைய உதவுகிறது.
நன்னாரி சர்பத் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வெயில் காலங்களில் தாகத்தை தணிக்க அனைவராலும் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானம். ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளது.

இதில் சபோனின், பிளவனாய்ட்ஸ், அல்கலாய்ட்ஸ், பினோலிக் காம்பௌண்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. அது மட்டுமல்ல, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றுகிறது. இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.
மேலும் இதிலுள்ள சபோனின் என்ற ஆன்டிஆக்ஸிடண்ட் தோலில் உள்ள அகநச்சுடன் கலந்து சொரியாசிஸ் நோய் விரைவில் குணமடைய உதவுகிறது. இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடுகள் உள்ளதால் நன்னாரி பல ஆண்டுகளாக தொழு நோய் மற்றும் சிபிலிஸ் நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பிளேவனாய்ட்ஸ் கல்லீரல் பாதிப்புகளை தடுக்க துணை புரிகிறது. நன்னாரி சர்பத் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பண்பையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, நன்னாரி சருமத்திற்கு பொலிவை தருவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்த உதவுகிறது. நன்னாரி சர்பத்தை குடிப்பதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. எனினும் இதனை அதிக அளவு குடிக்கும் போது இதில் உள்ள சபோனின் சில சமயங்களில் வயிற்றில் எரிச்சல் அல்லது புண் போன்றவற்றை உண்டாக்க கூடும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பின்னரே நன்னாரி சர்பத்தை பருக வேண்டும். நன்னாரி சர்பத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும், இதில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சர்க்கரை நோயளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகமாக்க கூடும்.
அதனால் சர்க்கரை நோயாளிகள் நன்னாரி சர்பத் குடிக்கும் போது சர்க்கரை சேர்க்காமலோ அல்லது சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளை கலந்தோ பருகலாம். நன்னாரியை சர்பத் வடிவில் குடிப்பதை விட வெறும் வேர்களை சுத்தம் செய்து, மண்பானை தண்ணீரில் போட்டு தினசரி தேவைகளுக்கு குடிப்பதற்கு பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
- பொதுவில் அதிக கெட்ட கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.
- சர்க்கரை அளவு குறைவது என்பது சற்று ஆபத்தானது. கையில் ஒரு சாக்லெட் கூட வைத்திருக்கலாம்.
சர்க்கரை நோய், நீரழிவு நோய் என பிரம்மாண்ட வளர்ச்சியினை பெற்றுள்ள இந்த நோய் உலகினையே உலுக்கிக்கொண்டு இருக்கின்றது என்பதுதான் உண்மை. இன்சுலின் ஹார்மோன் ரத்தத்தில் இருந்து சர்க்கரையினை செல்களுக்குள் செலுத்தி சக்தியாக செயல்படச் செய்கிறது. சர்க்கரை நோய் என்றால் உடல் தேவையான இன்சுலினை சுரக்கவில்லை அல்லது இன்சுலினை முறையாக செயல்படுத்த முடியவில்லை என்பதே பொருள்.
சிகிச்சை எடுக்கப்படாத உயர் சர்க்கரை உடலில் கொண்டவர்களுக்கு கண்கள், சிறுநீரகம், நரம்புகள் என ஒவ்வொரு உறுப்பினையும் பாதித்து விடும். இதனைப் பற்றி நன்கு அறிந்து கொள்வது வரும்முன் காப்பதற்கும், வந்து விட்டால் முறையாய் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் பயன்படும்.
நீரழிவு நோய் பிரிவு-1: இதனை Autoimmune நோய் என்பர். நம் நோய் எதிர்பப்பு சக்தியே நம் உடலில் கணையத்தில் உள்ள நல்ல செல்களை அழித்து விடுகின்றது. கணையம் தானே இன்சுலினைத் தர வேண்டும். அதுவே அழிந்தால் என்னாவது இதன் காரணம் என்ன? என்பதனை இன்னமும் தெளிவாகச் சொல்ல முடிவதில்லை. இதனை தன்னுடல் தாக்கு நோய் பிரிவில் குறிப்பிடுகின்றனர்.
