என் மலர்
நீங்கள் தேடியது "பயங்கரவாதி"
- 3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் பரமக்குடிக்கு பாஜக நிர்வாகி நினைவஞ்சலிக்கு சென்ற எச்.ராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, நாங்கள் என்ன பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தர்களா ? எதற்கு எங்களை தடுக்குறீர்கள் என்று எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.
இதைதொடர்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து எச்.ராஜாவை செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சோதனைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உணவு, தங்குமிடம் மற்றும் பணம் வழங்கினர்.
பயங்கரவாத ஊடுருவல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இன்று (புதன்கிழமை) ஜம்மு முழுக்க பல்வேறு இடங்களில் சோதனை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 12 இடங்களில் சோதனைகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகியவற்றைச் சேர்ந்த தீவிர பயங்கரவாதிகள் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியது குறித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஊடுருவல்களுக்கு ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கிராமங்களை தளமாகக் கொண்ட தொழிலாளர்கள் (OGWs) மற்றும் பிற பயங்கரவாத கூட்டாளிகள் வசதி செய்தனர், அவர்கள் பயங்கரவாதிகளுக்கு தளவாட ஆதரவு, உணவு, தங்குமிடம் மற்றும் பணத்தை வழங்குவதில் ஈடுபட்டிருந்தனர் என்று அதிகாரி கூறினார்.
- டெஸ்லாவுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள்.
- எலான் மஸ்க்குடன் சேர்நது அந்த காரில் டிரம்ப் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர் தோழனான எலான் மஸ்க் நடத்தும் கார் கம்பெனியான டெஸ்லாவுக்கு அண்மை காலமாக விளம்பரம் செய்து வருகிறார்.
டெஸ்லா காரை அனைவரும் வாங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் தனக்கென சிவப்பு நிற மாடல் S டெஸ்லா காரை டிரம்ப் வாங்கியுள்ளார். எலான் மஸ்க்குடன் சேர்நது அந்த காரில் டிரம்ப் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
டெஸ்லா நிறுவன கார்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்காவில் எழுந்துள்ளன. மேலும் பங்குச்சந்தையில் அந்நிறுவனம் சரிவைச் சந்தித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மஸ்க்கின் கார்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க, டெஸ்லா கார் வாங்குவதாக டிரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்திருந்தார்.


இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகை வளாகத்தில் டெஸ்லா கார்களில் காட்சிப்படுத்தல் நிகழ்ந்தது. அப்போது பல வகை டெஸ்லா மாடல் கார்களை பார்வையிட்ட டிரம்ப், தனக்கு பிடித்தது என கூறி மாடல் S சிவப்பு பெயிண்ட் அடித்த காரை விலைக்கு வாங்கியுள்ளார். எலான் மஸ்க் தள்ளுபடி அளிப்பதாக கூறியும் அதை ஏற்காத டிரம்ப், காரின் ஒரிஜினல் விலையான 76,880 டாலரை (சுமார் ரூ. 67 லட்சம்) கொடுத்து பேரத்தை முடித்துள்ளார்.
இதற்கிடையே டெஸ்லா ஷோரூம்கள், சார்ஜிங் நிலையங்கள் மற்றும் டெஸ்லா வாகனங்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. டெஸ்லா காரை புறக்கணிக்க வேண்டும், எலான் மஸ்க் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷங்கள், பதாகைகளுடன் போராட்டங்கள் நடக்கின்றன.

இதுகுறித்து பேசிய டிரம்ப், டெஸ்லாவுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள். அவர்கள் எங்கள் கையில் சிக்கும்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று கொந்தளித்தார்.
- பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
- பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
பெஷாவர் :
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்வாவில் உள்ள மர்தான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதை தொடர்ந்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அந்த பயங்கரவாதி போலீசாரால் தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி மெஹ்முத் என்கிற ஒபைத் என்பது தெரியவந்தது.
