என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர் இந்தியா"

    • முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தையும் திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • சலுகைகளை இந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

    இதனை தொடர்ந்து விடுமுறையில் உள்ள ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவும் ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் முன்பதிவு செய்த ராணுவ மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க அந்த நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

    வருகிற 31-ந் தேதி வரை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பாதுகாப்பு படை உள்ளிட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தையும் திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஜூன் 30-ந்தேதி வரை விமானங்களை மறு அட்டவணை படுத்தி சலுகைகளை இந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    • பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலால், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம் நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியா விமானங்கள் பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேலும், போர் பதற்றம் காரணமாக காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி, பூஞ்ச்சில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இன்று மூட உத்தரவிடபட்டுள்ளது. அதன்படி இந்த 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

    • இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டை நெருங்கியுள்ளது.
    • போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டை நெருங்கியுள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், இருதரப்பினரும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில், சாலைகள், வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஹவுதி ஏவுகணையை தாக்கி அழிப்பதில் ராணுவம் தோல்வியடைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த ஏர் இந்திய விமானம், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது.

    டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லி இயக்கப்பட இருந்த விமானத்தையும் ரத்துசெய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    • இரு நாடுகளும் தங்கள் நாட்டின் வான்வழியை பயன்படுத்தத் தடை விதித்துள்ளன.
    • பாதிக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும்

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ராஜாங்க ரீதியிலான தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளால் இருநாடுகளின் பொருளாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

    இரு நாடுகளும் தங்கள் நாட்டின் வான்வழியை பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. இதனால் விமான நிறுவனங்கள் அதிக எரிபொருள் செலவுகளைச் சந்திக்கின்றன.

    இந்நிலையில் பாகிஸ்தான் வான்வெளியில் தடை ஒரு வருடத்திற்கு தொடர்ந்தால் ஏர் இந்தியா சுமார் 600 மில்லியன் டாலர்களை (ரூ.5000 கோடி) இழக்கும். தடை நீடிக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.5000 கோடி இழக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டாடா குழுமம் இழப்பீடு கோரி அரசாங்கத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், பாதிக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் நிலைமை சரியானபிறகு மானியங்களைத் திரும்பப் பெறுமாறும் கூறப்பட்டுள்ளது.

    • ராபின்வுட் படத்தில் டேவிட் வார்னர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்
    • ராபின்வுட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க டேவிட் வார்னர் ஐதராபாத் வந்தடைந்தார்.

    தெலுங்கில் ராபின்வுட் என்ற படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.

    இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்

    இந்நிலையில், ராபின்வுட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க டேவிட் வார்னர் இன்று ஐதராபாத் வந்தடைந்தார்.

    இதனிடையே விமானியே இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் வார்னர் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

    அவரது பதிவில், விமானத்தை இயக்க விமானி இல்லை என தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏறச் சொல்கிறீர்கள்? என காட்டமாக தெரிவித்திருந்தார்.

    மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமாக புறப்பட்டதாக வார்னரின் குற்றசாட்டிக்கரு ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

    • காதுகளில் முத்து காதணிகள் அணிந்து வரக்கூடாது.
    • மதக்கயிறுகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை

    ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாடாவால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இயங்கியது. பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், இந்த நிறுவனத்தை டாடா நிறுவனம் மீண்டும் வாங்கியது. அது முதல் இந்த நிறுவனத்தை லாபகரமாக மாற்ற ஏதுவாக பல மாற்றங்களை செய்து வருகிறது.

    தனது விமானத்தில் பணியாற்றும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தோற்றப்பொலிவைத் தருகிற வகையில் தோற்றத்தில், ஆடை, அணிகலன்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    இந்த மாற்றங்கள் பற்றிய முழு விவரம் வருமாறு:-

    ஆண் ஊழியர்களுக்கு...

    * தலையில் கண்டிப்பாக ஹேர் ஜெல் தடவி இருக்க வேண்டும்.

    * தலையில் திட்டுத்திட்டாக வழுக்கை இருந்தால் முழுமையாக தினமும் ஷேவ் செய்து கொள்ள வேண்டும்.

    * தலைக்கு 'டை' அடிக்கிற வழக்கம் உள்ளவர்கள் இயல்பான நிறச்சாயத்தைப் பயன்படுத்த வேண்டும்.