பிரிவு-2 சர்க்கரை நோய்: 90 முதல் 95 சதவீதம் வரை சர்க்கரை நோய் உடையவர்கள் இந்த பிரிவில்தான் உள்ளனர். நமது செல்கள் இன்சுலினுக்கு முறையாய் செயல்பாட்டில் இயங்காது இருக்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் சர்க்கரைக்கு பொதுவான அறிகுறிகள்:
* பசி அதிகரித்தல் * தாகம் அதிகரித்தல் * எடை குறைவது * அடிக்கடி சிறுநீர் செல்லுதல் * தெளிவான பார்வை இன்மை * மிக அதிக சோர்வு * ஆறாத புண்கள் (அல்லது) ஆறுவதற்கு அதிக காலம் பிடிக்கும் புண்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஆண்களுக்கு தசைகளின் வலிவு, உடலில் சக்தி குறைந்தது போல் இருக்கும்.
பெண்களுக்கு பிறப்புறுப்பில் வறட்சி, அரிப்பு, பூஞ்ஞை பாதிப்பு, சிறுநீர் பாதையில் கிருமி பாதிப்பு என இருக்கும். சர்க்கரை நோய் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதினை ரத்த பரிசோதனை செய்யும் பொழுதே பல நேரங்களில் கண்டறிய முடியும்.
சர்க்கரை நோய் முதல் பிரிவு குழந்தை பருவம் முதல் விடலை பருவத்தில் கூட ஏற்படலாம். வெகு சிலருக்கு வளர்ந்த காலத்திலும் பாதிப்பு ஏற்படலாம்.
இது வேகமான பாதிப்பினை குறுகிய காலத்திலேயே ஏற்படுத்தி விடும். உதாரணமாக வெகு வேகமான காரணமின்றி எடை குறைதல், வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படலாம். காலம் தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் மட்டுமே பல பிரச்சினைகளில் இருந்து தீர்வு தரும்.
சர்க்கரை நோய் பிரிவு 2: இது மெதுவாக உருவாகும். பலருக்கு சில காலம் எந்த அறிகுறிகளுமே இருக்காது. அறிகுறிகளும் மிகக் கடுமையாக இல்லால் இருப்பதால் ஆரம்பிக்கும் பொழுது அதனை கவனிக்காமல் பலர் தவறி விடுகின்றனர். காலப்போக்கில் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் கொண்டு வராவிட்டால்
* சரும பாதிப்பு * பார்வை இழத்தல் * பாதங்களில் புண் * கால், கைகளில் மதமதப்பு, வலி போன்றவை ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் கட்டுப்பாட்டிற்குள் சர்க்கரை அளவினை வைக்கவில்லை என்றால் பாதிப்புகள் ஏற்படும். இதனை தனிப்பட்ட முறையில் கூறுவதே நல்லது. அதாவது கர்ப்பிணிப் பெண்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
பிரிவு-1, பிரிவு-2 கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு சிகிச்சை முறைகள் பாதிப்பின் அளவிற்கேற்ப மாறுபடும்.
எந்த பிரிவிலும் கார்ப்போஹைடிரேட் அளவினை கட்டுப்பாட்டில் வைப்பதும், சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்ளாது இருப்பதும் மிக அவசியம்.
உடற்பயிற்சி என்பது அவசியம். அதிகமாக ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்கள் செய்வது போன்ற பயிற்சிகள் கூடாது. வயது, வேலை இவற்றினை் பொறுத்து மருத்துவர் உடற்பயிற்சி முறை, நேரம் இவற்றினை அறிவுறுத்துவார்.
* நடப்பது * நடனம், * சைக்கிள், * நீச்சல் இவைகளை மருத்துவர் ஆலோசனைப்படி செய்யலாம்.
பொதுவில் அதிக கெட்ட கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். சிறு சிறு அளவில் உண்ண வேண்டும். மருத்துவர் அனுமதித்த பழங்கள் மற்றும் முழு தானியங்கள் பெரும் உதவி செய்யும். அதிக எடை இருப்பின் முதலில் அதனை முறையாய் குறைத்தாலே பல பிரச்சினைகள் தீரும். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது நல்லது.
கீரை, ப்ரோகலி, காலிபிளவர், பச்சை காய்கறிகள், தக்காளி, குடை மிளகாய், நாட்டு காய்கறிகள், முழு தானிய உணவுகள் நார்சத்து இவை மிகுந்த பயனைக் கொடுக்கும். கொட்டை வகைகள், வேர்க்கடலை இவற்றினை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். தேவையான அளவு நீர் குடிப்பதும் அவசியம். மது, புகை இவை கண்டிப்பாக கூடாது.
