search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிரியார்"

    • கேரளாவில் நண்பர் வீட்டில் பதுங்கல்-தனிப்படை போலீசார் விரைந்தனர்.
    • இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு  மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).

    பெனடிக்ட் ஆன்றோ தக்கலை பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியராக இருந்தார்.அப்போது ஆலயத்துக்கு வரும் இளம்பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, பாதிரியார் மீது புகார் கொடுத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் மீது எஸ்.பி.அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில்  ஆலயத்துக்கு சென்ற போது பாதிரியார் தன்னிடம் பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.மேலும் தன்னை  வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே  சமூக வலைதளத்தில் வெளியான ஆபாச படங்களில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுடன் நெருக்கமாக இருந்த பெண்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்  என தெரியவந்தது.

    தற்போது அந்த படம் வைரலானதை தொடர்ந்து  அவரும் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு அந்த படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது அடுத்தடுத்து புகார்கள் வெளிவந்த நிலையில் குமரி மாவட்ட போலீசார் தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்த விபரம் தெரியவந்ததும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ  தற்போது கேரளாவில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்க ப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புகார் அளிக்கும் பெ ண்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்கள் தைரி யமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு சொந்தமான நிலத்தில் சமாதி கட்டுவதற்கு குழி ஒன்றை தோண்டி அதன் அருகில், அவர் இறந்து விட்டது போன்ற பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.
    • நவீன யுகத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கை உள்ளதா என்று அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் கண்ணவரம் அருகே கொல்லனபள்ளி சர்ச்சில் பாதிரியார் ஒருவர் திடீரென்று, நான் 10 நாளில் இறந்து விடுவேன், பின்னர் 3வது நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று பேசத் தொடங்கியுள்ளார்.

    அத்துடன், தனக்கு சொந்தமான நிலத்தில் சமாதி கட்டுவதற்கு குழி ஒன்றை தோண்டி அதன் அருகில், அவர் இறந்து விட்டது போன்ற பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர், செய்வதறியாது தவிக்கின்றனர்.

    ஆனாலும் பாதிரியாரோ "இன்னும் 10 நாளில் இறந்து, அடுத்த 3வது நாளில் நான் உயிர்த்தெழுவேன்" என்று விடாப்பிடியாக கூறி வருகிறார்.

    இந்த நவீன யுகத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கை உள்ளதா என்று அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    • 11 மணி நேரம் நடந்த போராட்டம்
    • நித்திரவிளையில் பரபரப்பு

    நாகர்கோவில்:

    தூத்தூர் புனித யூதா கல்லூரியின் பின்புறம் 13 ஏக்கர் நிலம் உள்ளது.

    இந்த நிலம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அகமது ரஷீத் என்பவருக்கு சொந்த மானது எனக் கூறப்படுகிறது. இந்த நிலத்திற்கு கல்லூரி நிர்வாகம் உரிமை கோரி வந்த நிலையில் வருவாய் துறையினர் அகமது ரசீதுக்கு உரிமை உள்ளது என்று அதற்கான சான்றிதழ் வழங்கி உள்ள னர்.

    இதைத்தொடர்ந்து அகமது ரசீது நித்திரவிளை போலீசாரின் பாதுகாப்புடன் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்தார். இதனை தூத்தூர் மண்டல மீனவ மக்கள் மற்றும் எட்டு ஊர் பங்கு தந்தைகள் சேர்ந்து முள்வேலியை அப்புறப்ப டுத்தியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக 8 பங்கு தந்தைகள் மற்றும் 50-க்கு மேற்பட்ட மீனவ மக்கள் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதற்கு கண்டனம் தெரி வித்து அந்த கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு களை புறக்கணித்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முள்வேலி அகற்றுவதில் ஈடுபட்டதாக சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரை போலீசார் கைது செய்தனர்.ராஜு கைது செய்யப்பட்ட தகவல் அந்த பகுதி மீனவ மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தூத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 8 பங்கு தந்தைகள் மற்றும் மீனவப் பெண்கள் நித்திர விளை போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட ராஜுவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

    போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சுவார்த்தை நடத்தி னார். ஆனால் மீனவர் கள் சமாதானம் அடைய வில்லை. அங்கேயே திரண்டு இருந்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ராஜு வை கோர்ட்டில் ஆஜர்ப டுத்த போலீசார் முயன்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரி வித்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கைதான நபரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 10 மணிக்கு முடிவுக்கு வந்தது.

