search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுஏஇ"

    • முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. 103 ரன்கள் அடித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 107 ரன்கள் எடுத்து வென்றது.

    தம்புல்லா:

    மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான், யு.ஏ.இ. அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, யு.ஏ.இ. அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    இறுதியில், யு.ஏ.இ. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தீர்த்தா 40 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் சாடியா இக்பால், சந்து மற்றும் துபா ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் முதல் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    குல் பெரோசா 62 ரன்னும், முனீபா அலி 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நடப்பு தொடரில் பாகிஸ்தான் பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    • முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் அரை சதம் கடந்தனர்.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதின. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அரை சதம் கடந்த ஹர்மன்பிரித் கவுர் 66 ரன்னில் வெளியேறினார். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் யு.ஏ.இ. அணி சிரமப்பட்டது.

    ஈஷா ரோகித் 38 ரன்கள் எடுத்தார். கவிஷ்கா எகோடகே பொறுப்புடன் ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில், யு.ஏ.இ. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    மந்தனா 13 ரன்னிலும், ஹேமலதா 2 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியாக ஆடியது. ஹர்மன்பிரித் அரை சதம் கடந்தார்.

    இந்த ஜோடி 75 ரன் சேர்த்த நிலையில் கவுர் 66 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி ஓவரில் ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகள் விளாசியதுடன் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த யு.ஏ.இ. 20 ஓவரில் 115 ரன்கள் எடுத்தது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த யு.ஏ.இ. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குஷி சர்மா 36 ரன்கள் அடித்தார்.

    நேபாளம் சார்பில் கேப்டன் இந்து பர்மா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நேபாளம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன சம்ஜானா கட்கா பொறுப்புடன் ஆடினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சம்ஜானா கட்கா தனி ஆளாக போராடி அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில் நேபாளம் 16.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சம்ஜானா கட்கா 72 ரன்கள் அடித்தார்.

    யு.ஏ.இ. சார்பில் கவிஷா எகொடகே 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனையை தேர்வுசெய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.
    • சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூசுக்கு வழங்கப்பட்டது.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

    ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் நமீபிய வீரரான எராஸ்மஸ், யு.ஏ.இ கேப்டனான முகமது வாசிம், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது யு.ஏ.இ கேப்டன் முகமது வாசிமுக்கும், சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    • வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் பிரான்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது தகவல் கசிந்தது.
    • மனித கடத்தல் நடந்திருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகப்பட்டதால் தடுத்து நிறுத்தி வைத்தனர்.

    பிரான்ஸ் நாட்டின் வாட்ரி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ருமேனியாவைச் சேர்ந்த பெரிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் இருந்தனர். அனைவரும் இந்தியர்கள், விமானமும் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது. இதனால் மனித கடத்தலாக இருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகப்பட்டு அனைவரையும் தரையிறக்கினர்.

    விமான நிலையத்திலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருவர் மனித கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதி அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்திய தூதரகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடந்த 4 நாட்களாக அவர்கள் வாட்ரி விமான நிலையத்திலேயே தங்கியிருந்த நிலையில், நேற்று பிரான்ஸில் இருந்து 276 பேர் ஏர்பஸ் ஏ340 விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று காலை 4 மணிக்கு அந்த விமானம் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது.

    2 சிறுவர்கள் உள்பட 25 பேர் ஸ்பெயினில் புகலிடம் கேட்டுள்ளதால், அவர்கன் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் காட்சிகளுக்காக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    துபாயில் இருந்து நிகாரகுவா சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கியதால் விமானத்தில் இந்தியர்கள் இருந்தது தெரியவந்தது. அமெரிக்காவில் புகலிடம் கேட்பதற்கு நிகாரகுவா சிறந்த இடமாக மாறியுள்ளது. 2023 நிதியாண்டில் மட்டும் 96,917 பேர் அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது. இது முந்தைய நிதியாண்டை விட 51.61 சதவீதம் அதிகமாகும். 

    அபுதாபி ஆட்சியாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து என கூறி ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக் கத்தாரில் தஞ்சமடைந்துள்ளது வளைகுடா நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தோஹா:

    ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக், ஐக்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

    ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதால் கத்தாரில் தஞ்சமடைந்துள்ளதாக தோஹாவுக்கு இன்று வந்தடைந்த அல்-ஷாரிக் அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அல்-ஷாரிக்கின் குற்றச்சாட்டை ஐக்கிய அமீரக வெளியுறவு மந்திரி மறுத்துள்ளார்.

    ஐக்கிய அமீரக வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியாளர்கள் மீது அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டுவது இதுவே முதன்முறையாகும்.

    பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி கத்தார் உடனான தூதரக ரீதியிலான உறவை கடந்தாண்டு சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம்,எகிப்து,பஹ்ரைன் உள்ளிட்ட சில நாடுகள் துண்டித்தது குறிபிடத்தக்கது. 
    ×