search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுஜிசி"

    • உத்தரபிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.
    • கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு பட்டியலிட்டு உள்ளது. போலி பல்கலைக்கழகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் எந்த டிகிரியையும் (பட்டம்) வழங்க அனுமதி இல்லை என கூறியுள்ளது.

    இது தொடர்பாக யு.ஜி.சி. செயலாளர் மணிஷ் ஜோஷி கூறுகையில், 'பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளமான நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக யு.ஜி.சி.க்கு தெரியவந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ செய்யாது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை' என தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு போலியானவை என பட்டியலிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் டெல்லியில் மட்டுமே 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

    அந்தவகையில், அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், வர்த்தக பல்கலைக்கழகம் லிமிடெட், ஐ.நா. பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏ.டி.ஆர். மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்) ஆகிய பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இதைப்போல உத்தரபிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.

    இதைத்தவிர கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.

    பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள இந்த போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, யுஜிசி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
    • அக்டோபர் 30ம் தேதிக்குள் விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அக்டோபர் 30ம் தேதிக்குள் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

    மாணவர் சேர்க்கையை ரத்து செய்த பிறகும் அல்லது கல்லூரியில் இருந்து விலகிய பிறகும் உயர் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை திரும்ப வழங்காதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, இதுதொடர்பாக யுஜிசி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

    பணி நியமனங்களை நிறுத்தி வையுங்கள் - அனைத்து பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு
    புதுடெல்லி:

    இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை எந்த பணி நியமனமும் நடத்த கூடாது என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. #UGC 

    பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. 

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை அனைத்து பணி நியமனங்களையும் நிறுத்தி வைக்க நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. 
    ×