வைட்டமின் டி சத்து உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.
* வைட்டமின்கள், தாது உப்புகள் குறைபாடு இல்லாது இருக்க மருத்துவர் ஆலோசனைப்படி சத்து மாத்திரைகள் எடுப்பது அவசியம்.
* 3 மாதத்திற்கான சர்க்கரை அளவினை ரத்த பரிசோதனை மூலம் சரி பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டிலேயே பரிசோதனை கருவி மூலமும் சரி பார்த்துக் கொள்ளலாம்.
* சிலருக்கு அவ்வப்போது குறைந்த சர்க்கரை அளவும் ஏற்படலாம்.
* சில்லிப்பு * உடல் நடுக்கம் * மயக்கம் * படபடப்பு * பசி * வயிற்றுப் பிரட்டல் * குழப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.
சர்க்கரை அளவு குறைவது என்பது சற்று ஆபத்தானது. கையில் ஒரு சாக்லெட் கூட வைத்திருக்கலாம். இதனை உங்கள் மருத்துவர் மூலம் நேரடி விளக்கம் பெற வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பிற்கு விருந்தும் கூடாது. கடும் விரதமும் கூடாது.
அதிகம் பலப்படுத்தப்பட்ட சிகப்பு மாமிசம், அதிக கொழுப்பு சத்து மிகுந்த பால், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், பாக்கெட்டில் ரெடிமேடாக கிடைக்கும் கொரிக்கும் உணவுகள். அதிக மாவுச் சத்து நிறைந்த உணவுகள், சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகள், உயர் பழங்கள், பொரித்த உணவுகள், ஜூஸ், சர்க்கரை சேர்த்த பானகங்கள் என இவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை.
பச்சை காய்கறிகள், வேக வைத்த காய்கறிகள், தக்காளி, வைட்டமின் 'சி' சத்து நிறைந்த பழங்கள், முழு தானியம், கொட்டை வகைகள், பருப்பு, கொழுப்பு இல்லாத பால், தயிர் என உண்ணும் பழக்கம் உருவாக வேண்டும். 20 வருடங்களுக்கு முந்தைய காலத்தினை விட இன்று சர்க்கரை நோயாளிகளுக்கு பல முன்னேற்ற வகையிலான மருந்துகள் ஊசி முறைகள் என பல பிரிவுகளில் சிகிச்சைகள் உள்ளன. ஆயினும் முதல் சிகிச்சையாக முறையான உணவு, உடற்பயிற்சி இவைவே முதல் முக்கியத்துவம் பெறுகின்றன.
வெந்தயம் எடுத்துக் கொள்பவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு மேல் எடுத்துக் கொள்வது சில வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
இன்சுலியன் செடி- இதற்கு இன்னமும் முழுமையான ஆய்வு முடிவுகள் வெளியாகவில்லை.
பிரிவு - 1 நீரிழிவு நோய் என்றாலே நாம் செயற்கை முறையில் உடலுக்கு இன்சுலின் கொடுத்து ஆக வேண்டும்.
பிரிவு-1 பிரிவு-2 சர்க்கரை பாதிப்பிற்கு என்ன வித்தியாசம்? பிரிவு-1ல் கணையம் இன்சுலின் ஹார்மோன் சுரப்பதே இல்லை. முழுமையாக நாம் அதனை வாழ்நாள் முழுவதும் உடலில் ஊசி மூலமாக அன்றாட மருத்துவர் சொல்லும் அறிவுரைப்படி செலுத்திக் கொள்ள வேண்டும்.
பிரிவு-2ல் கணையம் போதுமான அளவு இன்சுலின் சுரப்பதில்லை அல்லது கூடவே உடல் இன்சுலினை அது ஏற்றுக்கொள்ள வேண்டிய அளவு ஏற்பதில்லை. பிரிவு-1 குழந்தைகள், இளம் வயது இவற்றிலேயே ஏற்பட்டு விடும் என்பது பொதுவானது. என்றாலும் வளர்ந்த பிறகும் இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆயினும் பிரிவு-1 வகை சர்க்கரை நோய் பாதிப்பு பிரிவு-2 ஐ விட குறைவு தான்.
