search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7 வகுப்பு படித்து வந்த மாணவிகள் குழுவாக சேர்ந்து குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண திரிபாதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இந்த விவகாரம் அம்மாவட்ட கலெக்டரிடம் சென்ற நிலையில் ராமகிருஷ்ண திரிபாதி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சத்தீஸ்கரில் அரசு இடைநிலைப் பள்ளியில் தாகத்துக்குத் குடிநீர் வசதி செய்து தரகோரிய மாணவிகளை சிறுநீரைக் குடிக்க தலைமையாசிரியர் வற்புறுத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் Phoolidumar என்ற பகுதியில் செயல்பட்டு வந்த அரசு இடைநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    7 வகுப்பு படித்து வந்த மாணவிகள் குழுவாக சேர்ந்து குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண திரிபாதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோபமடைந்த ராமகிருஷ்ண திரிபாதி மாணவிகளை சாக்கடையைக் குடிக்க வற்புறுத்தியுள்ளார்.

    இதனால் திகைத்துப்போய் நின்ற மாணவிகளை மேலும் சிறுநீரைக் குடிக்கும்படி கூறியுள்ளார். இதனை அந்த மாணவிகள் தங்களது கிராமத் தலைவரிடம் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அம்மாவட்ட கலெக்டரிடம் சென்ற நிலையில் ராமகிருஷ்ண திரிபாதி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

    • சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.
    • தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள்.

    மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டு சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 153 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

    • சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • அவ்விழாவில் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் புறா பறக்க விடப்பட்டது.

    சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், பாஜக எம்.எல்.ஏ. புன்னுலால் மோஹ்லே மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல் தியோ மற்றும் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் ஆகியோர் அமைதி மற்றும் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் ஆளுக்கொரு புறாவை பறக்க விட்டனர்.

    அதில் மாவட்ட எஸ்.பி. பறக்க விட்ட புறா, பறக்காமல் கீழே விழுந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதனையடுத்து, உடல்நலம் குன்றிய புறாவை நிகழ்ச்சிக்கு வழங்கியது குறித்து விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    • மண்டிமர்கா காட்டுப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
    • காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 ஜவான்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு ஜவான்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த மாநில காவல் பணிக்குழு மூத்த கான்ஸ்டபில் பரத் லால் சாஹூ மற்றும் கான்ஸ்டபில் சதெர் சிங் தாக்குதலில் உயிரிழந்தனர். தரெம் காவல் எல்லைக்கு உட்பட்ட மண்டிமர்கா காட்டுப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

    இந்த தாக்குதலில் காயமுற்ற புருஷோத்தமன் நாக், கோமல் யாதவ், சியாராம் சொரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோபருக்கு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    • மகனுடன் குடிசையில் குடியேறி வசித்து வருகிறார்.
    • குழந்தைகள் படிப்பை தொடர வேண்டியது அவசியம்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் குனோ பாய். பழங்குடியின பெண்ணான இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தார். இதையடுத்து பண்ணைகள் மற்றும் வீடுகளுக்கு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.

    தனது மகனுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துவந்த குனோ பாய்க்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் (அனைவருக்கும் வீடு திட்டம்) மூலம் வீடு கிடைத்தது. அந்த வீட்டில் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டின் அருகே பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    மிகவும் பழைய பாழடைந்த கட்டிடத்தில் இயங்கிவந்த அந்த பள்ளியில் தான், அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படித்துவந்தனர்.

    அந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்த நிலையில் மிகவும் சேதமடைந்து இருந்தது. இதனைப்பார்த்த குனோ பாய் வேதனை அடைந்தார்.

    அனைவருக்கும் வீடு திட்டத்தில் கிடைத்த புதிய வீட்டின் தான் வசித்துவரும் நிலையில், சிறிய குழந்தைகள் பாழடைந்த கட்டிடத்தில் படித்து வருவதை நினைத்து வேதனைப்பட்டார்.

    ஆகவே தனது வீட்டை பள்ளி நடத்துவதற்கு கொடுக்க முன்வந்தார். இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குனோ பாய் தனது மகனுடன் வீட்டை காலி செய்து ஓலைக்குடிசையில் குடியேறினார்.

    பின்பு தனது வீட்டை பள்ளி நடத்துவதற்கு வழங்கினார். அதன்பிறகு அவரது வீட்டில் பள்ளி நடந்து வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    பள்ளி நடந்துவரும் தனது வீட்டை கடந்து செல்லும் போதேல்லாம், குனோ பாய் அங்கு சிறிதுநேரம் நின்று குழந்தைகள் பாடம் படிக்கும் சத்தத்தை கேட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் தன்னுடைய குடிசைக்கு செல்கிறார்.

    பள்ளி குழந்தைகளுக்காக தங்கியிருந்த தனது வீட்டை கொடுத்து விட்டு, குடிசைக்கு மாறியது குறித்து குனோ பாய் கூறியிருப்பதாவது:-

    கிராமத்து குழந்தைகள் பாழடைந்த கட்டிடத்தில் படிக்கிறார்கள் என்பதை அறிந்து என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. குழந்தைகள் படிப்பை தொடர வேண்டியது அவசியம். சரியான கூரை மற்றும் சுவர்கள் இல்லாத தால் நான் அவர்களுக்கு எனது வீட்டை கொடுத்தேன். நான் குடிசையில் வாழ்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    குனோபாய் வீட்டில் செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியை குந்திபாய் ஜகத் கூறும்போது, 'குனோ பாய் அவரது வீட்டை எங்களுக்கு இலவசமாக கொடுத்தார். அங்கு குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறோம்.

