என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம்"

    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநசமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வான 4-ம் நாளன்று இரவு ஓலை சப்பரத்தில் கருட சேவையும், 7-ம் நாளன்று இரவு கோரதம் புறப்பாடும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முடிவில் 7-ந்தேதி சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    • போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    காளிதாசுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்து வந்தது. இதனால் அவர் எப்போதும் குடிபோதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் தலையில் பலத்த காயத்துடன் காளிதாஸ் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பார்வையிட்டனர்.

    அதில் தலையில் ரத்த காயம் இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே காளிதாசின் சகோதரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.
    • திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் சமேத சக்கரபாணி கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் பெருமாள்-தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணி பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, தொடங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.

    மேலும், வீதிகள் தோறும் திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தேரானது 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

    பாபநாசம்:

    தேசிய நெடுஞ்சாலை யான தஞ்சாவூர் முதல் கும்பகோணம் சாலை 2015-ம் ஆண்டு புதியதாக போடப்பட்டது.

    கடந்த 8 ஆண்டுகளில், மராமத்து பணிகள் மட்டும் செய்து வருவதால், தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், தற்போது பெய்து வரும் மழையினால் ஜல்லிகள் பெயர்ந்து, சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்தும், பகல் நேரத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பதை, அருகில் வந்து பார்த்து விட்டு, உடனே பக்கவாட்டில் திருப்பும் போது பின் புறம் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

    மேலும், கும்பகோணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரஹ மற்றும் பழமையான கோயில்கள் இருப்பதால், விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, இந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு "மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்திடம் தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி இந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியு ள்ளோம்.

    மிக விரைவில் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.

    தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தஞ்சாவூர்- கும்பகோணம் - அணைக்கரை சாலைகளை மேம்படுத்த ரூ.79 கோடி அனுமதித்துள்ளது.

    இந்நிலையில், புதிய சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

    தற்போது பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், வழுத்தூர் சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாலைகளின் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    வரும் ஜனவரி மாதம் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • வருகிற 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.
    • 23-ந்தேதி அன்று கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடைபெறும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாதவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-

    கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கான பொதுக் கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி மற்றும் 23 ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.

    வருகிற 22 ந் தேதி அன்று தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வணிகவியல், வணிக மேலாண்மை மற்றும் புவியியல் ஆகியப் பாடப்பிரிவுகளுக்கும்

    23-ந் தேதி அன்று கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடை பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.
    • கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கும்பகோணம், மணஞ்சேரி, கல்யாணபுரம், பருத்திக்குடி ஆகிய பகுதிகளை கடந்து சென்றது.

    அப்போது கும்பகோணம் விஜயீந்திர மடம் சார்பில் காவிரி படித்துறையில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலை ஊற்றி தீபாராதனை காண்பித்தனர்.

    பின்னர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில், 27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தங்களது குறைகளை நேரில் தெரிவித்துக் தீர்வு காணலாம் என கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தெரிவித்துள்ளார்.

    • மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.
    • அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    மன நோய் அகற்றும் திருவிடைமருதூர்

    சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்".

    இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர்.

    நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத்தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர்.

    மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.

    கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன்குடி அருமருந்தம்மை

    கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை.

    இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி.

    அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்

    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது.

    முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன.

    முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ருண விமோச்சன லிங்கேஸ்வரர் ".

    கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

    ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

    இத்தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.

    • காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.
    • இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய 'ஸ்ரீவாஞ்சியம்'

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்".

    காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.

    ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும்.

    இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.

    இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.

    ஸ்ரீயாகிய திருவை (மகாலட்சுமி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

    • கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"

    கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை".

    கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

    கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுகி தீர்த்தம் உள்ளது.

    கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.

    கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,

    பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

    எனவே செல்வம் பெற விரும்புபவர்கள் இத்தலம் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    • இந்நகரில் 100க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கோவில்கள் உள்ளன.
    • தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்களில் மூன்று கும்பகோணத்தில் அமைந்துள்ளது.

    தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்கள் 274ல் காவிரியாற்றின் தென்கரையில் 127 தலங்கள் அமைந்துள்ளன.

    இவற்றில் மூன்று கும்பகோணத்தில் அமைந்து உள்ளன.

    இவை மட்டுமல்லாது இந்நகரை சுற்றிலும் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் பத்துக்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் அமைந்துள்ளன.

    இந்நகரில் 100க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கோவில்கள் இருப்பதால் இந்நகரம் கோவில் நகர் என்றும் போற்றப்படுகின்றது.

    அவற்றில் முதன்மையானது கும்பேஸ்வரர் ஆலயம் ஈசன் தன் கரத்தினால் சிருஷ்டித்த தலம் என்பதால் சிறப்பைப் பெற்றது.

    முதல்வர், வானவர், மன்னவர் என அனைவரும் அவரை பூஜித்திருப்பதால் இத்தலம் மூர்த்தி சிறப்புடையது.

    தேவர்கள், திருமால், பிரம்மா, இந்திரன், தேவ மாதர்கள் என அனைவரும் தீர்த்தமாடிய திருக்குளமாக மகாமகக் குளம் அமைந்து இருப்பதால் இத்தலம் தீர்த்த சிறப்பு பொருந்திய தலமாக விளங்குகிறது.