    சுமார் 11 மணி நேரம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தூத்தூர் பங்கு தந்தை ஷாபின், சின்னத்துறை பங்கு தந்தை ஜிபு, மார்த்தாண்டம் துறை பங்கு தந்தை சுரேஷ் பயஸ், நீரோடி பங்கு தந்தை கிளிட்டஸ், இரவிபுத்தன் துறை பங்கு தந்தை ரெஜிஸ் பாபு, இரயுமன்துறை பங்கு தந்ைத அஜிஸ் ஜாண் சுமேஷ், பூத்துறை பங்கு தந்தை பென்சிகர், வள்ளவிளை பங்கு தந்தை ரிச்சார்டு சகாரியஸ் ஆகிய 8 பாதிரியார்கள் உள்பட 500 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 353 ஆகிய 3 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • மேல்மிடாலத்தில் பஸ் சிறைபிடிப்பு - மறியல் சம்பவத்தில் நடவடிக்கை
    • நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் சாலைப்பணியை முடித்து தருவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள உதய மார்த்தாண்டம் ஜங்சனில் இருந்து கைத விளாகம், மேல்மிடாலம் வழியாக கடலோரச்சாலை உள்ளது. இந்தச் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன்பயனாக தொடங்க ப்பட்ட சீரமைப்பு பணி தொடங்கிய சில நாட்களி லேயே கிடப்பில் போடப்ப ட்டது. இதனைக் கண்டித்து மேல்மிடாலம் மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவி கள் திரண்டு மறி யல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். போரா ட்டத்தில் அருட்பணி யாளர்கள் ஹென்றி பிலிப், ஆன்றனி கிளாரட், ஜினிஸ் மற்றும் ஹெலன் நகர் மக்கள் கலந்துகொண்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட் செப்ட ம்பர் மாதம் இறுதிக்குள் சாலைப்பணியை முடித்து தருவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனை மேலாளர் ஸ்டாலின் போரா ட்டம் தொடர்பாக கருங்கல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் விசா ரணை நடத்திய போலீசார் மேல்மிடாலத்தில் சட்ட விரோதமாக ஒன்றுகூடி அரசு பஸ்சை இயக்க விடாமல் சிறைபிடித்து போக்குவரத்து கழகத்திற்கு ரூ.15 ஆயிரத்து 400 இழப்பு ஏற்படுத்தியதாக மேல் மிடாலம் பங்கு தந்தை பிலிப் ஹென்றிகுயின், ஹெலன் நகர் பங்குதந்தை ஆரோக்கிய ஜெனிஷ், எழில், கிறிஸ்டோபர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட 200க்கு மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்த செயல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தற்போது பொருளாதார மோதல் நடந்து வரும் நிலையில், அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #Turkey #US
    அங்காரா:

    அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.

    ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது. இதன் காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின்மீது 2 மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. 

    இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது. ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு ஆட்டம் கண்டுள்ளது.

    இந்நிலையில், அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காரில் இருந்து ஒரு கும்பல் தூதரகத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எனினும், இந்த தாக்குதலில் உயிர் சேதம் இல்லை. பக்ரீத் பண்டிகைக்காக தூதரகத்திற்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். #USTurkeyClash
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.

    ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது.

    இதன் காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின்மீது 2 மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது. ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு சற்று உயர்ந்து உள்ளது.


    இந்த நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “பல்லாண்டு காலம் அமெரிக்கா மூலம் துருக்கி பலன் அடைந்து உள்ளது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் தேசப்பற்றாளர். அந்த அப்பாவி மனிதரை விடுதலை செய்வதற்காக நாங்கள் எதுவும் தர மாட்டோம். ஆனால் நாங்கள் துருக்கி மீது மீண்டும் நடவடிக்கை எடுப்போம்” என கூறி உள்ளார். எனவே துருக்கியில் இருந்து இறக்குமதி செய்கிற மேலும் பல பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.  #USTurkeyClash
    ×