என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 209780"
- 52ஆயிரத்து 902கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.06 க்கும், குறைந்தபட்சம் ரூ.55.15க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெற்று வருகிறது.
இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், நேற்று செவ்வாய்கிழமை 121விவசாயிகள் கலந்து கொண்டு 52ஆயிரத்து 902கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.06 க்கும், குறைந்தபட்சம் ரூ.55.15க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்த ரூ.36லட்சத்து12ஆயிரத்து 551க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
- விவசாயிகள் கலந்து கொண்டு 56 ஆயிரத்து 695 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.46.17க்கும், குறைந்தபட்சம் ரூ.38.91க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.
நேற்று வியாழக்கிழமை 78 விவசாயிகள் கலந்து கொண்டு 56 ஆயிரத்து 695 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 4 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.46.17க்கும், குறைந்தபட்சம் ரூ.38.91க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.24லட்சத்து 14ஆயிரத்து 702க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ.6.91 லட்சத்துக்கு ஏலம் போனது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ.6.91 லட்சத்துக்கு ஏலம் போனது.
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்:-
நிலக்கடலை காய் 96.23 குவிண்டால் எடை கொண்ட 297 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.76.50-க்கும் என ரூ.6 லட்சத்து 91ஆயி ரத்து 310-க்கு விற்பனை யானது.
- பருத்தி ஏலத்திற்கு 384 மூட்டை பருத்தி வந்திருந்தது.
- ரூ. 2000 முதல் ரூ.7322 வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
அவினாசி :
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் பருத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள் விளையும் பஞ்சுகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.
நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 384 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில் ஆர்.சி.எச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6000 முதல் ரூ.7322 வரையிலும் மட்ட ரக பருத்தி ரூ. 2000 முதல் 3000 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ. 6.77 லட்சம் ஆகும். இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் எள் அறுவடை நடைபெற்று வருகிறது.
- சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது.
காங்கயம் :
முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 3-ந் தேதிமுதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் எள் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா் தங்கவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது எள் அறுவடை நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள மூலனூா், வெள்ளக்கோவில், கொடுமுடி, சிவகிரி ஆகிய பகுதிகளிலும் பல விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனா். முத்தூா் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது. இத்துடன் எள் விற்பனையும் நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து வணிகா்கள், உயரதிகாரிகளுடன் கலந்து பேசி நடப்பு எள் அறுவடைப்பருவம் முடியும் வரை ஜூன் 3 -ந் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முத்தூா் விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடத்தப்படும். இதில் எள் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா்.
- நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ. 7,450 வரையில் ஏலம் போனது.
அவினாசி :
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா். குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ. 7,450 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
- ஏலத்தில் அரசுக்கு 40 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
- சம்பந்தமில்லாத ஆட்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் இந்த ஆண்டிற்கான ஒகேனக்கல் பரிசல் இயக்க ஒப்பந்தம் மற்றும் சுங்க கட்டண வசூல் ஆகியவை 2.61 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கம், சுங்க கட்டணம் வசூல் செய்வதற்கான ஒப்பந்த காலம் முடிவுறும் நிலையில், 2023 - 24 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த ஏலம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற போதிலும், பல்வேறு காரணங்களுக்காக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் சுங்க கட்டண வசூல் ஒப்பந்தங்களுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது.
இந்த ஏலத்தில் பரிசல் இயக்க ஒப்பந்தத்திற்கு 23 ஒப்பந்ததாரர்களும், சுங்க கட்டணம் வசூல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் 30 ஒப்பந்ததாரர்களும் கலந்து கொண்டனர். இதில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா தலைமையில் நடைபெற்றது ஏலத்தில் இந்தாண்டிற்கான பரிசல் துறை ஏலம் 1.40 கோடிக்கும், சுங்கக் கட்டண வசூல் ஏலம் 1.21 கோடிக்கும் ஏலம் விடப்பட்டது.
கடந்த ஆண்டு பரிசல் துறை ரூ.1.05 கோடிக்கும், சுங்க கட்டணம் ஏலம் ரூ.1.16 கோடிக்கு என மொத்தம் ரூ.2.21 கோடிக்கு ஏலம் விடப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்ற இரு ஒப்பந்தமும் ரூ. 2.61 கோடிக்கு ஏலம் விடப்பட்டதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டில் வெளிப்படை தன்மையாக நடைபெற்ற ஏலத்தில் அரசுக்கு 40 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்தாண்டிற்கான பரிசல் இயக்கம், சுங்க கட்டண வசூல் ஏலம் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற கொண்டிருந்தது. கூட்டத்தில் அனுமதி சீட்டு பெறப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென
மன்றத்திற்கு சம்பந்தமில்லாத ஆட்கள் கூட்ட அரங்கில் நுழைந்து, தங்களுக்கு முறையாக ஒப்பந்த ஏலத்திற்கான நோட்டீஸ் வழங்கப்படவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு அனுமதி சீட்டுடன் ஏலத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்த நிலையில், சில நிமிடங்கள் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட போது போலீஸார் அனுமதிச்சீட்டு இல்லாத நபர்களை வெளியேற்றினர். இதனால் ஏலம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் ஏற்பட்டது.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி, இந்த வாரம் நடந்த ஏலத்தில் 158.04 குவிண்டால் எடை கொண்ட 461 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.69-க்கும், சராசரி விலையாக ரூ.78.40-க்கும் என ரூ.11 லட்சத்து 84ஆயி ரத்து 441-க்கு விற்பனையானது.
- எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.140 கோடிக்கு வாள் ஏலம் போனதாக ஏல நிறுவனம் அறிவிப்பு.
- போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் ஏலத்தில் விடப்பட்டது.
இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.140 கோடிக்கு விற்பனையானது.
லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் ஒன்று திப்பு சுல்தானின் வாள் விற்பனைக்கான ஏலத்திற்கு ஏற்பாடு செய்தது.
இந்த வாள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையின் தனிப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் தற்போது ஏலத்தில் விடப்பட்டது.
ஏலத்தின்போது இரண்டு ஏலத்தாரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்ததாகவும், அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை எனவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியில் எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.140 கோடிக்கு வாள் ஏலம் போனது.
இதுகுறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஒயிட் கூறுகையில், திப்பு சுல்தானின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த வாள் சிறப்பு வாய்ந்தது. திப்பு சுல்தானுடன் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது. அதன் பழமை மற்றும் சிறந்த கைவினைத்திறன் வாளை தனித்துவமாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் மாற்றியுள்ளது என்றார்.
கடந்த 1799ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று நான்காவது ஆங்கிலோ- மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதன்பிறகு, துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட அவரது வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 130 மூட்டை நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- நிலக்கடலை குவிண்டால் ரூ.6,100 முதல் ரூ.7,300 வரை ஏலம் போனது.
அவினாசி :
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 130 மூட்டை நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,100 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம்போனது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 72.16½ குவிண்டால் எடை கொண்ட 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.25.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.19-க்கும், சராசரி விலையாக ரூ.23.51-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 965-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 189.49½ குவிண்டால் எடை கொண்ட 408 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.30-க்கும், சராசரி விலையாக ரூ.82.69-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.86-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.39-க்கும், சராசரி விலையாக ரூ.73.16-க்கும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்து 532-க்கு விற்பனையானது.
எள்
அதேபோல் 388.31 குவிண்டால் எடை கொண்ட 518 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது.
இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.157.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.99-க்கும், சராசரி விலையாக ரூ.152.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.155.00-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.140.99-க்கும், சராசரி விலையாக ரூ.151.99-க்கும் விலைபோனது.
வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலை யாக ரூ.158.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.158.99-க்கும், சராசரி விலையாக ரூ.158.99-க்கும் என மொத்தம் ரூ.56 லட்சத்து 42 ஆயிரத்து 684-க்கு விற்பனையானது.
இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.
- உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும்.
- 4 நிமிட ஏலத்துக்கு பிறகு ஹீப்ரு பைபிளை சோதே பிஸ் நிறுவனம் 38.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.313 கோடி) ஏலத்தில் எடுத்தது.
நியூயார்க்:
1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது.
இது உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும். இந்த பைபிளை ருமேனியாவிற்கான அமெரிக்க முன்னாள் தூதர் ஆல்பிரட் மோசஸ், வாங்கி இருந்தார்.
இந்த ஹீப்ரு மொழி பைபிள், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 2 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
4 நிமிட ஏலத்துக்கு பிறகு ஹீப்ரு பைபிளை சோதே பிஸ் நிறுவனம் 38.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.313 கோடி) ஏலத்தில் எடுத்தது. இந்த பைபிள், இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள யூத மக்களின் அருங்காட்சியகத்துக்கு பரிசாக வழங்கப்படும் என்று சோதேபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் தூதர் மோசஸ் கூறும்போது, 'ஹீப்ரு பைபிள் வரலாற்றில் மிகவும் செல்வாக்குமிக்கது. மேற்கத்திய நாகரீகத்தின் அடித்தளமாக உள்ளது. இது யூத மக்களுக்கு சொந்தமானது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
1994-ம் ஆண்டு லியொனார்டோ டாவின்சியின் கோடெக்ஸ் லீசெஸ்டர் கையெழுத்து பிரதி 30.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதை ஹீப்ரு பைபிள் முறியடித்தது.
இதன்மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட மிக மதிப்பு மிக்க கையெழுத்து பிரதி என்ற சாதனையை படைத்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்