    * மணிக்கட்டுகளில், கழுத்தில், கணுக்காலில் மத வழக்கப்படியான கயிறுகளை அணியக்கூடாது.

    விமான பணிப்பெண்கள் கீழ்க்காணும் விதி முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    * காதுகளில் முத்து காதணிகள் அணிந்து வரக்கூடாது. சாதாரணமான தங்கம் அல்லது வைர காதணிகளை அணியலாம்.

    * தலைமுடி அலங்காரத்தைப் பொறுத்தமட்டில் குறைந்த அளவிலான (லோ பன்) கொண்டை கூடாது.

    * ஐ ஷேடோ, லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஷேட் கார்டுகளை கண்டிப்பாக பயன்படுத்தி வர வேண்டும்.

    * ஒற்றை வளையல் அணிந்து கொள்ளலாம். அதில் கற்கள் பதிக்கப்பட்டிருக்கலாம்.

    * மோதிரம் இரு கைகளிலுமே ஒரு செ.மீ. அகலத்துக்கு மேல் இருக்கக்கூடாது.

    * மணிக்கட்டு, கழுத்து, கணுக்காலில் மத வழக்கப்படி கயிறு கட்டக்கூடாது.

    * விமானத்தில் பணியாற்றுகிற விமான பணிப்பெண்கள் புடவைகள் அணியலாம். மேற்கத்திய ஆடைகள் அணியலாம். ஆனால் இரண்டும் மெல்லிய, தோல் நிறத்தில் இருக்க வேண்டும். நீளமான காலுறைகளுடன் அணிய வேண்டும்.

    * அரை செ.மீ. விட்டத்தில்தான் பொட்டு வைக்க வேண்டும்.

    பணியில் இல்லாதபோது, சீருடை அணியக்கூடாது. அதையொட்டிய பிற அணிகலன்களும் அணியக்கூடாது.

    சிப்பந்திகள் பொது இடத்தில் ஷாப்பிங் பை அல்லது பிளாஸ்டிக் பை எடுத்துச்செல்லக்கூடாது.

    இவ்வாறு ஏர் இந்தியா கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
    • அறிக்கை அளிக்கும்படி விமான நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கோரியுள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த, ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது, போதையில் இருந்த மற்றொரு பயணி சிறுநீர் கழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

    இதுதொடர்பாக ஏர் இந்தியா குழுமத் தலைவர் என் சந்திரசேகரனுக்கு, பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதியுள்ளார். அதில், "நான் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் தூங்க ஏதுவாக விளக்கு அணைக்கப்பட்ட வேளையில் ஒரு போதை ஆசாமி என் இருக்கைக்கு அருகே வந்தார். நான் சுதாரிப்பதற்குள் அவர் அங்கே சிறுநீர் கழித்தார். அதன்பின்னரும் கூட அவர் ஆடையை சரி செய்யாமல் ஆபாசமாக நின்றார். என் உதவிக் குரல் கேட்டு சக பயணிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். விமான சிப்பந்திகள் எனக்கு வேறு ஆடை அளித்தனர். அந்த இருக்கையின் மீது வேறு சீட் விரித்தனர். நான் எனக்கு ஏற்பட்ட துயரம் பற்றி புகார் அளித்தேன். ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த நபர் எதுவுமே நடக்காததுபோல் இறங்கிச் சென்றார். இந்த விஷயத்தில் விமான சிப்பந்திகள் மெத்தனமாக இருந்துவிட்டனர்" என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் ஒரு மாதத்திற்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா சார்பில் அந்த நபர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    மேலும், இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி விமான நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கோரியுள்ளது. இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறி உள்ளது.

    • அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.
    • அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் தற்போது தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன பணியாளர்களுக்கு தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயணியின் வெறுப்பு முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியது. அவரது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    அறிக்கை செய்யப்பட்டதை விட சம்பவம் சிக்கலானதாக இருக்கிறது. அதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் தெளிவாக உள்ளன. விமானத்தில் ஒரு சம்பவம் முறையற்ற நடத்தையை கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் இடையே

