என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பத்திரிகையாளர்கள்"
- 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பொரும்பாலனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதல்களின் கோரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை பல்வேறு கட்டங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதன் புகாரில், இந்தப் பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வழக்கம்போல் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
- எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.
இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.
ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.
- கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 35 பத்திரிகையாளர் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.
- கொரோனா தொற்றால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு, மறைந்த பத்திரிகையாளர்கள் 35 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
பத்திரிகையாளர்கள் நல நிதியிலிருந்து 7 பத்திரிகையாளர்கள் மற்றும் 35 பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 16 பத்திரிகையாளர் குடும்பங்களும் அடங்கும். இவர்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
மேலும் நிரந்தர உடல்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2 பத்திரிகையாளர்கள், பெரிய நோய்களுக்கு சிகிச்சைபெறும் 5 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, மொத்தம் ரூ.1.81 கோடி நிதியுதவி வழங்க இக்குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்