என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 207704"

    • ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • அனைத்து ஆடி விற்பனை மையங்களில் 22 கிலோ வாட் சார்ஜர் பொறுத்தப்பட்டு இருக்கிறது.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளராக ஆடி இந்தியா முழுக்க 60 நகரங்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கட்டமைத்து இருக்கிறது. ஆடி விற்பனை மையங்கள் மற்றும் வொர்க்ஷாப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் விற்பனை மையங்களில் பாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது.

    இது மட்டுமின்றி நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் ஆடி பாஸ்ட் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அனைத்து ஆடி விற்பனை மையங்களிலும் 22 கிலோ வாட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. 16 விற்பனை மையங்களில் 50 கிலோ வாட் டிசி பாஸ்ட் சார்ஜர் பொறுத்தப்பட்டு இருக்கிறது.


    சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் ஆடி இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது ஆடி நிறுவனம் இ-டிரான் எஸ்யுவி, இ-டிரான் ஸ்போர்ட் பேக், இ-டிரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-டிரான் ஜிடி போன்ற எலெக்ட்ரிக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    "மாற்று எரிசக்தி கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய தெளிவான திட்டம் தீட்டி இருக்கிறோம். நாங்கள் நாடு முழுக்க 100-க்கும் அதிக சார்ஜர்களை இன்ஸ்டால் செய்து இருக்கிறோம். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறோம். எதிர்காலம் எலெக்ட்ரிக் தான், அதற்கு ஆடி இந்தியா தயாராக இருக்கிறது," என ஆடி இந்தியா நிறுவன தலைவர் பால்பிர் சிங் திவான் தெரிவித்து இருக்கிறார்.

    • ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் புதிய ஆடி Q3 மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் புதிய Q3 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய ஆடி Q3 மாடல் விலை ரூ. 44 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    தோற்றத்தில் புதிய ஆடி Q3 மாடல் சிங்கில் ஃபிரேம் கிரில், ஆக்டகோனல் டிசைன், செங்குத்தான ஸ்லாட்கள், புதிய எல்இடி டிஆர்எல்கள், வெட்ஜ் வடிவ ஹெட்லேம்ப்கள், கிளாஸ் பிளாக் கிளாடிங், 18 இன்ச் அலாய் வீல்கள், பிளாக் ஷார்க் பின் ஆண்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள், ராப்-அரவுண்ட் 2 பீஸ் எல்இடி டெயில் லைட்கள், டூயல் டோன் பின்புற பம்ப்பர் வழங்கப்பட்டு உள்ளது.


    இந்த காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூப், ஆம்பியண்ட் லைட்டிங், ஆடி டிரைவ் செலக்ட், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரண்டாம் அடுக்கு இருக்கைகள், குரூயிஸ் கண்ட்ரோல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆடி ஸ்மார்ட்போன் இண்டர்பேஸ், MMI நேவிகேஷன் பிளஸ், வயர்லெஸ் சார்ஜிங், ஜெஸ்ட்யுர் கண்ட்ரோல் டெயில்கேட், 180 வாட் 10 ஸ்பீக்கர் ஆடி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட TFSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.

    2022 ஆடி Q3 காரை வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை சர்வீஸ் வேல்யூ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. புதிய ஆடி Q3 டெக்னாலஜி வேரியண்ட் விலை ரூ. 50 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஆடி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
    • இந்த முறை கார்களின் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு ஆடி இந்தியாவின் அனைத்து மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த விலை உயர்வு செப்டம்பர் 20, 2022 முதல் அமலுக்கு வருகிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் தொடர் செலவீனங்கள் அதிகரிப்பு மற்றும் வினியோக சிக்கல் போன்ற காரணங்களால் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக ஆடி இந்தியா தெரிவித்து இருக்கிறது.


    தற்போது ஆடி இந்தியா நிறுவனம் ஆடி A4, A6, A8 L, Q5, Q7, Q8, S5 ஸ்போர்ட்பேக், RS 5 ஸ்போர்ட்பேக் மற்றும் RS Q8 போன்ற கார்களை பெட்ரோல் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இ-டிரான் பிராண்டின் கீழ் ஆடி இந்தியா நிறுவனம் இ-டிரான் 50, இ-டிரான் 55, இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55, இ-டிரான் GT மற்றும் RS இ-டிரான் GT போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    இது தவிர ஆடி இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் முற்றிலும் புதிய Q5 மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இத்துடன் இந்த மாடலின் வேரியண்ட் வாரியான அம்சங்கள் பற்றியும் ஆடி இந்தியா அறிவித்து விட்டது. இந்த காரின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

    • திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • புஷ்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்பா பிஷேக விழா நடை பெறுவது வழக்கம்.

    அது போல் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா நேற்று நடந்தது. மாலை 6.30 மணிக்கு நித்திய காரிய பூஜைகள் முடிந்த பின்பு தட்சிணா மூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய சாமி சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள். நவகிரக மண்ட பம், கைலாசநாதர், சாஸ்தா, ராமர் சன்னதி மற்றும் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் உட்பட அனைத்து தெய்வங்க ளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடந்தது.

    இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற் கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்கா ணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • ஆடி நிறுவனத்தின் 2022 Q3 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

    ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. 2022 ஆடி Q3 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இந்த கார் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரை வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு (2+3 ஆண்டுகள்) நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை பெற முடியும்.


    புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதியை கொண்டுள்ளது.

    காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லைட்கள், பானரோமிக் சன்கிளாஸ், ஹை கிளாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், கம்பர்ட் கீ மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஆடி விர்ச்சுவல் காக்பிட் பிளஸ், MMI நேவிகேஷன் பிளஸ் மற்றும் MMI டச், ஆடி டிரைவ் செலக்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட ஆடி போன் பாக்ஸ், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங் பேககேஜ் பிளஸ் வழங்கப்பட்டுள்ளன. 

    • மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
    • கேழ்வரகு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

    அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

    மஞ்சள் காப்பு அலங்காரத்தில் திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன். வனபத்ரகாளியம்மன் அலங்காரத்தில் வாலிபாளையம் ஸ்ரீமாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் போன்ற 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் செல்லாண்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    ஆடித்தவசுக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Q3 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக ஆடி நிறுவனம் தனது A8L மாடலை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆடி நிறுவனம் பிளாக்‌ஷிப் A8L மாடலை அப்டேட் செய்த கையோடு முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆடி விற்பனையாளர்கள் முற்றிலும் புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி விட்டன. புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் Q8 கார் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 மாடலில் ஹெக்சகன் வடிவம் கொண்ட ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்-கள், புதிய அலாய் வீல்கள், ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய Q3 மாடல் அதிநவீன MQB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு உள்ளது. காரின் உள்புறம் புதிய இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் 10 இன்ச் அளவில் டிரைவர் டிஸ்ப்ளே, 8.8 இன்ச் அல்லது 10.1 இன்ச் அளவில் இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    மேலும் குவாட்ரோ ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய ஆடி Q3 மாடல் பி.எம்.டபிள்யூ. X1, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, வால்வோ XC40 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
    • ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

    அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள முனீஸ்வரன் மற்றும் அண்ணமார் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அபிேஷகம் மற்றும் அபிேஷக பூஜையும் நடந்தது. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன.

    திருப்பூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் குழந்தை வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் புற்றுக்கண் நாகம்மாள் வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    • யார் அவர்? என போலீஸ் விசாரணை
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

    கன்னியாகுமரி:

    ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையில் இருந்து குவிய தொடங்கினார்கள்.

    இதனால் கன்னியாகுமரி யில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது இந்த நிலையில்கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் "திடீர்"என்று மயங்கி சுருண்டு விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராட வந்த பக்தரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காவிரி ஆற்றின் மறு கரையில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என 3 நதிகளும் சங்கமமாகும் பவானி கூடுதுறை உள்ளது.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களும் பொதுமக்களும் ஆற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றின் மறு கரையில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என 3 நதிகளும் சங்கமமாகும் பவானி கூடுதுறை உள்ளது. இங்கு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களும் பொதுமக்களும் ஆற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து ஆயிரக்க ணக்கான மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் பரிகார பூஜை செய்து முக்கூடல் ஆற்றில் புனித நீராடினர். அதன் பிறகு சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆதிகேசவ பெருமாள், லட்சுமி நரசிம்மர், வள்ளி தேவசமேத ஆறுமுகக்கடவுள் என அனைத்து மூலவர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    முக்கூடல் ஆற்றில் ஆன்மீக பக்தர்கள் புனித நீராடவும் பின்னர் உடைகளை மாற்றிக்கொள்ளவும் கோவில் நிர்வாகத்தினர் தனித்தனி இடங்களை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்களுக்கு ஆற்றங்கரை படிகட்டுகள் அருகில் சிமெண்ட் தொட்டிகள் கட்டப்பட்டு அதில் காவிரி ஆற்று நீர் நிரப்பப்பட்டு குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    ஆற்றில் நீராடும் போது பக்தர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டால் அவர்களை காப்பாற்ற பரிசல்களுடன் பரிசல் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி போலீஸ் டி.எஸ்.பி சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடந்த 2 வருடங்க ளாக கொரானா நோய்த்தொற்றால் பவானி கூடுதுறை ஆற்றில் பரிகாரம் செய்து புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடைகள் நீக்கப்பட்டதால் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பெருமளவில் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    • ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவர்.
    • பொதுமக்களும்,குழந்தைகளும்,புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு வழிபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவர். ஆனால் தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கால் அவரவர் வீட்டிலேயே நீராடி கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் மாலை பொதுமக்களும்,குழந்தைகளும்,புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு வழிபட்டனர்.

    மாலை புதுமண தம்பதியினர்,குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவுல்,பொட்டு கடலை, நாட்டுச்சர்க்கரை,எள்,அரிசி,பாசிப்பருப்பு ஆகிய பொருட்களை இளம் தேங்காயில் அடைத்து வாதனா மரக்குச்சியில் இணைத்து தெருமக்கள் ஒன்று கூடி தீயில் சுட்டு மகிழ்ந்தனர். தீயில் சுட்டு வெடித்த தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் அந்த தேங்காயை உடைத்து உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்தவற்றை அக்கம்,பக்கத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து உண்டு தலையாடி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ×