என் மலர்
நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி வரி"
- 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது.
- கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வரி வசூலாகியுள்ளது.என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதில் இருந்து இதுவே அதிகபட்சமாக வசூலான ஜிஎஸ்டி வரியாகும்.
இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2.10 லட்சம் கோடியை விட 12.6% அதிகமாகும். மேலும் ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி வரி 12.6 சதவீதம் அதிகரித்து வருகிறது.
- ரூ.400 கோடியில் ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது.
- அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது என்று அந்த அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய சம்பத் ராய், "2020 பிப்ரவரி 5 முதல் 2025 பிப்ரவரி 5 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரியை ராம ஜென்மபூமி அறக்கட்டளை செலுத்தியுள்ளது. இதில், ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது.
அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மகா கும்பமேளாவின் போது 1.26 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டு அயோத்திக்கு 16 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதில் 5 கோடி பேர் ராமர் கோயிலுக்கு வருகை தந்தனர்" என்று தெரிவித்தனர்.
- நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் 1.45 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதம் ரூ.1,45,867 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் 1,45,867 கோடி.
இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,681 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ. 32,651 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.77,103 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.38,635 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,433 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.817 கோடி உட்பட) ஆகும்' என கூறப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
- மத்திய நிதித்துறை இணை மந்திரி மற்றும் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
- ஆன்லைன் கேமிங், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து ஆலோசனை
சென்னை:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதன்பின் இப்போது காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. இதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி மற்றும் மாநில நிதியமைச்சர்கள், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகம் சார்பில், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் பங்கேற்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய வரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. மேலும், ஆன்லைன் கேமிங், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜி.எஸ்.டி. விதிப்பது தொடா்பாக ஆராய மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
- கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையை அக்குழு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்திருந்தது.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
சுமாா் ரூ.36 லட்சம் மதிப்பிலான 'டைனடக்சி மேப்' மருந்து மீது தற்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு வருகிறது. புற்று நோய்க்கான அந்த மருந்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிப்பது நோயாளிகளுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாகவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆராயவுள்ளது.
இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
குழுவில் இடம்பெற்றிருந்த கோவா, 28 சதவீதத்துக்குப் பதிலாக 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வலியுறுத்தியதால், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் பெரும்பான்மை அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டது.
இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது தொடா்பாக ஆராய மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையை அக்குழு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்திருந்தது. எனினும், அதில் இடம் பெற்றிருந்த சில விவகாரங்களுக்கு கோவா எதிா்ப்பு தெரிவித்தது. அதன் காரணமாக அந்த அறிக்கையை மறுஆய்வு செய்யுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது.
அதன் அடிப்படையில் மாநில நிதியமைச்சா்கள் குழு மீண்டும் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது. இது தொடா்பான இறுதி முடிவு எடுப்பதற்கான பொறுப்பை ஜி.எஸ்.டி. கவுன்சிலிடமே மாநில நிதியமைச்சா்கள் குழு ஒப்படைத்துள்ளது.
- மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
- புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத நிலையில் இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் மொத்த வருமானம் மீது 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ததாக தெரிவித்தார்.
'புற்றுநோய்க்கான மருந்துகள், அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்காக உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
- அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிட வேண்டும்.
- நூற்றுக்கணக்கான வணிகர்கள் கலந்து கொண்டார்கள்.
சென்னை:
அகில இந்திய வியாபாரிகள் சங்க மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் எஸ். சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிட வேண்டும். அனைத்து பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி-யை குறைக்க வேண்டும்.
புதிய இரும்புக்கும் பழைய இரும்புக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி என்பது ஏற்புடையது அல்ல. பழைய இரும்புக்கு ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும். பெண்கள் சமையலறையில் பயன்படுத்தும் மசாலா பொருட்களுக்கு ஜி.எஸ்.டி -ல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் பொருளாளர் நியூ ராயல் எஸ். முஹம்மது, தமிழ்நாடு அழகு நகை வியாபாரிகள் சங்க தலைவர் தேஜானந்த், மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி, மாநில இணை செயலாளர் ஆரணி கல்யாணராம் மற்றும் நூற்றுக்கணக்கான வணிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டார்கள்.
- ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.59 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
- ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1.65 கோடியாக இருந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.