மர்தான் மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய ஒபைத் தலைக்கு கைபர் பக்துங்வா மாகாண அரசு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களை இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
- டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாதபடி எல்லையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களையும், போதை பொருட்களையும் இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
எல்லையில் அத்துமீறி நுழையும் டிரோன்களை கண்காணிக்க ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று ஊடுருவியது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து உஷாரானார்கள்.
அந்த டிரோனை நோக்கி சரமாரியாக சுட்டனர். அந்த டிரோன் பாகிஸ்தானுக்குள் திரும்பி செல்ல முயன்றது. என்றாலும் இந்திய ராணுவ வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.
அமிர்தசரஸ் அருகே ராஜாதல் என்ற இடத்தில் அந்த டிரோன் நொறுங்கி கிடந்தது. அந்த டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
- பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர்.
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 கிலோ கண்ணிவெடி குவியலை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய நாசவேலைக்கு முயற்சி செய்தது. இதன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் காஷ்மீரில் சிட்ரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் காரில் ஊடுருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.
அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் ஒரு வாகனத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
பயங்கரவாதிகளை உயிருடன் பிடிக்க பாதுகாப்பு படையினர் முதலில் முயற்சி செய்தனர். ஆனால் பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர்.
காலை 7.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கி சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. 8.30 மணி அளவில் பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து சுடுவது நின்றது.
அதன்பிறகு அந்த வாகனத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
- அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் அந்த அமைப்பின் தலைவரும், மும்பை, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.
அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.
இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது. இதேபோல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
இந்தநிலையில் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி உலக அளாவிய பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டுள்ளான். இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எல். அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2016-ன் படி சொத்துகள் முடக்கம், பயண தடை, ஆயுதத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. சபை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இவருக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு உண்டு. மேலும் இந்தியாவில் நடந்த செங்கோட்டை தாக்குதல் (2000-ம் ஆண்டு) ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் தாக்குதல் (2008-ல்), ஸ்ரீநகர் தாக்குதல் (2018) உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்புடையவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக, அப்துல் ரகுமான் மக்கிக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றம் சிறை தண்டனை விதித்தது.
- கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
- சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- பஞ்ச்வார் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
- போலீசார் காலிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.
காலிஸ்தான் கமாண்டோ படை- பஞ்ச்வார் குழுவின் தலைவர் பஞ்வார் (63). ஜூலை 2020ல் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இவர், லாகூரில் உள்ள தனது வீட்டு அமைந்துள்ள ஜனஹர் டவுனில் சன் ஃப்ளவர் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள பூங்காவில் தனது பாதுகாவலருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, மோட்டார் பைக்கில் வந்த இரு ஆசாமிகள் பஞ்ச்வார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பஞ்ச்வார் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐ, ராணுவ உளவுத்துறை (எம்ஐ) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (சிடிடி) உள்ளிட்ட பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.
- பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு காஷ்மீரை சேர்ந்த சிலர் நிதி உதவி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.
- சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில் சீன கையெறி குண்டு இருந்தது தெரிய வந்தது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு காஷ்மீரை சேர்ந்த சிலர் நிதி உதவி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் அத்து மீறி நுழையாமல் இருக்க எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கிஷ்ஸ்வார் மாவட்டம் சிரஜ் பகுதியில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில் சீன கையெறி குண்டு இருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவனது பெயர் முகமது யூசுப் சவுகான் என்பதும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தங்கள் பகுதியில் யாராவது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பற்றி உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் சர்க்கஸ் கலைஞர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்க்கஸ் கலைஞர் தீபு என்பவர் அனந்த்நாக்கில் உள்ள கேளிக்கை பூங்காவில் தனியார் சர்க்கஸ் மேளாவில் வேலை பார்த்து வந்தார்.
உதம்பூரை சேர்ந்த தீபு நேற்று மாலை அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.
இதையடுத்து, தீபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
- ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம்.
- என்கவுன்டரை அடுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர், பாதுகாபு்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்நிலையில், பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர்.
இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.