என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 177146
நீங்கள் தேடியது "ஸ்குவாஷ்"
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #asiangames2018
ஜகார்தா:
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரில் நடைபெற்று வருகிறது.
13-வது நாளான நேற்று இந்தியாவுக்கு 6 பதக்கம் கிடைத்தது. பாய்மரபடகு போட்டியில் சுவேதா, வர்ஷா கவுதம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (49 இ.ஆர்.எப்.எக்ஸ் வகை) வெள்ளிப்பதக்கம் வென்றது. இதேபோல பெண்கள் ஹாக்கியிலும் வெள்ளி கிடைத்தது.
பாய்மர படகு போட்டியில் ஹர்சிதா தோமர் (ஓபன் லேசர் 4.7 பிரிவு) வருண் தாக்கர்- கணபதி சென்னப்பா (49 இ.ஆர்) ஜோடி மற்றும் விகாஸ் கிருஷ்ணன் (குத்துச்சண்டை) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
மேலும் சவுரவ் கோஷல், ஹரீந்தர், பால்சிங் சாந்து, ரமீத் தண்டன், மகேஷ் மாங் கோகர் ஆகியோர் அடங்கிய ஸ்குவாஷ் ஆண்கள் அணி வெண்கலம் பெற்றது. இந்தியா 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கம் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
குத்துச்சண்டையின் 49 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த டஸ்மட்டோவை சந்திக்கிறார்.
இதில் வென்றால் அமித் தங்கம் வென்று புதிய வரலாறு படைப்பார். தோற்றால் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும்.
ஸ்குவாஷ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனயா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி இன்று பிற்பகல் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆங்காங்கை எதிர்கொள்கிறது. இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி ஆங்காங்கை வீழ்த்தி தங்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றால் வெள்ளி கிடைக்கும்.
ஆசிய விளையாட்டுப் போட்டி நாளையுடன் முடிகிறது. டிரையத்லான் போட்டி மட்டும் நாளை நடக்கிறது.
இந்திய அணி இதுவரை 65 பதக்கம் பெற்றுள்ளது. இன்று 2 பதக்கம் உறுதியாகி உள்ளது. #asiangames2018

இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
சென்னை:
இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமி மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இன்று (புதன்கிழமை) முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 6 நாட்கள் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியும், இதனை தொடர்ந்து அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சவுதிஅரேபியா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து உள்பட 28 நாடுகளை சேர்ந்த 170 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியை நடத்த தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க தலைவர் என்.ராமச்சந்திரனிடம் வழங்கினார்.

×

X