என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்குபதிவு"
- இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி;
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடிக்க கால நிர்ணயம் வகுத்து உத்தரவிட்டது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஒதுக்கப்பட்டது.
அதனை மீறி தருமபுரி மாவட்டத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் தருமபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தருமபுரி பஸ் நிலையம், ஆறுமுக ஆச்சாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, தருமபுரி நான்கு ரோடு ஆகிய பகுதிகளில், பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் தொப்பூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோம்பை செல்லும் பாளையம்புதூர் ஜங்ஷன் செல்லும் வழியில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த ஒருவர் மீதும், மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மொரப்பூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் பாப்பாரப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகிலும், பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பென்னாகரம் கடைவீதி பகுதியிலும், ஏரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏரியூர் நிப்பான் பெயிண்ட் கடை அருகிலும், நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.
- இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டை சேர்ந்தவர் ஜெகன்(30).பெயிண்டர். இவரது மனைவி அபிராமி. இவர் தனது கணவர் ஜெகனிடம் கோபித்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 30 -ந் தேதி ஜெகன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்தார். ஆனால் அபிராமி வரமறுத்தார். இதன் காரணமாக அசிங்கமாக திட்டி வீட்டை கொளுத்திவிடுவதாக கூறி கூரை வீட்டிற்கு தீவைத்து கொளுத்தினர். இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து மனைவி அபிராமி கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குபதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.
- மாளி கம்பட்டை சேர்ந்தவர் ரமேஷ்
- நண்பரோடு ஊருக்கு திரும்பினார்
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மாளி கம்பட்டை சேர்ந்தவர் ரமேஷ் (44). இவர், பண்ருட்டி தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10-ந் தேதி அன்று மாலைவேலை முடிந்து தனது நண்பரோடு ஊருக்கு திரும்பும் பொழுது பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு முன்னாள் சென்ற பெண் திடீரென குறுக்கே வந்ததால் இவரது நண்பர் கத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அதற்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற புதுப்பிள்ளையர் குப்பம் ரவி மகன்கள் கணேஷ், ஹரிஹரன் ஆகியோர் தங்களை தான் ஓய் எனகத்தியதாக எண்ணிக்கொண்டு ரமேசையும் அவரது நண்பரையும் அசிங்கமாக திட்டி ஜாதி பெயரை சொல்லிஅடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரமேஷ்கொடுத்தபுகாரின் பேரில் காடாம்பு லியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சப் -இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி அடுத்த கீழ்காங்கேயன் குப்பத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 61)ஓய்வு பெற்ற போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர். இவர் அதேபகுதியில் உள்ளஅய்ய னார் கோவிலில் இரவு காவல ராக இருந்து வருகிறார்.
கடந்த 11-ந் தேதி இவரும் இவரது மனைவியும் வழக்கம் போல் அய்யனார் கோவிலை பூட்டிவிட்டு வருவதற்காக கோவிலுக்கு சென்றனர்.கோவில் விளக்கை அணைத்த போது கோவிலின் கருவறை பின்புறம் உள்ள பகுதிகளில் குடித்துக் கொண்டு இருந்தஅதே ஊரை சேர்ந்த சிவக்குமார் மகன் விமல்ராஜ்,சம்பத்குமார் மகன்சதீஷ், இளங்கோ மகன்தயாநிதி மற்றும் துரைஆகியோர் புகழேந்தியை அசிங்கமாக திட்டி கழுத்தை பிடித்து நெரித்து அடித்து அவரது மனைவியை சேலை யை பிடித்து இழுத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில்புகார் கொடுத்தனர். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சாந்தா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை.இவரது மகன் கார்த்திக். இவருடைய மகள் பிரியதர்ஷினி (18) மேல்மலையனூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த 17-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கார்த்திக் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதில் தொரப்பாடியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான தமிழரசன்(25) பிரியதர்ஷினியை கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சினேகா கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார்.
- சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர்
கடலூர்:
பண்ருட்டி அடுத்த நடுகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன்.கூலித் ெதாழிலாளி. இவரது மகள் சினேகா. இவர் கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார். பல இடங்களில் தேடி எங்கும் கிடை காததால் காடாம்புலியூர் போலீசில் அவரது பெற்றோர்கள் புகார் கொடு த்தனர்.காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4ஆண்டு க்கு முன்பு காணாமல் போன இளம் பெண் சினேகாவை, இன்ஸ்பெக்டர்ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் பல்வேறு கோணங்களில் நடத்தி தேடி வந்தனர். இவர்களது தீவிர முயற்சியால் 4 ஆண்டுகளுக்கு பிறகுபழனி அருகே ஒரு கிராமத்தில்இளம் பெண் சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர். இவர்களை காடாம்புலியூர்போலீஸ் நிலையத்திற்குஅழைத்துவரஏற்பாடுசெய்துள்ளனர்.
- திருவட்டாரில் உள்ள பள்ளிக்கு பயிற்சிக்காக சென்று வந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை :
மார்த்தாண்டம் முழங்குழி வாயக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்கு மார். ஒர்க் ஷாப் உரிமை யாளர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 28). இவர் பி.எட். முடித்துவிட்டு திருவட்டாரில் உள்ள பள்ளிக்கு பயிற்சிக்காக சென்று வந்தார். நேற்று மாலை மார்த்தாண்டம் ெரயில்வே கிராசிங் அருகே உள்ள பல்லன்விளை பகுதியில் மகேஸ்வரி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி காயப்படுத்தி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மகேஸ்வரியை பொதுமக்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேவராசு திருக்கனூரில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார்.
- அதிலிருந்த 8 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை பணம் திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த வி. மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராசு(50). இவர் திருக்கனூரில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாவாடை கூறிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சத்தம் கேட்டு பாவாடை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து இருந்தும் உள்ளே பீரோ திறந்தும் கிடந்தது. இது பற்றி திருச்செந்தூரில் இருந்த தேவராசிடம் தகவல் தெரிவித்தனர். அவர் வி .மாத்தூர் திரும்பி வந்து பீரோவை பார்த்தபோது அதிலிருந்த8 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது பற்றிய புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
- பக்கத்து வீட்டுக்குச் சென்று பேசி இருந்த பொழுது கணவர் சதீஷ் ஏன் அங்கெல்லாம் சென்று பேசுகிறாய்.
- வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜெயசங்கரியை தேடி வருகின்றனர்
கடலூர்:
பண்ருட்டி மாளிகை மேடு புது காலனியை சேர்ந்தவர் சதீஷ்இவரது மனைவி ஜெயசங்கரி (வயது 35) இவர் கடந்த 26-ந் தேதி அன்று பக்கத்து வீட்டுக்குச் சென்று பேசி இருந்த பொழுது கணவர் சதீஷ் ஏன் அங்கெல்லாம் சென்று பேசுகிறாய் என்று கேட்டு திட்டியதால் ஜெயசங்கரி கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் கணவர் சதீஷ் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜெயசங்கரியை தேடி வருகின்றனர்
- மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
- வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அம்ஜத்( வயது 37), கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே ஒரு குட்டி நாக பாம்பு ஊர்ந்து சென்றது.
அப்போது குடிபோதையில் இருந்த அம்ஜத், நாக பாம்பு குட்டியை கையில் பிடித்தார். அப்போது பாம்பு அம்ஜத் கையை கடித்ததில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்து எடுத்துக் கொண்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அம்ஜத்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டிலில் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சம்பவத்தால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ரெட்டி. இவரது மனைவி ஸ்வப்னா ரெட்டி. தம்பதிக்கு 2 மகன்கள் இவர்களது மூத்த மகன் ராயந்த் ரெட்டி (வயது 14).
இவர் ஐதராபாத், காஜாகுடா பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
மகன்கள் இருவரும் ஐதராபாத்தில் படித்து வருவதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் ரெட்டி தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் கச்சி பவுலி பகுதியில் உள்ள மை ஹோம் பூஜா அடுக்குமாடி குடியிருப்புக்கு குடி பெயர்ந்தார்.
இந்நிலையில் ராயந்த் ரெட்டிக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் சரிவர படிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு 8-30 மணி அளவில் ராயந்த் ரெட்டி தனது தாயாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினார். அதில் படிப்பில் இஷ்டம் இல்லாததால் அவமானமாக உள்ளது.
இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் குடியிருப்பு காவலாளிகளுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடினர். தகனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து ராயதுர்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர். நேற்று காலை அடுக்கு மாடி குடியிருப்பின் எச்.பிளாக் படிக்கட்டில் மாணவன் ராயந்த் ரெட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ராயந்த் ரெட்டி அடுக்குமாடி குடியிருப்பின் 35-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- கல்லூரிக்கு சென்ற ஊழியர்கள் வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- விசாரணை முடிவில் முதியவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று இரவு சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இன்று காலை கல்லூரிக்கு சென்ற ஊழியர்கள் வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் முதியவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
- தாமஸ் ஹால் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
- பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தஞ்சாவூர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தெற்கு மலைப்பட்டி யை சேர்ந்த ரத்தினவேல் என்பவரின் மகன் விஜயராஜ் (வயது 28). சம்பவத்தன்று இவர் தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்குள்ள தாமஸ் ஹால் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதனால் அதிர்ச்சிய டைந்த விஜயராஜ் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவி ல்லை. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் விஜயராஜ் புகார் செய்தார்.
இதன்பே ரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்