என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே.வாசன்"

    • ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி கோவிலில் த.மா.கா.வினர் வழிபாடு செய்தனர்
    • வாகை ஜெயராஜ் ஏற்பாட்டில் கொடியேற்றி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்எம்.பி.யின் 58-வது பிறந்தநாள் விழா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சிறப்பு அர்ச்சனையும், மகபூப்பாளையத்தில் மாநில சிறப்பு அழைப்பாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    தெற்கு வாசல் மொய்தீன் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகையும், 47-வது வார்டு தலைவர் லியாகத் அலி, நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஆபீக், உசேன் ஏற்பாட்டில் கொடியேற்றியும் இனிப்பு வழங்கப்பட்டது.

    தூய மரியன்னை தேவாலயத்தில் மதுரை மாவட்ட துணை தலைவர் சூசை ஏற்பாட்டில் சிறப்பு பிராத்தனை நடந்தது. மாநில இணை செயலாளர் பிரேம் குமார் ஏற்பாட்டில் காமராஜர் சாலையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    மதுரை ஆவின் பால்பண்னை பாட்ஷா, சேகர், மாரிச்சாமி ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    புதூரில் 11-வது சர்க்கிள் தலைவர் மாணிக்கவாசகர், 14-வது வார்டு தலைவர் புதூர் பாண்டி ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு 64-வது வார்டு தலைவர் செல்வம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் இடும்பன் பாலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாகை ஜெயராஜ் ஏற்பாட்டில் கொடியேற்றி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொள்கை பரப்பு செயலாளர் சிவசுந்தரம் ஏற்பாட்டில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.

    பிறந்த நாள் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், நிர்வாகிகள் பைரவ மூர்த்தி, மைதீன்பாட்ஷா, நடராஜன், மணி, சீனிவாசன், பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி நடந்தது
    • மாவட்ட தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி வழங்கினார்

    வேலூர்:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூரில் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வேலூர் மாநகர மாவட்ட த.மா.கா. தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஸ்ரீ சாய் தஞ்சம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சிவானந்தம், மாவட்ட நிர்வாகிகள் அச்சுதன், தேசபக்தன், சீனிவாசன், ரமேஷ், கோவிந்தராஜ், மகேஷ், தொரப்பாடி கிருஷ்ணன், பேங்க் மனோகரன், திருநாவுக்க ரசு, வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்உடுமலை நகரத்தில் ஏரி பாளையம் மற்றும் ரயில் நிலையம் அருகிலும் மேலும் போடிபட்டி,பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும்,அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் மாவட்டத் தலைவர் டி.ரெத்தினவேல்,மாநில செயற்குழு உறுப்பினர் யு .கே. சி. முத்துக்குமாரசாமி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் அபிராமி செந்தில்குமார்,நகரத் தலைவர் பாலகிருஷ்ணன்,வட்டாரத் தலைவர்கள் அருளானந்தம்,ரவிச்சந்திரன் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனா குமாரி,மாவட்ட இளைஞரணி தலைவர் பிரசாந்த் குமார்,மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எதிர்க்கட்சிகளின் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
    • தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    மதுரை

    தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மதுரையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். பா.ஜ.க.வுடன் தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை த.மா.கா. சந்திக்கும். விரைவில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளன.

    டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் தான் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க முடியும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமலாக்கத் துறை சோதனையை சரி என்கிறது. ஆனால் ஆளுங் கட்சியாக மாறிய பின் தவறு என்கிறது.

    தி.மு.க. மக்களுக்கு அதிக வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது. தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத் தலை வர் ராஜாங்கம், நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
    • பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.


    ஆனால் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான மகசூல் மற்றும் இழப்பு இருப்பதில்லை. எனவே அறுவடை முடிந்த உடனேயே பயிர் காப்பீடு கிடைத்தால் தான் தொடர்ந்து நடைபெற வேண்டிய அடுத்த பருவ விவசாயத்திற்கு, விவசாயிகளுக்கு பயன் தரும்.

