என் மலர்
நீங்கள் தேடியது "slug 208597"
- மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
- கடந்த சில நாட்களாக தந்தத்துடன் கூடிய ஒற்றை யானை அவ்வப்போது கீழே இறங்குகிறது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் அவ்வப்போது அடிவாரப்பகுதிகளுக்கு இவை கீழே இறங்குகின்றன.
இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே மலை அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் பொட்டல் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக தந்தத்துடன் கூடிய ஒற்றை யானை அவ்வப்போது கீழே இறங்குகிறது.
மேலும் தற்போது கரடி ஒன்றும் மணிமுத்தாறில் உள்ள கோவில், காவல் நிலைய பகுதியில் சுற்றி திரிகின்றது.
யானை மற்றும் கரடி சுற்றி திரியும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், யானை, கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் அப்பகுதியி னர் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- குன்னூர் சிம்ஸ் பார்க் அருகில் உள்ள ஹை பீல்ட் எஸ்டேட் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கரடி ஒன்று வெளியே வந்தது.
- கரடி சாக்லெட் தொழிற்சாலைக்குள் புகுந்து, சாக்லெட்டுகளை சாப்பிடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன.
இங்கு ஏராளமான காட்டெருமை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் கரடிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.
இந்த வன விலங்குகள் உணவைத்தேடி அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கரடிகள் ஊருக்குள் சுற்றிதிரிவதோடு மட்டுமல்லாமல், வீடுகள் மற்றும் உணவகங்களில் புகுந்து உணவுகளை சாப்பிடுவது, பொருட்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பார்க் அருகில் உள்ள ஹை பீல்ட் எஸ்டேட் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கரடி ஒன்று வெளியே வந்தது.
நேராக கரடி அங்குள்ள ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்று தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சித்தது. அது திறக்காததால், கரடி தடுப்பு சுவர் மீது ஏறி தொழிற்சாலைக்குள் புகுந்தது.
பின்னர் தொழிற்சாலையில் உள்ள அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த இனிப்புமிக்க 2 கிலோ ஹோம்மெட் சாக்லெட்டுகளை எடுத்து சாப்பிட்டது. பின்னர் சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்து விட்டு வெளியில் சென்றது.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனை நேற்று பணிக்கு வந்த தொழிற்சாலையின் உரிமையாளர் சேகர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதற்கிடையே இங்கு நடமாடும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரடி சாக்லெட் தொழிற்சாலைக்குள் புகுந்து, சாக்லெட்டுகளை சாப்பிடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவானதும் ஊருக்குள் புகுந்து சுற்றி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
- கூண்டுக்குள் சிக்கியதால் மிரண்ட கரடி தப்பிக்கும் எண்ணத்தில் கூண்டுக்குள் முட்டி மோதியதால் அதற்கு ரத்த காயங்கள் காணப்படுகின்றன.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பூதத்தான்குடியிருப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக 3 கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.
பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவானதும் ஊருக்குள் புகுந்து சுற்றி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் பூதத்தான்குடியிருப்பு கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அங்குள்ள களக்காடு-சேரன்மகாதேவி பிரதான சாலையை ஒட்டியுள்ள வேம்படி சுடலைமாடசாமி கோவிலுக்கு, விளக்கேற்றும் எண்ணெயை குடிப்பதற்காக கரடிகள் அடிக்கடி வந்து சென்றதை உறுதிபடுத்தினர்.
இதையடுத்து அங்கு கரடிகளை பிடிக்க கடந்த 20-ந்தேதி முதல் கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இன்று அதிகாலையில் அப்பகுதிக்கு வந்த ஒரு கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அந்த கரடி 5 வயதுடைய ஆண் கரடி ஆகும்.
கரடியை பார்க்க கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூண்டுக்குள் சிக்கியதால் மிரண்ட கரடி தப்பிக்கும் எண்ணத்தில் கூண்டுக்குள் முட்டி மோதியதால் அதற்கு ரத்த காயங்கள் காணப்படுகின்றன.
கரடிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிடிபட்ட கரடியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஊருக்குள் சுற்றும் மேலும் 2 கரடிகளையும் பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஊட்டி அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஹட்டாரி நஞ்சன். நேற்று இவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது.
- வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரவில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கரடி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி, மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்த நேற்று நள்ளிரவில் ஊட்டியில் கரடி ஒன்று குடியிருப்புக்குள் வந்து, அங்குள்ள வீட்டில் புகுந்து காபி குடித்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஊட்டி அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஹட்டாரி நஞ்சன். நேற்று இவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதனால் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரவில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.
நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் இருந்து பாத்திரம் கீழே விழும் சத்தம் கேட்டது. இதனால் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர்.
சத்தம் வந்த இடம் நோக்கி சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அங்கு கரடி ஒன்று நின்றிருந்தது. கரடி வீட்டில் வைத்திருந்த காபி கேனை கீழே தள்ளி காபியை குடித்து கொண்டிருந்தது.
இதனை அவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி, பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.
இந்த வீடியோவை எடுத்தவர்கள், அதனை தற்போது சமூக வலைதளங்களில் திருமண வீட்டில் புகுந்து காபி குடிக்கும் கரடி என தலைப்பிட்டு பரவ விட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வேகமாக வைரலாகி வருகிறது.
- எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிகிறது
- கரடி கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஊட்டி,
ஊட்டி - கூடலூா் சாலையில் எச்.பி.எப்.பகுதியில் வளா்ப்பு எருமைைய கடந்த புதன்கிழமை வனவிலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப் பகுதியில் விட்டு சென்றது. இதன் பேரில் அங்கு சென்று வனத் துறையினா் ஆய்வு நடத்தினா். பின்னா் கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிவதை அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனா். இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் நடமாட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
மேலும், அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
ஊட்டி 27-வது வாா்டு தீட்டுக்கல் பகுதியில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கரடி புகுந்து கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.
- காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
- காட்டெருமைகள் மெதுவாக சென்று நேரு பூங்காவிற்குள் நுழைந்தது.
குன்னூர்:
கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் அந்த சாலையில் காட்டெருமைகள் உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சில நேரங்களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை காட்டெருமைகள் அச்சுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையில் நேற்று முன்தினம் இரவு காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் இந்த காட்டெருமைகள் மெதுவாக சென்று நேரு பூங்காவிற்குள் நுழைந்தது. காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராத வண்ணம் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது.
- வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகர், அரவேணு, ஜக்கனாரை, ஆடந்தொரை சாலை, மிளிதேன், உயிலட்டி பகுதிகளில் கடந்த சில தினங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் கதவை உடைத்தது. விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த பயிர்களையும் சேதப்படுத்தியது.
இதனால் கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடா்ந்து, வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில், 3 கரடிகளில் 2 கரடிகள் சிக்கி கொண்டது. மற்றொரு கரடி தப்பியோடி விட்டது.பிடிபட்ட 2 கரடிகளையும் வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு எடுத்து சென்று துணை இயக்குநா், வனக் கால்நடை மருத்துவா், வனச் சரக அலுவலா் முன்னிலையில் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டன.
தொடர்ந்து இந்த பகுதியில், சுற்றி திரியும் மற்றொரு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.மேலும் அந்த கரடியையும் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விடுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
- தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது.
- கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே மூப்பர்காடு பகுதியில் ஓலேண்டு தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இறந்து கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது மின்கம்பி ஒன்று தாழ்வாக தொங்கிய நிலையில் இருந்தது. பழங்குடியின கிராமமான மானார் முதல் மூப்பர் காலனி வரை செல்லும் தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் எத்தனை வனவிலங்குகள் இறந்து உள்ளன என்று வனத்துறையினரால் கணக்கிட முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று வனத்துறை கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் செல்வகுமார், வனவர் திருமூர்த்தி, வனகாப்பாளகள் லோகேஷ், விக்ரம், வீரமணி மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கரடி ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. கரடியின் காலில் மின்கம்பி சுற்றிய நிலையில் இருந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, காட்டு யானை, காட்டுப்பன்றி மற்றும் கரடியின் உடல்களை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை சேகரித்துக் கொண்டனர்.
கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.
அரவேணு:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.
நாவல் பழம் சீசன் என்பதால் பழங்களை உண்ண வரும் கரடிகள் சாலைகளில் நடமாடி வருவதுடன் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் சுற்றி வருகிறது.இதனால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்நிலையில், கோத்தகிரி அரவேனு பகுதியில் வனத்தை விட்டு வெளியே வந்த கரடி ஒன்று வெகுநேரமாக தோட்டங்களிலேயே சுற்றி திரிந்தது. அப்போது அங்கு இருந்த நாவல் பழ மரத்தை பார்த்ததும் கரடி உற்சாகத்துடன் மரத்தின் மீது ஏறியது. பின்னர் அங்கிருந்த நாவல் பழத்தை பறித்து சாப்பிட்டது.
ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், கரடி அங்கிருந்து தப்பித்து தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு ஒடியது. இப்பகுதியில் அடிக்கடி சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது.
- கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது
குன்னூர்:
குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இவைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கோவில்களில் வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி சென்று விடுகின்றன.
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.
சம்பவத்தன்று, இரவு கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அங்கிருந்த அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை சேதப்படுத்தி சென்று விட்டது.
இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாஷ்விலி உயிரியல் பூங்காவில் இயான் என்ற 5 வயது சிறுவன் தனது தந்தையுடன் சென்றிருந்தான். அப்போது அங்கிருந்த கரடி ஒன்று தண்ணீருக்குள் குதித்தது. இதை பார்த்த இயான் உட்பட பல சிறுவர்கள் ஆனந்தத்தில் குதித்தனர். இதை பார்த்த கரடியும் அவர்களுடன் சேர்ந்து குதித்தது.
இயான் செய்ததை பார்த்து கரடி மீண்டும் குதித்து கொண்டே இருந்தது. இதனை இயானின் தந்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
சிறுவர்களை பார்த்த மகிழ்ச்சியில் கரடியும் குழந்தைகளை போல் தண்ணீர் விளையாடியது. இது பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #NashvilleZoo