    பிரளயத்தின் போது அதில் மிதந்து வந்த அமுதக் கலசமான குடத்தை இறைவன் அம்பை செய்து அதன் மூக்கை உடைத்தமையால் குடமூக்கு என்னும் பெயர் இத்தலத்திற்கு உரியதாயிற்று.

    சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் வைணவ ஆழ்வாரான பூதத்தாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடமூக்கு என்றும்,

    பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடந்தை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    இத்தலத்தை மலை தனி வந்து கும்பகோண நகர் வந்த பெருமானே! என்று அருணகிரியார் குறிப்பிடுகின்றார்.

    • குடம் என்தற்குக் கும்பம் என்ற பெயரும் உண்டு.
    • கும்பம் உடைந்த பகுதி கோணாலானதால் கும்பகோணம் என்றாயிற்று.

    குடமூக்கு என்னும் பெயர் இடைக்காலத்தில் தான் கும்பகோணம் என மாறியுள்ளது என்பது அருணகிரியாரின் பாடல் வாயிலாக உணர முடிகிறது.

    குடம் என்தற்குக் கும்பம் என்ற பெயரும் உண்டு.

    கும்பம் உடைந்த பகுதி கோணாலானதால் கும்பகோணம் என்றாயிற்று.

    இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் ஆதிகும்பேஸ்வரர் ஆவார்.

    இவர் உலகத்திற்கு ஆதி காரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியமையால் ஆதிகும்ேபஸ்வரர் என்றும் நிறைந்த சுவை கொண்ட அமுதத்தில் இருந்து உதித்தமையால் அமுதேஸர் என்றும் அழைப்படுகின்றார்.

    இறைவன் வேடுவர் உருக்கொண்டு அமுத கும்பத்தை தம் அம்பினால் எய்தியமையால் கிராதமூர்த்தி என்னும் திருப்பெயரையும் பெற்றார்.

    மகா பிரளயத்திற்குப் பின் படைப்புத் தொழிலினை பிரம்மா தொடங்குவதற்கு இறைவன் இத்தலத்தில் எழுந்தருளிய லிங்கத்துக்குள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

    இதனால் இத்தலம் உயிர்ப்படைப்பின் தொடக்க இடமாததால் படைக்கப்பட்ட படைக்கப்படுகின்ற ஒவ்வொரு மனித உயிர்களும் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தை அடைதல் அவர்களின் பிறவிக் கடமையாகும்.

    எந்த ஒன்றிற்குமே மூலம் தான் சிறப்புடையது.

    உயிர்களின் தோற்ற மூலமான இத்தலம் பிற தலங்களுக்கு எல்லாம் புண்ணியம் நிறைந்த முதன்மைத் தலமானது.

    அது மட்டுமல்லாது புராணப்படி மகா பிரளயத்திற்குப் பின் நிலவுலகில் தோன்றிய முதல் தலமும் இதுவேயாகும்.

    இத்தலத்து அம்பிகை மங்கள நாயகி ஆவாள்.

    இவள் மந்திர பீடேஸ்வரி, மந்திர பீடநலத்தாள், வளர்மங்கை என்றும் போற்றப்படுகின்றாள்.

    தம்மை அன்புடன் தொழுவார்க்கு மங்களம் அருளும் தன்மையால் "மங்களநாயகி" என்றும் சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்கும் மந்திரபீடத்தில் அன்னை விளங்குவதால் மந்திரபீடேஸ்வாி என்றும்,

    தம் திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு மந்திர பீடத்திலிருந்து நலம் அருளுவதால் "மந்திரபீட நலத்தாள்" என்றும் போற்றப்படுகின்றாள்.

    தம் தேவாரப் பதிகத்தில் திருஞான சம்பந்தர் பெருமான், "வளர்மங்கை" என்று அன்னையைப் போற்றுகின்றார்.

    திருச்செங்கோடு தலத்தில் இறைவன் தம் இடபாகத்தை அம்பிகைக்கு அருளியமை போன்று இத்தலத்தில் இறைவன் தம் 36000 கோடி மந்திர சக்திகளையும் அன்னைக்கு வழங்கினார்.

    இதனால் அன்னை இத்தலத்தில் மந்திர பீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

    அம்மனின் உடற்பாகம் பாதநகம், முதற்கொண்டு, உச்சி முடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சி அளிக்கின்றன.

    இவற்றுள் பிற தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே சக்தி வடிவினை மட்டும் கொண்டதாகும்.

    இத்தலத்து அன்னை ஐம்பத்தோரு சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாக உள்ளடக்கியவளாய், சக்தி பீடங்கள் அனைத்திற்கும் பிரதானமானவளாய் விளங்குகிறாள்.

    இத்திருக்கோயிலில் காலையில் முதலில் சூரிய பகவானுக்கும், மாலையில் சந்திரனுக்கும் வழிபாடுகள் நிகழ்கின்றன.

    இத்திருக்கோயிலில் உள்ள 16 தூண் மண்டபம் மிக்க கலையழகுகளுடன் திகழ்கின்றது.

    ×