என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் இன்ஸ்பெக்டர்"
- நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
- மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவுசியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நானும், எனது கணவர் முகமதுஅலி ஜின்னாவும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்து வருகிறோம். எனது கணவர் இருசக்கர வாகனத்தில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இதுவே எங்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தினசரி வியாபாரத்துக்கு காலை 5 மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால் கடந்த 8-ந் தேதி வியாபாரத்திற்காக சென்ற எனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
எனது கணவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி எனது கணவர் பழனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. உடனே நானும் எனது குடும்பத்தாரும் பழனி போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது, அவரை பார்க்கவிடாமல் போலீசார் தடுத்தனர். அடுத்த நாள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்பொழுது அவர் உடம்பு முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரிடம் நாங்கள் பேசியபோது, டீ வியாபாரம் செய்தபோது ஒரு பெண்ணை நான் கேலி செய்ததாக கூறி அங்கிருந்தவர்கள் தன்னை தாக்கி புகார் அளித்ததால், போலீசார் கைது செய்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்றார். தற்போது எனது கணவர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனவே எனது கணவரின் நிலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முதன்மைத்தேர்வு- திருப்பூரில் 26-ந் தேதி நடக்கிறது.
- தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக தேர்வுக்கு அறிக்கை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
திருப்பூர்:
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் நிலைய அலுவலர் பணிக்கான முதன்மை தேர்வு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
தமிழ்மொழித்தேர்வு மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக தேர்வுக்கு அறிக்கை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
- கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர்.
- கொலைக்கு உடந்தையாக இருந்த 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவமணிகண்டன் (வயது 28).
இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குறித்து அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி இரவு புகார் அளித்தார். இந்நிலையில் 7-ம் தேதி மாலை 5 மணிக்கு அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சிவ மணிகண்டன் நடுரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசில் புகார் அளித்ததன் காரணமாக சிவ மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் புகார் அளித்த சமயத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுவன் உள்பட 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவ மணிகண்டன் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் காரணமாக தான் குற்றவாளிகள் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாகவும், புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதியை பணி இடைநீக்கம் செய்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாஉல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 50 நபர்களுக்கு பள்ளி சீருடை வழங்குகினர்.
- போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடை தயாரித்தார்.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் பயிலும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்களை கணக்கெடுத்து 50 நபர்களுக்கு அவர்களது உடலுக்கு தகுந்தாற்போல் அளவெடுத்து பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடை தயார் செய்தார்.
இந்த சீருடையை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சந்திரசேகர் பணிபுரிந்து வருகிறார்.
- உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்திரசேகர். இவர் சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உடந்தையாக இருந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு புகார் வந்தது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்கடர் சந்திரசேகர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
- வாகனங்கள் மங்கலம் - பல்லடம் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன.
- இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
திருப்பூர் :
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் பொங்கலூரில் நடந்த கட்சி பிரமுகர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி நேற்று வந்தார். காலை 11 மணி அளவில், அவருக்கு திருப்பூர் அடுத்த மங்கலம் நால் ரோடு அருகே, கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
இதனால் வாகனங்கள் மங்கலம் - பல்லடம் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன. அவ்வழியே பெண் ஒருவர் ஓட்டிவந்த கார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் இடது காலில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் மீது மோதிய பெண் குறித்து விசாரித்துவருகின்றனர்.
- ராஜவேல் பல்லடம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
- கோபாலகிருஷ்ணன் மங்கலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மங்கலம் :
மங்கலம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜவேல் ,பல்லடம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
பல்லடம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கோபாலகிருஷ்ணன் மங்கலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- திருநாவலூர் அருகே கேரள வாலிபர் மயங்கி விழுந்து பலியானார்.
- பஸ்சில் இருந்த பயணிகள் எல்லோரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாலதி சதன் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்மேன் (வயது 32). இவர் சம்பவத்தன்று சென்னை கல்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் மிதுன் வீட்டுக்குச் சென்று விட்டு பின்னர் அங்கிருந்து ஒரு தனியார் டிராவல்ஸ் பஸ்சில் கேரளாவுக்கு சென்றார்.