    தீர்க்கப்பட்டு விட்டதாக இருந்தாலும் அதை ஆரம்பத்தில் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
    • விமான சேவைகள் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து விட்டதாக எழுந்த புகார், இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக சங்கர் மிஷ்ரா மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 294 (பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல்), 354 (பெண்ணை மானபங்கப்படுத்துதல்). 510 (குடிபோதையில் பொது இடத்தில் ஒழுங்கின்றி நடந்து கொள்ளுதல்) மற்றும் ஏர் இந்தியா விதிகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சங்கர் மிஸ்ரா கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க நேற்று முன்தினம் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

    இந்த விவகாரம், சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தின் கவனத்துக்கு கடந்த 4-ம் தேதிதான் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளர், விமான சேவை இயக்குனர், விமானிகள், சிப்பந்திகள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில், ஒழுங்குமுறை கடமைகளை மீறியதில் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களிடம் இருந்து அதற்கான பதில்கள் பெறப்பட்டன. அவற்றை சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் பரிசீலனை செய்தது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சம்பவம் அரங்கேறிய விமானத்தின் விமானியின் லைசென்ஸ் 3 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான சேவைகள் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் நடவடிக்கைகளை ஏற்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    • விமானத்தில் மற்றொரு ஆண் பயணி குடிபோதையில் கழிவறைக்குள் புகைப்பிடித்த சம்பவமும் நிகழ்ந்தது.
    • ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்தார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சங்கர் மிஷ்ரா மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 7-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடைவிதிக்கப்பட்டது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் இதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி ஒருவர் தனது அருகில் அமர்ந்திருந்த பெண் பயணி கழிவறைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது இருக்கையில் இருந்த போர்வையில் சிறுநீர் கழித்தார். மேலும் அதே விமானத்தில் மற்றொரு ஆண் பயணி குடிபோதையில் கழிவறைக்குள் புகைப்பிடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா நிறுவனம் தனது பதிலை சமர்பித்தது. அதனை சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் பரிசீலனை செய்தது.

    அதைத்தொடர்ந்து, பாரீஸ்-டெல்லி விமானத்தில் நடந்த இந்த 2 சம்பவங்கள் குறித்தும் முறைப்படி புகார் அளிக்கவில்லை என கூறி ஏர் இந்திய நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நேற்று ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.

    முன்னதாக நியூயார்க்-டெல்லி விமானத்தில் ஆண் பயணி, சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் கடந்த 20-ந்தேதி ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை குஷ்பு விபத்தில் சிக்கி காலில் அடிபட்டு கட்டு போட்டுள்ளார்.
    • ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    சென்னை

    நடிகை குஷ்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியூர் செல்லும் பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்ததாக வலைத்தளத்தில் தெரிவித்து முழங்காலில் கட்டுப்போட்டு இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

    அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    இந்த நிலையில் வெளியூர் செல்ல காலை சென்னை விமான நிலையத்துக்கு சென்ற குஷ்பு அங்கு கால் வலியோடு இருந்த தனக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் உடனடியாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரவில்லை என்று சாடி உள்ளார்.

    டுவிட்டரில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், "முழங்காலில் காயத்துடன் இருக்கும் பயணியை அழைத்து செல்ல சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை. சக்கர நாற்காலிக்காக சென்னை விமான நிலையத்தில் அரைமணிநேரம் காத்து இருந்தேன்.

    அதன்பிறகு வேறு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்துச் சென்றனர். நீங்கள் சிறந்த சேவை செய்ய முடியும் என்று என்னால் உறுதி சொல்ல முடியும்'' என்று பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பானது.

    இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலையை குழுவுக்கு கொண்டு செல்லப்படும்'' என்று தெரிவித்து உள்ளது.

    • புதிய விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    புதிய விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், ரத்தன் டாடா, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகரன், ஏர்பஸ் விமான நிறுவனத்தின் தயாரிப்பான, அகலம் அதிகமாக இருக்கக்கூடிய A350 ரக விமானங்கள் 40 வாங்க உள்ளதாகவும், அகலம் குறைவான 210 விமானங்கள் வாங்க உள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் டாடா நிறுவனம் நல்லுறவை கொண்டிருப்பதாகத் தெரிவித்த சந்திரசேகரன், 250 விமானங்கள் வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

    இதேபோல் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777-9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737MAX அகலம் குறைவான விமானங்கள் வாங்கப்படுகின்றன. விமான வர்த்தக வரலாற்றில் இது மிகப்பெரிய கொள்முதலாக கருதப்படுகிறது.

    ×