    எனவே தமிழக அரசு, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற்றுத்தர முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொது மக்களின் வாழ்க்கையில் இணைந்து செயல்படுபவர்கள்.
    • உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வர்த்தகம் செய்யும் வணிகர்களின் பணி அனைவருக்கும் பயனுள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு வருடமும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் வணிகர்களும், அவர்களின் தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும். வணிகர்கள் பொது மக்களின் வாழ்க்கையில் இணைந்து செயல்படுபவர்கள். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வர்த்தகம் செய்யும் வணிகர்களின் பணி அனைவருக்கும் பயனுள்ளது. மத்திய-மாநில அரசுகள் வணிகர்களின் தொழில், வியாபாரம் பெருக, வணிகத்தினால் பொது மக்களும் பயன்பெற திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • தேங்காய் எண்ணையை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. நம் நாடு முழுவதற்குமான மக்களின் தேவைக்கு 70 சதவீதம் பாமாயில் மற்றும் இதர ஆயில்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

    தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலை விட தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப தென்னை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    மேலும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தேங்காய் இறக்குமதி செய்யப்படுவதாலும் தேங்காய் விலை குறைந்துவிடுகிறது.

    தற்போது தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகள் தேங்காய் விலை குறைந்து விட்டதாகவும், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும், தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    மேலும் தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதி 66 ல் கூறியபடி சென்னை நல வாரியத்தின் மூலம் அரசே தேங்காயை கொள்முதல் செய்து, விலையை நிர்ணயம் செய்து, தேங்காய் எண்ணையை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    • மின்மோட்டார் அமைக்க ரூ. 75 ஆயிரம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது.
    • மானியத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆழ்துளை கிணறு அமைக்க சுமார் ரூ. 9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், மின்மோட்டார் அமைக்க ரூ. 75 ஆயிரம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்க, மின் மோட்டார் அமைக்க வேளாண் துறை மூலம் மானியமாக சுமார் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இது போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆண்டு முழுவதும் மழைக்காலம், வெயில்காலம் என எக்காலத்திலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்பதற்காக இடத்திற்கு ஏற்ப புதிய கிணறு அல்லது புதிய ஆழ்துளை கிணறு ஆகியவற்றை அமைக்க விவசாயிகளுக்கு மானியத்தை உயர்த்தி கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    விவசாயிகள் பம்பு செட் அமைக்கவும், மோட்டார், பைப்லைன், ஆழ்துளை கிணறு அமைக்கவும் மற்றும் நீர் பாசனத்திற்கு தேவையான அனைத்து கருவிகளை வாங்கவும், டிராக்டரை விருப்பப்படும் நிறுனங்களில் வாங்கவும், இவற்றிற்காக மானியத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

    • இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவது கண்டிக்கத்தக்கது.
    • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள அரசு, இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவது கண்டிக்கத்தக்கது.

    அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

    எனவே தமிழக அரசு, அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக விவசாயிகள், தமிழக மக்கள், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை முக்கிய கவனத்தில் கொண்டு கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்கின்றனர்.
    • தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டு உள்ள பருத்தி செடிகளை முறையாக, முழுமையாக கணக்கெடுக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அப்பகுதியில் சாகுபடி செய்த பருத்தி செடி பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இதில் தற்போது சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டு உள்ள பருத்தி செடிகளை முறையாக, முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.

    டெல்டா மாவட்டப் பகுதிகளில் மழையால் வீணாகியுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடிக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
    • கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சமீபத்தில் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கர்நாடகா அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கிறது. நமக்குரிய தண்ணீரை விரைவாக கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    • இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கிரிக்கெட் வீரர் கள் 2007-ம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது 2-வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றிருப்பது பாராட்டுக்குரியது. இந்திய வீரர்களின் அசாத்திய திறமையாலும், கடின உழைப்பாலும் இந்தி யாவிற்கு வெற்றியும், பெருமையையும் தேடித்தந்தி ருக்கின்றார்கள். இந்திய கிரிக்கெட் வீரார்களின் இந்த சாதனைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    விளையாட்டுத் துறையில் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்கள். வருங்காலங்களிலும் அவர்களின் வெற்றி தொடர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டுத் துறைக்கு தேவையான அனைத்து ஆக்கபூர்வமான உதவிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×