    எங்கள் பள்ளியில் மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு ஒரே அறையில் கற்பிப்பது கடினம். ஆனால் நாங்கள் எப்படியோ சமாளித்து வருகிறோம்' என்றார்.

    • அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார்
    • பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் செல்லும் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு அருவருப்பூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோண்ட்வானா எக்ஸ்பிரசில் பி-9 பெட்டியில் கீழ் இருக்கையில் தனது 7 வயது மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் அவர்களுக்கு மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அப்பெண்ணின் மீது சிறுநீர் படிந்துள்ளது. உடனே தனது கணவரிடம் முறையயிட்ட அவர் ரயில்வே உதவி எண்ணுக்கு அழைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

    மத்திய பிரதேசம் குவாலியர் நிலையத்துக்கு ரயில் வந்ததும் ரயில்வே போலீசார் ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்று நடந்ததை  கேட்டறிந்துவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றார்.

     

    அந்த ராணுவ வீரர் ரயிலில் தொடர்ந்து பயணித்த நிலையில் இறுதிவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க்காததால் அந்த பெண் சமூக வலைத்தளங்களில் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    • குக்கர் வெடிகுண்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டம் அடுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களும், 4 மாவட்ட போலீசாரும் இணைந்து நக்சல்வேட்டையில் ஈடுபட்டனர்.

    நக்சலைட்டுகளும், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.


    இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இதைதொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் பாதுகாப்பு படையினரால் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    30 கிலோ வெடிபொருட்கள் கொண்ட தொடர் IED வெடிகுண்டு மற்றும் 1 குக்கர் வெடிகுண்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்புக் குழுக்கள் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.





    41CNI0150602024: பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டம் அடுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களும், 4 மாவட்ட போலீசாரும் இணைந்து நக்சல்வேட்டையில் ஈடுபட்டனர்.

    நக்சலைட்டுகளும், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

    இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    • உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட் ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயன்பூர்- தண்டேவாடா- கொண்டாகவுன் ஆகிய பகுதிகள் சந்திக்கும் எல்லையில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நேற்று ஜூன் 7 ஆம் தேதி இரவு நடந்த மோதலில் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.

    இந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் மூவர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் கிழக்கு பஸ்தர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

     

    நெடுங்காலமாக சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிலவி வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. அடர் கானகத்துக்குள் இவர்கள் இருப்பு கொண்டுள்ளதால் அவர்களை தேடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

    இதற்கிடையில் அவ்வப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையில் நடக்கும் மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது. சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட்  ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  

    • பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25-30 பேர் கொண்ட குழு பயணம்.
    • பஹ்பானி பகுதிக்கு அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    சத்தீஸ்கர் மாநிலம், கவர்தா பகுதியில் பிக்-அப் வாகனம் (ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனம்) ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்தவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25-30 பேர் கொண்ட குழு, பாரம்பரிய டெண்டு இலைகளை சேகரித்துவிட்டு பிக்கப் டிரக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தது.

    அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பஹ்பானி பகுதிக்கு அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவரும் கூயில் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுகிறது.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில துணை முதல்வர் விஜய் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கவர்தாவில் தொழிலாளர்கள் பயணித்த பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

    இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சத்தீஸ்கரில் 5 பேரை கொலை செய்து விட்டு 33 வயது நபர் அதே இடத்திலேயே ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • ஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தைகோன் கிராமத்தில் துணி தைக்கும் டெய்லராக உள்ளவர் 33 வயதான மனோஜ்.

    சத்தீஸ்கரில் தனக்கு பெண் கொடுக்காத குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்து விட்டு 33 வயது நபர் அதே இடத்திலேயே ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தைகோன் கிராமத்தில் துணி தைக்கும் டெய்லராக உள்ளவர் 33 வயதான மனோஜ்.

    இவர் அந்த கிராமத்தில் வசித்து வந்த மீரா என்ற பெண்ணை திருமணம் செய்ய விருப்பி கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது வீட்டுக் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மீராவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதனால் மனோஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே மீராவுக்கு ராய்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் தனது குடுமபத்தினரைப் பார்க்க மீரா தனது கிராமத்துக்கு வந்துள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற மனோஜ், மீராவின் தாய், தந்தை, சகோதரி மற்றும் 5 வயது சிறுவன் உட்பட 5 பேரையும் அவர்கள் தூங்கும்போதே கோடரியால் கொடூரமாக கொலை செய்து விட்டு அதே இடத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எம் பைக்கின் பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து, கட்டியணைத்தபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

    அவ்வழியே தனது காரில் பயணம் செய்த ஜாஸ்பூர் காவல் கண்காணிப்பளார் (எஸ்.பி) ஷசி மோகன் சிங் இந்த ஜோடியை பார்த்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் ஆபத்தான முறையில் பைக் ஒட்டிய வினய் என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×