என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நேபாளம்"
- ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார்.
- ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார்.
காத்மண்டு:
நேபாளத்தில் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடைபெறுகிறது.
காத்மண்டுவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார். இறுதியில், போட்டி 1-1 என சமனில் இருந்தது.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நேபாளம் 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது.
- நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
- நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150-ஐ நெருங்கியது.
பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாயமானோரை தேடும் பணியும் நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
- நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல நகரங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது.
அதிகபட்சமாக காத்மண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 64 பேரை காணவில்லை. தொடர் மழையால் காத்மண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.
பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
- வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர்.
- வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் சில பகுதிகள் நேற்று பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் இறந்துள்ளனர். இதில், காத்மாண்டுவில் 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் 5 பேரும், கவ்ரேபாலன்சௌக்கில் 3 பேரும், பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா இரண்டு பேரும், ஜாபா மற்றும் தாடிங்கில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காத்மாண்டுவில் 226 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறையில் இருந்து சுமார் 3,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட மீட்புக் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
- பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
- மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர்.
நேபாளம்:
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் 40 பேருடன் இந்திய பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.
"UP FT 7623 என்ற எண் கொண்ட பஸ் ஆற்றில் விழுந்து ஆற்றின் கரையில் கிடக்கிறது என்று டிஎஸ்பி தீப்குமார் ராயா உறுதிபடுத்தினார்.
இந்நிலையில் ஆற்றில் கவிழ்ந்த பஸ்சில் பயணித்த 40 இந்தியர்களில் 14 பேர் பலியான நிலையில் இதுவரை 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
#WATCH | Nepal | An Indian passenger bus with 40 people onboard has plunged into the Marsyangdi river in Tanahun district, confirms Nepal Police. "The bus bearing number plate UP FT 7623 plunged into the river and is lying on the bank of the river," DSP Deepkumar Raya from the… pic.twitter.com/P8XwIA27qJ
— ANI (@ANI) August 23, 2024
- இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.
- இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேமலதா 47 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சஜனா 10 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. நேபாளம் சீதா ரானா மகர் இரண்டு விக்கெட்டுகளையும், கபிதா ஜோஷி ஒரு விக்கெட் வீழ்த்தினார். 179 ரன்களை துரத்திய நேபாளம் அணி துவக்கத்திலேயே தடுமாறியது.
அந்த அணியின் சம்ஜனா கட்கா 7 ரன்னில் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய சீதா ரானா மகர் 18 ரன்களை அடித்தார். அடுத்து வந்தவர்களில், கேப்டன் இந்து பர்மா 14 ரன்களையும், ருபினா சேத்ரி 15 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். இடையில் பிந்து ராவல் நிதானமாக ஆடி 17 ரன்களை அடித்தார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் தீப்தி ஷர்மா மூன்று விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினர். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து இடம்பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ரன்களை குவித்துள்ளது. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேமலதா 47 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சஜனா 10 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களைக் குவித்துள்ளது.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த யு.ஏ.இ. 20 ஓவரில் 115 ரன்கள் எடுத்தது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த யு.ஏ.இ. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குஷி சர்மா 36 ரன்கள் அடித்தார்.
நேபாளம் சார்பில் கேப்டன் இந்து பர்மா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நேபாளம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன சம்ஜானா கட்கா பொறுப்புடன் ஆடினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சம்ஜானா கட்கா தனி ஆளாக போராடி அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் நேபாளம் 16.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சம்ஜானா கட்கா 72 ரன்கள் அடித்தார்.
யு.ஏ.இ. சார்பில் கவிஷா எகொடகே 3 விக்கெட் வீழ்த்தினார்.
- தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது.
- அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
காணாமல் போன 9 பேரை பேரிடர் குழுக்கள் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான இந்தியாவிலும், பங்களாதேஷின் கீழ்பகுதியிலும் ஏற்பட்ட வெள்ளம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது.
இதுகுறித்து நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்," காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை மற்ற அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்றார்.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது. அதேபோல், சமீபத்திய ஆண்டுகளில் அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த வியாழன் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இமயமலை தேசத்தில் பேரழிவு அதிகாரிகள் பல நதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் நேபாளத்தில் நிலச்சரிவு, மின்னல் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பயங்கர புயல்களில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில், வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அசாமின் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.
- நேபாளத்தில் ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் பிரதமர் பிரசந்தா.
- பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.
காத்மாண்டு:
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.
இதற்கிடையே, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசந்தா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.
நேபாளத்தில் உள்ள உபேந்திர யாதவ் தலைமையிலான ஜனதா சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு மே 13 அன்று பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெற்றது.
இதற்கிடையே, நேபாளத்தில் 4-வது முறையாக கடந்த மே மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நேபாளத்தில் ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளார் பிரதமர் பிரசந்தா. ஜூலை 12 அன்று பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரசந்தா பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராம் பகதூர் பாம்ஜான் ஒரு மரத்தின் கீழ் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்று சொல்லப்படுகிறது.
- அந்த சமயத்தில் அவர் உணவு, தண்ணீர், உறக்கம் என எதுவும் இல்லாமல் இருந்தார் என ஆயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.
2005 ஆம் ஆண்டு ராம் பகதூர் பாம்ஜான் என்ற சிறுவன் நேபாளத்தில் உள்ள அடர்த்தியான காடுகளில் உள்ள ஒரு மரத்தின் கீழ் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்றும் அந்த சமயத்தில் அந்த சிறுவன் உணவு, தண்ணீர், உறக்கம் என எதுவும் இல்லாமல் இருந்தான் என்று ஆயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.
இதன் காரணமாக அந்த சிறுவனை புத்தரின் மறு அவதாரம் என்று பெரும்பாலான மக்கள் நம்ம ஆரம்பித்தனர்.
இந்நிலையில் 33 வயதாகும் ராம் பகதூர் பாம்ஜான் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக பொக்சோ வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நேபாள நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இக்குற்றத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.
- வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிங்ஸ்டவுன்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
செயினட் வின்சென்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொ டங்கிய 37-வது லீக் ஆட்டத்தில் டி பிரிவில் வங்காள தேசம்-நேபாளம் அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்த நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.
எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. வங்காளதேசம் 19.3 ஓவர்களில் 106 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது.
நேபாளம் தரப்பில் சோம்பால்கமி, சந்தீப் லமிச்சனே, ரோகித் பவுடல், திபேந்திர சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடி நேபாளமும் திணறியது.
அந்த அணி 26 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. அதன்பின் குவுல்மல்லா, திபேந்திர சிங் ஜோடி சிறிது தாக்குபிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆனதும் விக்கெட்டுகள் சரிந்தன. நேபாளம் 19.2 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது. இதனால் வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டும், முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், ஷகீப்-கல்-ஹசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றது.
ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புலா நியூகினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.
சூப்பர்-8 சுற்றுக்கான ஆட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்