search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலியுறுத்தி"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்த முயன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். #Teachers #Arrest
    சென்னை:

    மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று காலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அ.சுதாகரன் தலைமையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கோட்டை நோக்கி பேரணியாக செல்ல தயாராகினர்.

    ஆனால் போலீசார் அவர்களை சேப்பாக்கம் அருகிலேயே தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும், கோஷங்களை எழுப்பியபடி கோட்டையை நோக்கி செல்ல அவர்கள் முயன்றனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பெண்கள் உள்பட 1,500 ஆசிரியர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்காக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளான அ.சுதாகரன், கதிரவன், ந.ரெங்கராஜன், அய்யப்பன், சுப்புராஜ் ஆகிய 5 பேரை போலீசார் அழைத்து சென்றனர்.

    அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம், தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் பின்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் நடந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது. எங்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஊதிய பிரச்சினை தொடர்பாக சாதகமான முடிவு ஏற்படும் என்றும், சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் திட்டத்தை ரத்து செய்வதாகவும், பயோ மெட்ரிக் வருகை பதிவு எங்களுக்கு கிடையாது என்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளார் தெரிவித்தார். அதே சமயம் புதிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசின் முடிவு என்பதால் அவர் அதுபற்றி எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்க கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

    ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப்பட்ட போராட்டம் காரணமாக கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. 
    27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
    ஊட்டி:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் நேற்று பணிக்கு வராமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்ட பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், குந்தா ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளருக்கு அளவீடு மற்றும் மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், இளநிலை பொறியாளர்களுக்கும் முறையான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

    ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலுவலர்கள் பணிக்கு வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கிராம ஊராட்சி பிரிவு, வளர்ச்சி பிரிவு உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி முகமை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.

    ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. 
    கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பானது ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வன்கொடுமைகள் (எஸ்.சி, எஸ்.டி.) தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. எனவே வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தி அவசர சட்டம் இயற்ற வேண்டும். இதனை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் ஆதிதிராவிட- பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ரெயிலை மறிப்பதற்காக அரியலூர் கல்லூரி சாலையில் இருந்து அரியலூர் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது அங்கு ரெயில் நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில், அரியலூர் போலீசார் இரும்பு தடுப்புவேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் ரெயிலை மறிப்பதற்காக மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதில் 12 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 110 பேரையும் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனர். 
    தஞ்சை மறைமாவட்டம், திருவருட்பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மறைமாவட்டம், திருவருட்பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்றுமாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மறைமாவட்ட முதன்மை குருவும், திருவருட்பேரவை மாவட்ட துணைத்தலைவருமான ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். திருவருட்பேரவை செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மறைமாவட்ட அதிபர் செபாஸ்டின்பெரியண்ணன், மறைமாவட்ட வேந்தர் ஜான்சக்கரியாஸ், திருவருட்பேரவை மாவட்ட செயலாளர் அமலதாஸ்ஜான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் ஜோசப்மரியவியான்னி, மாவட்ட திருவருட்பேரவை இணைத்தலைவர் கோவிந்தராஜன், ஆலோசகர் கலந்தர் நைனார்முகமது, திருவருட்பேரவை உறுதிமொழிகோவிந்தராஜன், செயலாளர்கள் தாஜூதீன், தியாகராஜன், ஐ.ஜே.கே.மாவட்ட செயலாளர் சிமியோன்சேவியர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×