கீட்டோ அசிடோசிஸ் என்பது சற்று கவலை தருவதான பாதிப்பாக பிரிவு ஒன்றிற்கு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இந்த பாதிப்பு ஏற்படுவதன் காரணம் உடல் தேவையான அளவு இன்சுலின் இல்லாத பொழுது தாக்குதல் ஏற்படும். இன்சுலின் எடுக்க மறந்து விடுதல் அல்லது போதுமான அளவு எடுக்கத் தவறுதல். அதிக சூடு, அதிக குளிர் இவற்றினால் இன்சுலின் பாதிக்கப்பட்டு செயலிழத்தல், காலாவதியான இன்சுலின், உடல் நோய், கிருமி தாக்குதல், மன உளைச்சல், கர்ப்ப காலம், கணைய வீக்கம், இருதய மாரடைப்பு, பக்கவாதம், மது, புகை, போதைப் பழக்கம், சில மருந்துகள் இவற்றின் காரணமாக இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டு கீட்டோ அசிடோசிஸ் பாதிப்பு ஏற்படலாம்.
இதற்கான பரிசோதனைகளை மருத்துவர் செய்து சிகிச்சை மேற்கொள்ளலாம். பரம்பரை, கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை பிரிவு- 1, 2 இவையும் பாதிப்பிற்கு காரணமாகின்றன.
கீட்டோ அசிட்டோசிஸ் பாதிப்பின் அறிகுறிகள்: வாந்தி, வயிற்று வலி, வேகமாய் மூச்சு வாங்குதல், குழப்பம், மயக்கம், நினைவிழத்தல் போன்றவை இருக்கும். பிரிவு-1 சர்க்கரை நோய்க்கான தீவிர ஆய்வுகள் இன்றும் நடைபெறுகின்றது.
இருப்பினும் தாய்க்கு இவ்வாறு இருப்பின் பிள்ளைகளுக்கு ஒரு சதவீதம் முதல் 4 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் தந்தைக்கு இருப்பின் 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. தாய், தந்தை இருவருக்கும் பிரிவு-1 வகை பாதிப்பு இருந்தால் பிள்ளைகளுக்கு 30 சதவீதம் வரை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது.
குழந்தைகளுக்கு பிரிவு 1 பாதிப்பு ஏற்படும் பொழுது குழந்தைகள் ஹார்மோன் பிரிவு சிறப்பு படிப்பினை மேற்கொண்டவரே சிகிச்சை அளிக்கின்றார். எடை, வயது, உடல் உழைப்பு, உணவு உண்ணும் வகை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இவற்றினை கொண்டே இன்சுலின் அளவு நிர்ணயிக்கப்படுகின்றது.
இன்று இன்சுலின் ஊசி, பேனா போன்ற கருவி, பம்ப், வாயில் உள்ளிழுக்கும் வகை (ஆஸ்துமா இன்ஹேலர் போன்றது) என பல முன்னேற்ற வழிகளில் அளிக்கப்படுகின்றது. இன்சுலின் எடுக்கும் பொழுது வேகமாய் சர்க்கரை அளவு குறைந்து விடாமல் பாதுகாக்க தெரிந்து கொள்ள வேண்டும். இதன் அறிகுறிகள் முன்னமே குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் அவசியம் கருதி மீண்டும் ஒரு முறை பார்ப்போம். நடுக்கம், அதிக வியர்வை, வேகமான இருதயத் துடிப்பு, மயக்கம், வெளிறிய சருமம், பசி, வயிற்றுப் பிரட்டல், தூக்கமின்மை, தளர்ந்து விடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தானே முதலில் வீட்டில் பரிசோதனை கருவிக்கொண்டு சர்க்கரை அளவினை பரிசோதித்து கொள்ளலாம்.
70mg/dt என்பதற்கும் கீழே சர்க்கரை அளவு என்பது ஆபத்தானது. உடனே ஏதாவது ஒரு மாவு சத்து உணவு கூட உட்கொள்ளலாம். 20 நிமிடங்கள் சென்று ரத்த பரிசோதனை செய்து தேவையெனில் கூடுதல் 20 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட் உணவு எடுத்துக் கொள்ளலாம். இதனை தனிப்பட்ட முறையில் மருத்துவர் ஆலோசனை பெற்று தெரிந்து கொள்வதே நல்லது.
தாய், தந்தைக்கு பாதிப்பு இருந்தால் தனக்கு வரும் வாய்ப்பு உள்ளதா என்பதனை ஆட்டோ ஆண்ட்டி பாடிஸ் பரிசோதனையை உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் செய்து கொள்ளலாம்.
