search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 218096"

    • மோட்டார் சைக்கிளில் தலை மோதியதால் உயிர் இழந்த சோகம்
    • பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் புனித சவேரியார் தெருவை சேர்ந்தவர் ஜோஸ் ராஜ். கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சகாய அஜய் (வயது 22). வெள்ளமோடியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2- ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று பிற்பகல் சகாய அஜய் தனது மோட்டார் சைக்கிளில் குளச்சல் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார். மோட்டார் சைக்கிள் மண்டைக்காட்டை கடந்து கூட்டுமங்கலம் பகுதியில் செல்லும்போது எதிர்பாராமல் நிலை தடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குளானது சகாய அஜய் சாலையில் உருண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சகாய அஜய் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் ஜூலியட் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக் டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்து பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் கடியபட்டணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரிக்கு சென்றவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கல்லணைக்கு குளிக்க வந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பூதலூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவரம்பூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அருண் பாலாஜி (வயது 18).

    திருச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரிக்கு சென்றவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கல்லணைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 6 பேரும் கல்லணைக்கு அருகில் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    அப்போது பாலாஜி ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் தண்ணீரில் பாலாஜியை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து தோகூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் அதிகாரி சகாயராஜ், போக்குவரத்து அதிகாரி முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காவிரி ஆற்றில் இறங்கி தேடி மாணவன் அருண்பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

    சேலம்:

    தமிழக உயர்கல்வித்துறை யின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைத்து அதன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். அதேசமயம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

    இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai-15" என்ற பெயரில், 8-ந் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவேலையாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 19-ந் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 18004250110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

    சேலம்:

    தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைத்து அதன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். அதேசமயம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

    இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai-15" என்ற பெயரில், 8-ந் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவேலையாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 19-ந் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 18004250110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • பேஷன் டிசைன் பட்டப்படிப்பு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர் சிபினுக்கு வழங்கினார்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு கைத்தறி துறை சார்பில் மாநில அளவில் மாணவர்களுக்கான (பேஷன் டிசைன் படிக்கும்) இளம் ஆடை வடிவமைப்பாளர் போட்டி நடைபெற்றது. இதில் பேஷன் டிசைன் பட்டப்படிப்பு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு ஆசர் மில் லேபர் காலனியை சேர்ந்த தம்பதியர் விஜயன், சிந்து ஆகியோரின் மகன் சிபின் கலந்துகொண்டு மாநில அளவில் 2வது பரிசு பெற்றார். இதற்கான பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலக த்தில் மாணவர் சிபினுக்கு வழங்கினார். இதையடுத்து சிபின் தனது பெற்றோருடன் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிகழ்ச்சியில் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நிர்வாகி திலக்ராஜ், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், 22வது வட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே நடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை பேரணியை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.
    • விலையில்லாப் பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை நாலு கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ''நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் நம் எதிர்காலத்தை திட்டமிடுவோம்'' என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் ஊர் முழுவதும் விழிப்புணர்வு பேரணியாக சென்று கோஷமிட்டனர்.

    சிவகங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நாலுகோட்டையில் மாணவர் சேர்க்கை பேரணி ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் தலைமை யில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆனந்தி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கனிமொழி, தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் பாப்பா வெள்ளத்தாய், பஞ்சுராஜ், லட்சுமி, ஜெகதாம்பிகை முன்னிலை வகித்தனர்.

    இதில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் கூறியதாவது:-

    இந்த பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காற்றோட்டமான கட்டிடம், சுகாதாரமான கழிவறை, தொழில் நுட்ப உதவியுடன் கல்வி கற்க கணினி வசதி, மின் வசதி, கியூ.ஆர். கோடு மற்றும் படவிளக்க தொலைக்காட்சியுடன் கல்வி சேனலில் கற்றல்- கற்பித்தல் வசதி உள்ளது.

    ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி, சரளமாக வாசிப்புத் திறனை வளர்க்க செய்தித்தாள், தேன்சிட்டு, நூலகம் வாசிக்கும் வசதி, ஆரோக்கியமாக கல்வி கற்க காலை உணவு, மதிய சத்துணவுத் திட்டம், பல்கலைத் திறன் வளர்க்க இலக்கிய மன்றங்கள், சிறார் திரைப்படம், வானவில் மன்றங்கள், கலைத் திருவிழா போட்டிகள், வென்றவர்களுக்கு வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்ல வாய்ப்பு, மாலை நேர கல்வி கற்க இல்லம் தேடிக் கல்வி, எதிர்கால கல்வி வழிகாட்டுக்கு நான் முதல்வன் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர வருவாய் மற்றும் சிறப்பு கல்வி திட்டம் விலையில்லா சீருடைகள், விலையில்லா காலணிகள், விலையில்லாப் பாடப் புத்தகம் விலையில்லா புத்தகப்பை வழங்கப்படுகிறது.

    வண்ணம் தீட்ட கலர் பென்சில் கிரையான்சுகள், நோட்டுகள், கணித உபகரண பெட்டிகள், நில வரைபடங்கள் பயிற்சி ஏடுகள், கணித செயல் பாடுகளை புதுப்பிக்க மகிழ் கணிதம்நிகழ்வு, கல்வி இணைச் செயல்பாடுகள் மூலம் பெண் குழந்தை களுக்கு யோகா, விளை யாட்டு, ஓவியம் மூலம் பன்முகத்திறன் வளர்க்கும் பயிற்சி, ஆடல், பாடல் விளையாட்டின் மூலம் 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி, 4.5 வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி வழியில் கற்பித்தல், 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு படைப்பாற்றல் கல்வி முறையில் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஆரம்பக் கல்வி முதல் அரசு பள்ளியின் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் உள் ஒதுக்கீடு, மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு, பல்கலைக் கழகங்களில் மாதம் ரூ.ஆயிரம் ஊக்க ஊதியம் என எல்லா வசதிகளும் நிறைந்த அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்திடுவோம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி இந்த பேரணி சிறப்பாக நடந்தது.