இந்நிலையில், மொத்தமாக ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.59,069 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடியாக இருந்தது. இந்தாண்டு 2023 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீத வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது என வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
- செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
- ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக ரூ.83,633 கோடியும் வசூலாகியுள்ளது,
டெல்லி:
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,62,712 கோடி ஆக உள்ளது. இந்தாண்டில் இதுவரை 4-வது முறையாக ஜிஎஸ்டி வரி வசூல் 1,60 லட்சம் கோடிரூபாயை தாண்டியுள்ளது.
அதன்படி மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ,29,818 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,657 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.83,633 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலலும் தமிழகத்திலிருந்து மொத்தம் 10,481 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது,
- கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது.
- 2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
இந்நிலையில், நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.
கடந்த நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும்.
2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது.
- மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.
நெல்லை:
'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கான பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா எந்தவொரு மசோதாவை கொண்டு வந்தாலும் மாநில உரிமைகளை பறிக்கும் உள்நோக்கத்துடனே கொண்டு வருகிறது. புதிய திட்டங்களின் பெயர்களைக் கூட இந்தி, சமஸ்கிருத மொழிகளில் சாமானிய மக்களுக்கு புரியாத வகையில் வைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்றாலும் திருக்குறளைக் கூறி பெருமை செய்வதாக கூறும் பிரதமர் மோடி, தமிழ்தான் பழமையான மொழி என்றும் கூறுகிறார். ஆனால் சமஸ்கிருதம், இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு வழங்குகிற நிதியில் பாதிகூட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது இல்லை.
ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது. ஒரு ரூபாயில் தமிழகத்திற்கு 29 பைசாவை மட்டுமே திரும்ப தரும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.2.02 வழங்குகிறது. 10 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் உத்தரப்பிரதேசம் இன்றளவும் முன்னேற வேண்டிய மாநிலமாகவே தொடர்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெருமழை பெய்தது. குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் சிரமம் அடைந்தனர். மழை சேதத்தை நேரில் ஆய்வு செய்ய வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஆய்வுக்கு பின்புகூட எந்தவொரு நிதியையும் ஒதுக்கவில்லை. மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.
பா.ஜனதா தலைமையிலான அரசு கொண்டு வந்த தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தால் அந்தக் கட்சியே ரூ.6,564 கோடி நிதி பெற்றுள்ளது. நாட்டில் உள்ள பிற கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ள நிதியை காட்டிலும் இது மிகவும் அதிகமாகும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம் பா.ஜனதாவின் நேர்மை மிகவும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் விளை பொருள்களுக்கு ஆதார விலை கொடுக்கப்படவில்லை.
மணிப்பூரில் பெரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி எந்தவித நலத்திட்டங்களையும் அளிக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான சி.ஏ.ஏ. சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதிலேயே பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அரசுக்கு எதிராக போராட டெல்லியை நோக்கி வந்த விவசாயிகளை, தீவிரவாதிகளை போல சித்தரித்து டிரோன்களை கொண்டு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.
இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது, மதநல்லிணக்கத்தை பேணுவது, எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சிக்கான கல்வி குறித்து சிந்திக்காமல், மத அரசியலை மக்களிடம் திணித்து ஆட்சியில் தொடர பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் அரசாக தி.மு.க. திகழ்கிறது.
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். பா.ஜனதாவை பல்வேறு மாநில மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மக்கள் தூக்கி எறியும் காலம் வரும். அந்த நாளே இந்தியாவுக்கான நாளாக அமையும். பா.ஜனதாவின் வெற்றி என்பது நம் நாட்டின் தோல்வியாகிவிடும். ஆகவே, பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜிஎஸ்டி வரி குறித்து பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
- இதனால் அவரை தகாத வார்த்தைகளில் பேசி பா.ஜ.,வினர் தாக்குதல் நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் பாஜகவினர் பிரசாரத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த ஒரு பெண், பா.ஜ.க.வினரிடம் சானிடரி நாப்கின்களுக்கு கூட ஜி.எஸ்.டி வரி வசூலிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, பா.ஜ.க.வினர் அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அந்தப் பெண்ணே வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியது. இதற்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலில் கோவையில் பா.ஜ.க. வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பா.ஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வினர் 5 பேர் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும், தமிழகத்திற்கும் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் !
— Dr. T R B Rajaa (@TRBRajaa) April 12, 2024
கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து… https://t.co/uAvjMFmtjB pic.twitter.com/GoHQGvGqpf