அப்போது அந்த பஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் ஆஞ்சநேயர் கோவில் என்ற இடத்தில் சென்றபோது டயர் வெடித்து சாலையோரம் நிறுத்தப்பட்டு சரி செய்யும் பணியில் டிரைவர் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் எல்லோரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். அதன் பின்னர் ரஞ்சித்மேன்அவரும் இறங்கி நின்ற போது திடீரென மயங்கி விழுந்து மயக்க நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த பயணிகள் அங்கிருந்து அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு வருகிறார்.
பொன்னேரியை அடுத்த பெரியகாவனம் கிராமத்தை சேர்ந்தவர் டி.ராஜாங்கம். இவர் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.
இவரது பணியை பாராட்டி சமீபத்தில் தமிழக அரசு இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி கவுரவித்தது. ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அந்த பரிசு தொகையுடன் ரூ.5 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.15 ஆயிரம் ரூபாயை தான் படித்த சின்னகாவனம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு அவர் நன்கொடையாக வழங்கினார்.
தனது பள்ளி கால நண்பர்களுடன் தான் படித்த பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளி தலைமை ஆசிரியை லதா ராஜேஷிடம் அந்த தொகையை வழங்கினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், பள்ளியில் 1975-ம் ஆண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படித்தேன். அப்போது என்னுடன் 30 மாணவர்கள் படித்தனர்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்பை பொன்னேரி மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். அண்ணா பதக்கத்துக்காக எனக்கு கிடைத்த பரிசு தொகையை நான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கினேன். சில நாட்களுக்கு முன்பு என்னுடன் படித்த சில நண்பர்களை சந்தித்தேன். அப்போது எங்களது பள்ளி கால நினைவுகள் குறித்து மனம் விட்டு பேசி மகிழ்ந்தோம் என்றார்.
பள்ளி தலைமை ஆசிரியை லதா ராஜேஷ் கூறும் போது, “பள்ளியின் மீதான நம்பிக்கையே பழைய மாணவர்களை ஒன்றிணைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழங்கிய நன்கொடை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இப்பள்ளிக்கு பெற்றோர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்” என்றார்.
பள்ளிக்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வளாகத்தை சுற்றிப் பார்த்தார். பள்ளியில் நடந்த தனது குழந்தை கால அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.
சென்னை:
வளசரவாக்கம் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் அய்யப்பன்.
அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தங்க துரையிடம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார். ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தங்கதுரை பலமுறை இன்ஸ்பெக்டரை சந்தித்து தனது மோட்டார் சைக்கிளை விடுவிக்குமாறு கேட்டார்.
ஆனால் இன்ஸ்பெக்டர் என்ஜினீயரின் மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி என்ஜினீயர் தங்கதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி இன்று காலை என்ஜினீயர் தங்கதுரையிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பனை கைது செய்தனர்.
போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருவதால், அதை தடுக்க இ-செல்லான் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அது நடைமுறையில் இருக்கும் வேளையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஒருவர், இளம்பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசும் காட்சிகள் கடந்த ஜூலை மாதம் வாட்ஸ்- அப்பில் பரவியது.
இச்செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் நடந்த விசாரணையில் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசியது கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் என்பது தெரிய வந்தது. அவர் பேசிய பெண், நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
வீடியோ காலில் சீருடையில் இன்ஸ்பெக்டர் பேசியதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டது.
போலீஸ் உயர் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசிய பெண், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த பெண் தாக்கல் செய்த வழக்கில் தன்னை அவதூறாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, புகாருக்கு ஆளான கருங்கல் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி இது தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)(டி), பெண்ணை மானபங்கபடுத்தும் விதத்தில் பேசுதல், 506/1 கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்ப சட்டம் 67 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 4 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
செக்ஸ் புகார் தொடர்பாக பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குமரி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபாலின், சட்ட மன்ற அலுவலகம் அவினாசியில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அவினாசியை சேர்ந்த தி.மு.க.வினரான ஹரிதாஸ், மணிகண்டன், சிவபிரகாஷ், திராவிட வசந்தன் ஆகியோர், இந்த சட்டமன்ற அலுவலகத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவினாசி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கமலக்கண்ணன், பொது சொத்துக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்படுத்துதல் தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கண்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் கடந்த 3-ந் தேதி விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆஜராகவில்லை.
இதனால் வழக்கில் ஆஜராகாமல் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மீது பிடிவாரண்டு பிறப்பித்து முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். தற்போது கமலக்கண்ணன், நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். #tamilnews