    இதையடுத்து 15 பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நமது பள்ளி யில் சேர்ந்து படிக்க உறுதி அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் கடியபட்டணத்திலிருந்து புறப்பட்டனர்.
    • நிதின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நிதின் (வயது 16), சிஜோ (16).

    இவர்கள் இருவரும் பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளனர். எனவே பள்ளி விடுமுறையில் இருக்கும் அவர்கள், தங்கள் நண்பன் முட்டத்தை சேர்ந்த ரிஜோவுடன் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் கடியபட்டணத்திலிருந்து புறப்பட்டனர்.

    அவர்கள் குளச்சல் சைமன்காலனி, ஏ.வி.எம்.கால்வாய் அருகில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ஓடியது. தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் அதே வேகத்தில் கால்வாய்க்குள் பாய்ந்தது. அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் தேவராஜ் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் நிதின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    உயிருக்கு போராடிக்கொண்டி ருந்த சிஜோ, ரிஜோ ஆகியோரை போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிதின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இம்மாத துவக்கத்தில் 32 வயதான பிஎச்டி மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
    • மார்ச் மாத வாக்கில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் இதே வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள தங்கும் விடுதி அறையில் மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    உயிரிழந்த மாணவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் இரசாயன பொறியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். உயிரிழந்த மாணவர் உடலை மீட்ட காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.

    விசாரணையில் இந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டால், இந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸ்-இல் பதிவான நான்காவது தற்கொலை சம்பவமாக இது இருக்கும். முன்னதாக இம்மாத துவக்கத்தில் 32 வயதான பிஎச்டி மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக மார்ச் மாதத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் இதே வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான இந்த மாணவர் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இதுதவிர பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆய்வு மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். 

    • நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
    • இவரும் அவரது‌ நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூ ரைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில்

    பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் அவரது நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் படுகை அணை பகுதிக்குச் சென்று தனது நண்பர்க ளுடன் குளித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு குளித்துக் கொண்டி ருந்த பிரவின் மட்டும் காணா வில்லை. இதனால் நண்பர்கள் படுகை அணை யில் அவரை தேடி உள்ள னர். ஆனால் அவர் கிடைக்காததால், உடனடி யாக ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீ சார் அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் படுகை அணை பகுதியில் தேடிவந்தனர். வெகு நேரம் தேடிய பிறகு படுகை அணை பகுதியில் மூழ்கி இறந்து கிடந்த பிரவீன் உடலை மீட்டனர். போலீசார் அவரது உடலை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோத னைக்காக சேர்த்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
    • நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொ ழிதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நடப்பு 2023-24-ம் கல்வி ஆண்டில், இந்த கல்லூரியில் மருத்து வம் சாராத பட்டப்ப டிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

    இந்த கல்வியாண்டில், 3 ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), சுவாச சிகிச்சை (ரெஸ்பி ரேசன் தெராபி), அறுவை அரங்கம் மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம் (ஆபரேசன் தியேட்டர் மற்றும் அனெஸ்தீசியா டெக்னாலஜி), மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி), சிக்கலான பராமரிப்பு தொழில் நுட்பம் (கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி) ஆகிய 5 இளநிலை பட்டப்படிப்பு களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவில், டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னோசிஸ் டெக்னா லஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் (எமர்ஜென்சி கேர் டெக்னீசியன்), மயக்க மருந்து தொழில்நுட்ப வியலாளர் (அனெஸ்தீ சியா டெக்னீசியன்), ஆப ரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர் (ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியசன்), எலும்பி யல் தொழில்நுட்பவிய லளர் (ஆர்த்தோபோடிக் டெக்னீசியன்), பல்நோக்கு மருத்துவ பணியாளர் (மல்டி பர்ப்பஸ் ஆஸ்பிட்டல் ஒர்க்கர்) ஆகிய 5 சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.

    இந்த பாடங்கள் சேர்க்கை சம்மந்தமான விபரங்களை https://tnmedicalselection.net என்ற வெப்சைட்டில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க லாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 16 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை 

    • கல்லூரி மாணவர் திடீரென மரணமடைந்தார்.
    • கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பாட்டக்குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் மெல்வின் கிறிஸ்டோபர்(வயது19). சிவகாசியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் 1½ மாதங்களுக்கு முன்பு பேண்ட் கிழிந்த நிலையில் மெல்வின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஜோசப் அது குறித்து விசாரித்தபோது, கல்லூரியில் மயங்கி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது மெல்வின் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜோசப் கொடுத்த புகாரின் பேரின் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
    • விபத்தில் சிக்கிய 2 பேரில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

    இவரது மகன் நித்தியானந்தம் (வயது 20). இவர் சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில், அதே கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படிக்கும் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஹரிஷ் (20) என்பவரை அழைத்துக் கொண்டு அயோத்தியாப்பட்டணம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், லாரியில் உரசி இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் நித்தியானந்தம் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியே வந்தவர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நித்தியானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிஷூம் காயமடைந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×