பிரிவு-1 சர்க்கரை நோய் என்பது சிறந்த கண்காணிப்பில் இருக்க வேண்டிய ஒன்று. பாதிப்புகளாக கண் சார்ந்த பிரச்சினைகள், பாத பிரச்சினைகள், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, வாயில் பாதிப்பு, நரம்பு பாதிப்பு, சரும பாதிப்பு, பக்கவாதம் என எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
குழந்தைகளுக்கு பாதிப்பு என்றால் அவரது பள்ளி ஆசிரியை அவரைப் பற்றி அறிய வேண்டும். குழந்தையின் பையில் நோய் பற்றிய குறிப்பு, தொலைபேசி எண் போன்றவை இருக்க வேண்டும்.
பிரிவு- 2 வகை பிரிவினை பற்றி மீண்டும் பார்க்கும் பொழுது அளவான எடை, முறையான பரிந்துரைக்கப்பட்ட உணவுகள், உடற்பயிற்சி, இவை சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்கும் என்பதனை நினைவுபடுத்திக் கொள்கின்றோம். இதற்கான அறிகுறிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாதிக்கும் நீரிழிவு என்றாலே, அதுவும் கட்டுப்படாத நீரிழிவு என்றாலே ஒரு மாதிரி தான். அநேகமாக மறதி இருக்கும். மறதி நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. சில சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளதாக இருக்கும் பொழுது மேற்கூறிய முறைகளை கடைப்பிடித்தால் அதிக காலம் தள்ளிப்போடும் வாய்ப்புகள் உள்ளது.
Hbai 6.5 சதவீதத்துக்கு கீழ் உங்கள் ரத்த பரிசோதனையில் இருந்தாலே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். இன்று அநேக பிரீ டயபட்டிக் எனும் நிலையில் உள்ளனர். கழுத்து, கை, உள் மடிப்பு இவற்றில் சில மாற்றம், அடர்ந்த கருநிறம் போல் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வேகமான முறையான முயற்சி கைமேல் பலன் தரும். சர்க்கரை நோய் வராமல் தடுப்போம். வந்தவர்கள் அதனை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.
- 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
ராய் டிரஸ்ட் இன்டர்நே ஷனல், ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து பொது, சர்க்கரை மற்றும் இருதய நோய் இலவச மருத்துவ முகாம் ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயக்காரன்புலம் அரிமா சங்க தலைவர் அரிமா மாதவன் தலைமையில் நடைபெற்றது.
ஆயக்கா ரன்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் மற்றும் திருத்துறைப்பூண்டி ஹரிஸ் தங்க மாளிகை உரிமையாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார தலைவர் அங்கை. ராசேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருத்தினராக ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பன் கலந்து கொண்டார்.
காமாட்சி மெடிக்கல் சென்டர் மூத்த மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர்கள் சசிகலா, ராகுல்யா உடல்நலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.
முகாமில் பொருளாளர் முருகானந்தம், அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், இயக்குநர்கள், உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடை ந்தனர். நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், பி.எம்.ஐ, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இருதய பரிசோதனைகள் (இ.சி.சி.மற்றும் எக்கோ) செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
- வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே சர்க்கரை நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது.
- சர்க்கரை நோய் பாதிப்பு வட மாநிலங்களில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
சென்னை:
வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே சர்க்கரை நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 27.4 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 22.3 சதவீதம் பேரும், ஆந்திராவில் 21.1 சதவீதம் பேரும் அந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை கோவாவில் 22.7 சதவீதம் பேருக்கும், புதுச்சேரியில் 22 சதவீதம் பேருக்கும், லட்சத்தீவுகளில் 21.9 சதவீதம் பேருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. அதேவேளையில் வட மாநிலங்களான உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது.
தென்னிந்தியாவின் உணவு பழக்கவழக்கமும், அது சார்ந்த மரபணுவும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோன்று உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவையும் பிரதானமாக கூறப்படுகிறது.
- அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது.
- ர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.
