என் மலர்
நீங்கள் தேடியது "பாராட்டு விழா"
- முதலமைச்சருக்கு கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தி வருகின்றனர்.
- அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா தொடங்கியது.
மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா என்ற தலைப்பில் முதலமைச்சருக்கு கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தி வருகின்றனர்.
துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.
- மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
- போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார்
கரூர்:
கரூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார். மாணவி தனனி 15வது இடம் பெற்றார். மேலும், ஹேமஸ்ரீ, திகழ், அஸ்வந்த், பத்ரிநாத், சர்வேஸ் ஆகியோர் தகுதி சான்று பெற்றனர்.
தொடர்ந்து, பள்ளியில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வீரமலை, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டினர். விழாவில் தலைமை ஆசிரியர் சாகுல் அமீது உட்பட பலர் பங்கேற்றனர்.
- தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
காங்கயம் :
கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தமிழக அணியில் காங்கயம் ரன்னர்ஸ் சார்பாக 35 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா காங்கயம்-சென்னிமலை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தமிழக அணியில் காங்கயம் ரன்னர்ஸ் சார்பாக 35 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 5000 மீட்டர் நடை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற களிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை பிரேமலதா மற்றும் வட்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் வெண்கலம் வென்ற ஜோதி மற்றும் காங்கயம் ரன்னர்ஸ் சார்பாக கலந்து கொண்ட லதா மற்றும் ராஜ்குமார் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விழாவில் காங்கயம் ரன்னர்ஸ் அமைப்பை சேர்ந்த லதா மகேஷ்குமார் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- வருகிற 11-ந் தேதி நடக்கிறது
- ஐயப்ப பக்தர்கள் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்
ராணிப்பேட்டை:
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் வேலூர் மண்டலத்தில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மற்றும் குரு வந்தனம் அழைப்பு நிகழ்ச்சி வருகிற ஜூன் 11-ந்தேதி ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள ரமணி சங்கர் மஹாலில் நடைபெறகிறது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகள் சேவா சமாஜத்தின் நிர்வாகிகள், குருமார்கள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாநில நிர்வாகிகள், குருமார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர், ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு தேசிய கமிட்டி நிர்வாகிகள், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ தேசிய பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஐயப்ப பக்தர்கள் என 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த தகவலை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வட தமிழ்நாட்டின் மாநில தலைவரும் சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமியுமான ஜெயச்சந்திரன் ெதரிவித்துள்ளார்.
- ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
- சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருப்பூர் :
திருப்பூர் கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் செயலாளர் எக்ஸ்லான். கே. ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். மணிப்பூர், மேகலாயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் 10 ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி காவ்யா மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி பிரதிக்ஷாவிற்கும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் தலைவர் வீனஸ். குமாரசாமி நன்றி கூறினார்.
- இந்த நிகழ்ச்சிக்கு தேஜஸ் பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் கண்ணையன் தலைமை தாங்கினார்.
- பயிற்சி பெற்று, தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி செல்வோருக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தேஜஸ் போலீஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தனியார் பயிற்சி மைய அகாடமி அமைந்துள்ளது.
இந்த அகாடமி மையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்விற்கு பயிற்சி பெற்று, தேர்வு எழுதி வெற்றி பெற்று, அரசு பணி செல்வோருக்கு, கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தேஜஸ் பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் கண்ணையன் தலைமை தாங்கினார். முதுநிலை ஆசிரியர் முனிராஜ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி மைய மாணவி ஜெயப்பிரியா விழாவில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் கலந்து கொண்டு, பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெற்று, தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி செல்வோருக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆசிரியர் மற்றும் பயிற்சி மைய மாணவ, மாணவர்கள் மற்றும் பயிற்சி மைய நிர்வாகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி மைதானத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் இன்டர் நேசனல் மாடர்ன் மார்ஷி யல் ஆர்ட்ஸ், மருது வளரிச் சிலம்பம் மாணவ மாணவிகளின் திறன் மேம்பாட்டு உலக சாதனை போட்டியை நடத்தியது. இதில் பங்கு பெற்று பதக்கங்களும் சான்றிதழ்க ளும் பெற்று வந்த ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவி களுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்வில் மாஸ்டர் விஜயக்குமார், கிருஷ்ணாபுரம் கூட்டுறவு பேங்க் குட்டி நம்பிராஜன், கிளை செயலாளர் லட்சுமணன், அனந்தப்பன் பழனிக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 27 ஊர்காவல் படையினர் விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
- எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம், வெற்றி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
தருமபுரி,
திருவண்ணாமலையில் கடந்த மாதம் ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இந்த விளையாட்டு போட்டியில் மாநில முழுவதும் உள்ள ஊர்காவல் படையினர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 27 ஊர்காவல் படையினர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
இதனை அடுத்து நேற்று தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் முதலிடம் பிடித்த ஊர் காவல் படையினருக்கு பாராட்டு விழா நடந்தது.
எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம், வெற்றி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் தண்டபாணி இன்ஸ்பெக்டர் அன்பழகன் செல்வமணி மற்றும் ஊர் காவல் படையினர் கலந்து கொண்டனர்.
- 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் உமாதேவி வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவரும், காவல் ஆணைய உறுப்பினருமான முன்னாள் டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், 'பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து படிப்புகளுக்குமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர்கள் அடுத்த கட்டத்திற்கு உயருகின்றனர். வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதே இடத்திலேயே நின்று விடுகின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன், சார்பு ஆய்வாளர் சங்கர நாராயணன், நத்தம்பட்டி சார்பு ஆய்வாளர் பண்டிலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நீட் தேர்வில் 720 க்கு 628 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
- கலைமணிக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு பரிசு வழங்கி பாராட்டினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, மொரப்பூர் கொங்கு கல்லூரி தாளாளர் பொன் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். இப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 720 க்கு 628 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைமணிக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு பரிசு வழங்கி பாராட்டினார்.
கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி தாளாளர் சந்திரசேகர் மாணவிக்கு இனிப்புகள் வழங்கினார்.
இவ்விழாவில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர்கள் வெற்றிச்செல்வன், கணேசன், நாகராஜ், பரமசிவம், தமிழரசு, ராமு, குணசீலன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி பாராட்டினார்கள்.
- போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் ஏராளமான மாணவ மாணவியர் இங்கு வந்து நூல்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.
- வெற்றி பெற்ற மாணவருக்கு வாசகர் வட்டம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கிளை நூலகத்தில் யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட எல்லாவித தேர்வுகளும் எழுத மேற்கோள் நூல்கள் அடங்கிய தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் ஏராளமான மாணவ மாணவியர் இங்கு வந்து நூல்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிளை நூலகத்தில் மேற்கோள் நூல்களை வாசித்து தேர்வெழுதிய கார்த்திக் விஜய் என்ற ஓசூர் மாணவர், யு.பி.எஸ்.சி. தேர்வெழுதி, இந்திய அளவில் 551-வது ரேங்க்கில் தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.எஸ், ஐ.பி.எஸ். பணிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர், கோவை வேளாண் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஓசூர் கிளை நூலகத்தில் மேற்கோள் நூல்களை படித்து யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
ஓசூர் கிளை நூலகத்தில் மேற்கோள் நூல்களை பயன்படுத்தி வெற்றி பெற்றதால், அந்த மாணவருக்கு, வாசகர் வட்டம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, வாசகர் வட்ட தலைவர் கருமலைத்தமிழாழன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெகந்நாதன், மகளிரணி தலைவர் மணிமேகலை, செயற்குழு உறுப்பினர் புருசப்பன் ஆகியோர் மாணவரை பாராட்டி பேசினர். மேலும் அவருக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. பின்னர், மாணவர் கார்த்திக் விஜய் ஏற்புரை நிகழ்த்தினார். இதில் மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, நூலக அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில், நூலகர் ரேணுகா சக்திவேல் நன்றி கூறினார்.
- தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பரிசு தொகையை, அஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் வழங்கி பாராட்டினார்.
- நீட் தேர்வில் 536 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் மாதவனுக்கு 5 ஆயிரம், 330 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவிற்கு 5 ஆயிரமும் வழங்கினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.
இப்பள்ளியில் பிளஸ்-2 மாணவன் மது 544 மதிப்பெண் பெற்று முதல் இடமும், மாணவி சோபா 537 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், 515 மதிப்பெண் பெற்ற யாக மணி இடமும் பெற்றுள்ளனர். அதேபோல், 10-ம் வகுப்பில் 465 மதிப்பெண்கள் பெற்று தீபக் குமார் முதல் இடமும், நவீன் குமார் 437 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும்,
ராகுல் 435 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பரிசு தொகையை, அஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் வழங்கி பாராட்டினார்.
அதே போல், நீட் தேர்வில் 536 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் மாதவனுக்கு 5 ஆயிரம், 330 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவிற்கு 5 ஆயிரமும் வழங்கினார்.
விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மூர்த்தி வரவேற்றார். காதர்பாஷா, ரங்கசாமிகார்த்திக் பாபு, சிவகாமி, சண்முகம், வெங்கடராஜ், பெருமாள், அன்பரசன், பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் முனிராஜ், ஆசிரியர் பயிற்றுனர் நேரு, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.