என் மலர்
நீங்கள் தேடியது "தினகரன்"
- ஈபிஎஸ், ஓபிஎஸ்-சை டெல்லி இணைத்து வைத்தது தவறான முடிவு.
- தவறை உணர்ந்து என்னை பார்க்க வந்த ஓபிஎஸ்-சை நட்பு ரீதியாக சந்தித்தேன்.
பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சதி செய்வதாக அமமுக. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டி உள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது:
நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது உதவிகரமாக இருந்த கட்சியை,(பாஜகவை) இன்றைக்கு, உதாசீனபடுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் அவர்கள்(பாஜக) ஜெயிச்சா என்ன, தோற்றால் என்ன, இன்னும் சொல்லப் போனால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வரவிடாமல் செய்வதற்கான வேலைகளில் இறங்க சதி செய்கிறார்கள்.
2017 ஆண்டு என்னை பன்னீர் செல்வம் சந்தித்த போது, முதலமைச்சராக ஆதரவு அளித்தேன். ஏனென்றால் அவர்( எடப்பாடி பழனிசாமி) தப்பான பாதையில் போகிறார் என்று தெரிவித்தேன். பன்னீர் செல்வம் கோபத்தில் எனக்கு எதிராக தவறான முடிவை எடுத்தார். தவறை உணர்ந்து என்னை பார்க்க வந்தார்.
பழைய நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமியை டெல்லி இணைத்து வைத்தது தவறான முடிவு. எங்களை தவறானவர்கள் என்று நினைத்து செய்தார்களா அல்லது எடப்பாடி பழனிசாமியை நல்லவர் என்று நினைத்து செய்தார்களா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
- மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.
- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இரைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு வழங்கப்படுகிறது. குறுக்கு வழிகளில் தேர்தலை எதிர்நோக்கி வருகிறார்கள்.
பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரத்தை தி.மு.க. அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார் இதை எப்படி நம்புவது.
நூல் விலை உயர்வால் 40 சதவீத தொழில்கள் முடங்கிப் போய் உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ், ராணுவத்தினர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பார்த்த பெண்மணி ஒருவர் தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்கிறார். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இரைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். பணம் பரிசுப் பொருட்கள் விநியோகப்பதை தடை செய்ய வேண்டும். தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அவர்கள் எத்தனை முறை டெல்லி சென்றார்கள். எத்தனை பேர் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள். நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி தான் நிற்கிறோம். பணத்தை நம்பி நிற்கவில்லை. மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.
கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்ததற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இரவு 11 மணிக்கு வந்து என்னை கைது செய்தனர். உடைமாற்றி வருகிறேன் என்று சொன்னால் கூட கேட்காமல் என்னை கைது செய்தனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.
ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்கமாட்டார்கள். அ.தி.மு.க.விற்கு ஓ பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம்:
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன் முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் நிலையில் அவரது சொந்த ஊரான பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமையே வலிமை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் என குறிப்பிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் என திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சசிகலா, தினகரனுடன் இணைய வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டனர். அப்போது அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கொடியை ஏந்தி தி.மு.க. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்ட செயலாளரான சையது கான், அ.தி.மு.க.வை வழி நடத்தும் முழு தகுதியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே உள்ளது. இதனை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிந்ததால்தான் அவருக்கு 2 முறை முதல்-அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால் குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி தற்போது கட்சியையே அபகரிக்க பார்க்கிறார்.
இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. வேறு யாரையும் அந்த இடத்துக்கு கட்சியினர் விரும்ப மாட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் தனக்கு ஆதரவான சிலரை வைத்துக் கொண்டு பொதுச் செயலாளர் பதவியை அடைய துடிக்கிறார்.
தொண்டர்களால் மட்டுமே பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். விரைவில் சசிகலா மற்றும் தினகரனை கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவார். அதன் பிறகு தொண்டர்கள் பலத்துடன் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். பெரியகுளத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பலத்துடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிச்சாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் கட்சி செல்வாக்கை இழந்து கொண்டே வரும்.
- பொதுமக்கள் கேட்டு வருவதால் வேறு வழியின்றி பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்த தி.மு.க அரசு தற்போது தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன் என்று புரியவில்லை.
இதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வருவது, சம வேலைக்கு சம ஊதியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என பொதுமக்கள் கேட்டு வருவதால் வேறு வழியின்றி பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
கடந்த 2017-ம் ஆண்டு ஓ .பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியது தவறு என அவர் உணர்ந்துள்ளார்.ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார். அதுதான் எனது கருத்தும்.
மேற்கு மண்டலம் எங்களது கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி கூறிவந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.விடம் படுதோல்வி அடைந்துள்ளார். இரட்டை இலை சின்னம் இருந்தும், ஆளும் கட்சிக்கு நிகராக பொருள் செலவு செய்தும் ஏற்பட்ட படுதோல்வி அ.தி.மு.க பலவீனம் அடைந்துள்ளது என நினைக்கத் தோன்றுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் கட்சி செல்வாக்கை இழந்து கொண்டே வரும். அ.தி.மு.க பொதுச் செயலாளர், தேர்தல் தொடர்பாக வருகின்ற 24-ந் தேதி வரக்கூடிய நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை என்னால் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் டெல்டாவில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது .
- மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் டெல்டாவில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது .
மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார்கள். அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதியில் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழலை, இயற்கையை பாதிக்காத திட்டத்தை தான் கொண்டுவர வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கை . அதுதான் எங்களின் நிலைப்பாடும். பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது இ.பி.எஸ், ஓ.பி.எஸ்.சை சந்திக்காதது அவர்களது கூட்டணி பிரச்சினை. அதில் நான் கருத்து கூறுவது நன்றாக இருக்காது.
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அணி செயலாளர் கார்த்திகேயன் மலேசியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல் கட்டமாக அவருக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் விளையாடுவதற்கான அனைத்து உதவிகளையும் அ.ம.மு.க. செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
- திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் மாநாடு நடத்துவது குறித்து ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இன்று தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியுள்ளார். அந்த ஊழல் பட்டியல் வெளியான பிறகு அது எந்த அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தும். ஊழல் உண்மையா? இல்லையா ? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் பதில் கூற வேண்டும்.
அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என நீங்கள் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்த ஆண்டு இறுதியில் எங்களது நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். அடுத்த தமிழ் புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதாக அமையும்.
திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் மாநாடு நடத்துவது குறித்து ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்.
- சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம் இன்று.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம் இன்று. "கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்" என முழங்கி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, உரிமை, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தந்ததோடு சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் தன் இறுதி மூச்சுவரை போராடிய இரட்டைமலை சீனிவாசனை எந்நாளும் நினைவில் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
- அரசு மருத்துவர்களுக்கான போராட்ட குழுவினர் கூறுகின்றனர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மருத்துவ பணியில் சேர்ந்த 14 ஆண்டுகளில் மத்திய அரசு மருத்துவர்களைவிட மாநில அரசு மருத்துவர்கள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை குறைவான ஊதியம் பெறுவதாக அரசு மருத்துவர்களுக்கான போராட்ட குழுவினர் கூறுகின்றனர்.
கொரோனா பரவல் காலத்தில் அரசுக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளான மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விலையில்லா மடிக்கணிகள் திருடுபோனதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
- மடிக்கணினிகள் வைத்திருக்கும் அறையை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும்
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஐகோர்ட்டு மதுரை கிளையில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதுவரை 140 பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கக் கூடிய விவரங்களை பதிவு செய்துள்ளார்.
ஏழை, எளிய மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஜெயலலிதா, பள்ளிக்கல்வி மட்டுமல்லாது உயர்கல்வி சார்ந்த தேடல்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதா தொடங்கிய இந்த பொன்னான திட்டத்தை ஆட்சிக்கு வந்தபின் சரிவர செயல்படுத்தாத தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கால், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணிகள் திருடுபோனதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமான விலையில்லா மடிக்கணினி திட்டத்தை இனிவரும் காலங்களில் முறையாக செயல்படுத்துவதோடு, மடிக்கணினிகள் வைத்திருக்கும் அறையை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வருகிற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
- நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் இன்று 10 மாவட்டங்களிலுள்ள அ.ம.மு.க சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாகக் கூறுவது ஊக அடிப்படையிலான தகவல். வருகிற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும்.
- தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஒரு வேளை உணவு, குடிநீர், பால், உறைவிடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நானும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் அவர்களை தினசரி சந்தித்து எங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.
கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் இது. வெள்ள நிவாரண பணியில் தமிழக அரசின் செயல்பாட்டை எடை போட்டு பார்க்க கூடாது.
அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண நிதியை விட அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கழக உடன் பிறப்புகளுக்கு கண்டிப்பான வேண்டுகோள் ஒன்றை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில் முன்வைக்க விரும்புகிறேன்
- நமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் என்பதை உங்கள் அனைவருக்கும் உத்தரவாதமாக அளிக்கிறேன்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்.
மல்லிகையையும் மணத்தையும் பிரித்து பார்க்க முடியாது என்பதைப் போல என் மீது நீங்களும் உங்கள் மீது நானும் கொண்டுள்ள அன்பு அவ்வளவு அற்புதமானது. நான் தான் நீங்கள். நீங்கள் தான் நான். எனக்கு எப்போதும் எல்லாமும் ஆகிய கழக உடன் பிறப்புகளுக்கு கண்டிப்பான வேண்டுகோள் ஒன்றை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில் முன்வைக்க விரும்புகிறேன்.
இனி வரும் காலங்களில் மாலைகள், சால்வைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் பூங்கொத்துகளுக்கு செலவிடுவதற்கு மாறாக, தங்களால் இயன்ற நிதியுதவியை கழக வளர்ச்சிக்கு வழங்கி உதவுமாறு அன்பு கலந்த வேண்டுகோளாய் விடுக்கிறேன். கழக உடன்பிறப்புகள் அளிக்கும் நிதி ஏதேனும் ஒருவகையில் நமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் என்பதை உங்கள் அனைவருக்கும் உத்தரவாதமாக அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.