search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாத்து"

    • கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இதனையடுத்து இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவில் இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில் கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். இங்கு நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.
    • சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அசைவ பிரியர்கள் உள்ளதால் ஆடு, கோழி, காடை, வாத்து இறைச்சி விற்பனை ஜோராக நடக்கிறது.

    பருவநிலை மாற்றத்தால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமலால் அவதிப்படுகின்றனர். சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

    சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    இது குறித்து வாத்து முட்டை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் கூறியதாவது, தேவை அதிகரித்ததால், வாத்து முட்டை கடும்தட்டு பாடு ஏற்பட்டதால் வாத்து முட்டை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி முட்டையை விட வாத்து முட்டைகள் அதிக சத்துக்கள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணைகள் மூலம் முட்டை கொள்முதல் செய்து பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்கிறோம். வாத்து முட்டை 12 ரூபாய்க்கும், வேக வைத்த வாத்து முட்டை 15 ரூபாயும், வாத்து முட்டை ஆம்லெட் ரூ.30 ஆகும் விலை உயர்ந்துள்ளது என கூறினார்.

    • கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழிக்குஞ்சு, முட்டை, கோழித்தீவனம், பிற தீவனங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை வாங்க கூடாது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் உறுதியாகி உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போதைய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தாக்குதல் இல்லை. பறவை காய்ச்சல் நோய், பறவை இனங்களை தாக்கும் வைரஸ் தொற்று நோய்.

    இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர் பறவைகள், வனப்பற வைகளை தாக்கும். இந்நோய் கிருமி பல வகையாக இருந்தாலும் 'எச்5என்1' என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது.

    இந்நோய் பாதிப்பு பண்ணையில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழித்தீவனம் மூலம் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை. நோய் வராமல் தடுக்க உயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும்.

    மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், புறக்கடை கோழிகளை நேரில் கண்காணித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து தயார் நிலையில் கால்நடை துறை உள்ளது.

    கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழிக்குஞ்சு, முட்டை, கோழித்தீவனம், பிற தீவனங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை வாங்க கூடாது. கடந்த ஒரு மாதத்தில் இவ்வாறு முட்டை, தீவன பொருட்கள் வாங்கினால் அவற்றை அழிக்கலாம்.

    பண்ணைக்குள் செல்வோர் கால்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்து செல்லலாம். பண்ணைக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அனுமதிக்க வேண்டும்.

    பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும்.

    பண்ணைகளில் அசாதாரண இறப்பு இருந்தால் கால்நடை துறைக்கு தெரிவிக்க வேண்டும். பண்ணையா ளர்கள் வேறு பண்ணைகள், பறவைகள் சரணாலயம் செல்வதையும், பண்ணை க்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    பிற மாநிலத்துக்கு முட்டைகளை எடுத்து செல்ல, காகித அட்டை பெட்டிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அந்த பெட்டிகளை திரும்ப எடுத்து வரக்கூடாது.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஏடாகூடமாக எதையாவது சொல்லி நெட்டிசன்கள் வாய்க்கு அவல் போடும் திரிபுரா முதல்வர் இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் கூடுவதற்கான காரணத்தை கூறி வைரல் ஆகியுள்ளார். #Biplab #BiplabKumarDeb
    புதுடெல்லி:

    திரிபுரா முதல்வராக சில மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றவர் பிப்லப் குமார் தேப், பாஜகவை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர், “மஹாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது” என கூறியிருந்தார். இந்த கருத்து கிண்டலுக்கு உள்ளாகவே, “குறுகிய மனம் கொண்டவர்களால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என சமாளித்தார்.

    இதனால், பிப்லப் தேசிய அளவில் கிண்டலுக்கு உள்ளாகவே, பா.ஜ.க எம்.எல்.ஏ, எம்.பி.க்களிடம் நரேந்திரமோடி ஆப் மூலம் பேசிய பிரதமர் மோடி, மீடியாக்களுக்கு மசாலா தரும் விதமாக யாரும் கருத்து கூற வேண்டாம் என தெரிவித்தார். கட்சியின் செய்திதொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் எந்த விஷயத்திலும் கருத்து சொல்ல வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

    மோடி பேசிய சில நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிப்லப் குமார் தேப், ஐஸ்வர்யா ராய் இந்திய அழகை பிரதிபலிக்கிறார். டயானா ஹைடன் இல்லை என பேச சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே ‘சிவில் எஞ்சினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுந்த தகுதி வாய்ந்தவர்கள், மெக்கானிக்கல் எஞ்சினியர்கள் அல்ல’ என பிப்லப் பேசினார்.

    ‘சிவில் எஞ்சினியர்கள் கட்டிடத்தை எப்படி கட்டுவது என்பதை அறிந்தவர்கள். அரசு திட்டங்களை அவர்களால் முறையாக கட்டமைக்க முடியும். மெக்கானிக்கல் எஞ்சினியர்களுக்கு எப்படி தெரியும்?’ எனவும் அவர் கூறியிருந்தார். பிப்லப்பின் இந்த கருத்தை முன்வைத்தும் பலர் அவரை கிண்டல் செய்தனர்.

    இந்நிலையில், மீண்டும் பிப்லப் வைரலாகியுள்ளார். இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் அளவு கூடுவதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார். 

    ருத்ராசாகர் பகுதியில் நடந்த படகுப்போட்டியை தொடக்கி வைத்த அவர் பேசுகையில், “ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும். வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். இது முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது” என பிப்லப் கூறினார்.

    எந்த விதமான அறிவியியல் தரவுகளும் இல்லாமல் முதல்வர் இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது என அம்மாநில கட்சிகள் இதனை விமர்சனம் செய்துள்ளன. #Biplab #BiplabKumarDeb
    ×