சர்க்கரை நோய் டாக்டர் ஒருவர் கூறும் போது, "நவீன ஆலைகளில் தீட்டப்பட்டு அழகான சாக்கு பைகளில் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யப்பட்டு வரும் அரிசிகளில் பெருமளவில் காணப்படுவது மாவுச்சத்து மட்டுமே. இந்த அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது. இதனை 'குளுக்கோஸ் ரைசிங் எபெக்ட்' என்போம். இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.
நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து வெள்ளை அரிசியை உண்ணும்போது அவர்களின் உடல் நிலை மேலும் மோசமாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக சிவப்பு அரிசி என்று சொல்லப்படும் பாரம்பரிய தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியை உண்ணும்போது அதில் இருக்கும் அதிகமான வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவை உடலில் சர்க்கரை உயர்வதை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு வருவதை தடுப்பதுடன், நீரிழிவு இருந்தாலும் கட்டுக்குள் வைக்கிறது" என்றார்.
- இன்சுலின் தாவரத்தின் 2 இலைகள் தின்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
- ஒரு நாளைக்கு 2 இலைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம்.
திருப்பதி:
சர்க்கரை நோய் இன்று வேகமாக பரவி வருகிறது ஒரு காலத்தில் 45 வயதுக்கு மேல் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை பணக்கார நோய் என்று கூறி வந்தார்கள்.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. சிறு குழந்தை முதல் சக்கரை நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனாலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என ஒரு சிலர் புலம்புவதையும் காணமுடிகிறது.
இந்த நிலையில் சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை தேவை இல்லை. இன்சுலின் தாவரத்தின் 2 இலைகள் தின்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும் என ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் மொட்டமறி சந்தீப் கூறியுள்ளார்.
இவர் அவரது வீட்டு மாடியில் சிறிய தோட்டம் அமைத்து அதில் இன்சுலின் செடிகளை வளர்த்து வருகிறார்.
இதன் மூலம் தனது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டதன் மூலம், கடந்த 7 ஆண்டுகளாக நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன்.
"நான் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு கடந்த 7 வருடங்களாக இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டு வருகிறேன். மேலும், இந்த 7 ஆண்டுகளில் நான் எந்த டாக்டரையும் பார்க்கவில்லை.
இன்சுலின் தாவரங்களை நான் வழங்கி வருகிறேன். "இலைகளை தவறாமல் எடுத்துக்கொண்ட பிறகு, அவர்களின் ரத்த சர்க்கரை அளவு குறைவதைக் கண்டேன்.
ஒரு நாளைக்கு 2 இலைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம். மேலும் காலையில் ஒரு இலையையும் மாலையில் மற்றொரு இலையையும் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குளிர்பானங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது
- புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வில் புற்றுநோயை உண்டாக்கலாம் எனத் தெரியவந்துள்ளது
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு மாற்றாக காபி, தேநீர் போன்ற பானங்களில் 'அஸ்பார்டேம்' எனும் செயற்கை இனிப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவான புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC), அஸ்பார்டேமின் பாதுகாப்பு மதிப்பாய்வை நடத்தியிருக்கிறது.
அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் அதன் அறிக்கை குறித்து வரும் செய்திகளின்படி, இந்த செயற்கை இனிப்பான அஸ்பார்டேம், 'மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்' என இந்த அமைப்பு முத்திரையிட தயாராகி வருகிறது.
புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த பாதுகாப்பு மதிப்பாய்வு இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் அஸ்பார்டேம் அபாயகரமானதா? இல்லையா? என்பதை மதிப்பீடு செய்வதற்காகவே நடத்தப்பட்டது. ஆனால், ஒரு நபர் இதுபோன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை உட்கொள்வதில் பாதுகாப்பான அளவு எவ்வளவு என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
1980 வருட ஆரம்பங்களில் இருந்தே டேபிள்-டாப் இனிப்பு எனப்படும் அஸ்பார்டேம், சர்க்கரை போன்ற பொருட்களுக்கு ஒரு செயற்கை மாற்றாகவும், டயட் சோடாக்கள், சூயிங் கம், காலை உணவு தானியங்கள் மற்றும் இருமல் மருந்து போன்ற தயாரிப்புகளிலும் சுவைக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
- இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம்.
- நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.
பொதுவாகவே இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம். ஏனென்றால் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களையே நாம் அதிகம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். முன்பெல்லாம் 40- 45 வயதுக்குப் பிறகு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதற்கான டெஸ்ட் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்போது 30 வயதை எட்டியதுமே சர்க்கரைநோய்க்கான டெஸ்ட் எடுக்கச் சொல்கிறோம்.
ஒருகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி, அதில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அளவுக்கு அதிகமான அந்த உணவு கொழுப்பாக உடலில் சேரும். கொழுப்பாக சேரும் அந்த தன்மை இன்றளவும் நம் மரபணுக்களில் இருக்கிறது.
நம்மில் பலரும் பசித்த பிறகு உணவு உண்ணும் பழக்கம் இல்லை. நேரத்துக்கு சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடுவதால் தேவைக்கு அதிகமான உணவானது கொழுப்பாக போய் சேர்ந்துவிடுகிறது. அதனால் நமக்கு சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால்தான் 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய சொல்கிறோம்.
பெற்றோர் இருவரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த நோய் பாதிக்க 60 சதவிகிதம் வாய்ப்பு உண்டு. பெற்றோர் இருவருக்குமே சர்க்கரைநோய் இருந்தால் அந்த வாய்ப்பு 90 சதவிகிதமாக அதிகரிக்கும்.
நம் வாழ்க்கைமுறையும் சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்களில் பிரதானமாக இருக்கிறது. உடலியக்கமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வது, இரவில் தாமதமாகவும் அதிகமாகவும் சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, இரவில் கண்விழித்திருப்பது என நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குப் பழகும்போது சர்க்கரைநோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை வரவிடாமல் தடுக்க முடியும். ஸ்ட்ரெஸ்சும் மிக முக்கிய காரணம்.
ஏற்கெனவே நம் மரபணுக்களில் நீரிழிவுநோய்க்கான தன்மை இருக்கும்போது மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களும் சேரும்போது 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரைநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் 30 ப்ளஸ்சிலும், வாழ்வியல் மாற்றங்கள் இருப்பதாக உணர்பவர்கள் 40 ப்ளஸ்சிலும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்ப்பது அவசியம்.
- உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
- கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.
காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.
முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.
- நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது.
- சர்க்கரை நோய் உருவாகுவதற்கு காரணம் மைதாவில் தயாராகும் உணவுகள்தான்.
வளர்ந்து விட்ட நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது. புதிது புதிதாக பரவுகின்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அதை பரிசோதிக்க முதலில் எலிக்கு செலுத்துவதே வாடிக்கையாக உள்ளது. ஏனெனில் தயாரிக்கப்படும் மருந்து மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு.
அதனால் என்ன என்கிறீர்களா? உலகில் தற்போது பரவலாக காணப்படும் சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், அது வராமல் தடுக்கவும் அனைவரும் முயற்சி செய்வார்கள். அதற்காக சில யோசனைகளையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும். ஆனால் பெரும்பாலும் இந்த சர்க்கரை நோய் உருவாகுவதற்கு காரணம் மைதாவில் தயாராகும் உணவுகள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சர்க்கரை நோய் தடுப்புக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எலிக்கு கொடுத்து பரிசோதிப்பதற்காக எலிக்கு முதலில் சர்க்கரை நோயை உருவாக்குகின்றனர். இதற்காக அவர்கள் அலாக்சாம் என்ற மருந்தை ஊசி மூலம் அதன் உடலில் செலுத்துவதாகவும், இந்த ஊசியை செலுத்திய மறுநாள் எலிகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்.
இந்த அலாக்சாம் ஊசி தயாரிக்க பயன்படும் கெமிக்கல் மைதாவில் நிறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து ஓட்டல்களிலும் பரோட்டா உணவு வழங்கி வருகின்றனர். மக்களும் இதை ஆர்வத்துடன் சாப்பிட்டு செல்கின்றனர். இந்த பரோட்டாவுக்கு பயன்படும் மைதாவை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் அதில் எலிக்கு செலுத்தப்படும் அலாக்சாம் கெமிக்கல் நிறைந்திருப்பதாக மதுரை கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தானோ என்னவோ கேரளாவில் உள்ள உணவகங்களில் பரோட்டா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகு வதற்கு இதுபோன்ற உணவு பொருட்களே 70 சதவீதம் காரணமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தி சுகர், கேன்சர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களுக்கு ஆளாகாமல் இருக்க பரோட்டா போன்ற மைதா உணவுகளை தவிர்க்கலாமே! பரோட்டா பிரியர்கள் உஷார்!