என் மலர்
நீங்கள் தேடியது "slug 223265"
- நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவையும் மறைந்துகொண்டே போகிறது.
- நமது முந்தைய தலைமுறையே முழுமையாக தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓமலூர்:
இன்றைய கால சூழலில் உறவுகள், நண்பர்கள் திருமணம், வேலை, இடமாற்றம் என பல காரணங்களால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பிரிந்து சென்று வாழ்ந்து வருகின்றனர். அதனால், கடந்த ஒரு சில தலைமுறைகளாக குடும்ப உறவுகளின் மாண்பு, சந்திப்பு இல்லாமல் போனது. மேலும், நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவையும் மறைந்துகொண்டே போகிறது. நமது முந்தைய தலைமுறையே முழுமையாக தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வளரும் தலைமுறைக்கு நமது கலாச்சாரம், பண்பாடு, குடும்ப உறவுகள், நட்புகள், சொந்த பந்தங்கள், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகள் குறித்த தகவல்களை தெரியப்படுத்தும் வகையில் 7 தலைமுறை சங்கமிக்கும் குடும்ப இணைப்பு மற்றும் சந்திப்பு விழா ஓமலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்தப்பட்டது. ஓமலூரை சேர்ந்த செல்வராஜ், வருதராஜன், லிபியாசந்திரசேகர், துரைராஜி ஆகியோர் இணைந்து விழாவை நடத்தினர்.
இவர்கள் 4 பேரும் ஒன்றிணைந்து அனைத்து சொந்தங்களையும் அவரது முகவரியை பல மாதங்களாக கண்டுபிடித்து அங்கு சென்றனர். இதில் முக்கியமாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் பலர் இருந்தனர். மேலும் வெளிநாடுகளான துபாய் அரபு நாடுகளிலும் சிலர் இருந்தனர்.
இவர்களை தொடர்பு கொண்டு இந்த விழாவில் இணைத்தனர். இந்த விழாவில் 5-வது தலைமுறையை சேர்ந்த பாட்டன், பாட்டிகள் முதல் தற்போதைய தலைமுறை கொள்ளு பேர குழந்தைகள் வரை 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டு தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர். கூட்டு குடும்பத்தால் இளைய தலைமுறை கற்றுகொள்ளும் வாழ்வியல் நடைமுறைகள் குறித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

100 வயது மூதாட்டி வெங்கட் அம்மாள்
மேலும், அனைத்து குடும்பங்களின் பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் ஒன்றாக பேசி, விளையாடி உறவை புதுபித்துக்கொண்டனர். அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். எவ்வளவு தூரத்தில் வாழ்ந்தாலும், குடும்ப உறவுகளை ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்தித்து அனைவரும் அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 வயது மூதாட்டி வெங்கட் அம்மாள் கூறும்போது, என் வாழ்நாளில் இவர்களை பார்க்கவே முடியாது என்ற சூழ்நிலையில் இருந்த போது இது போன்ற குடும்ப சந்திப்பு விழாவை ஏற்படுத்தி எனது வாழ்நாள் கனவை பூர்த்தி செய்துள்ளனர். அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தற்போது எனது மகன், மகள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன்கள், அவர்களது மகன்கள் என பல தலைமுறைகளை இன்று நான் சந்தித்தேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறுகையில் தொடர்ந்து குடும்ப விசேஷங்கள், துக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் இது போன்ற உறவுகள் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் மனித வாழ்வு முழுமை அடையும். தற்போது நாங்கள் முழுமையான மகிழ்ச்சியில் உள்ளோம் என்றனர். இறுதியாக இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு குடும்ப உறவுகள் அனைவரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
- பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தில் 2 பேர் திடீர் மாயமானார்.
- ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது47). இவரது மனைவி அமுதா (42). இருவருக்கும் திருமணமாகி 15 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சிவக்குமார் சலூன் கடைக்கு சென்று வருகிறேன், என்று கூறிவிட்டு சென்ற வர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சிவக்குமார் தாய்ஜெயகாந்தி முத்தாண் டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை தேடி வருகின்றனர்.
இதனிடையே ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கடைசி மகனான சுரேஷ்குமார் மாயமானார். இதுகுறித்து தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
- ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது குடும்பத்தினரை எண்ணிப்பார்க்க வேண்டும்.
- போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் போைத பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். குமரி மாவட் டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு போதை பொருட்களை ஒழித்து வருகிறார்.
இந்த நிலையில் சர்வதேச போதை ெபாருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி அவர், ஒரு வீடியோ வெளி யிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறி இருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26-ந் தேதியன்று உலக போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. இந்த நாளில் போதை பொருட்களை ஓழிப்போம் என முக்கியமாக உறுதி மொழியை அனைவரும் எடுப்போம். ஆரோக்கி யமான சமூதாயத்தை சீரழிப்பதில் முக்கிய காரணமாக இருப்பது போதை பொருட்கள் பழக்கம்.
ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது குடும்பத்தினரை எண்ணிப்பார்க்க வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் பிற நல்ல வழிகளில் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது. உடற்பயிற்சி, யோகா, புத்தகங்கள் வசிப்பது இப்படி பல வழிகளை இளைஞர்கள் கடைபிடித்து மனதை ஒழுக்கத்துடன் வைத்திருக்க வேண்டும்.
போதை பொருட்களின் பக்கவிளைவுகள் மிக கொடூரமாக இருக்கும். நமது உடல் ஆரோக்கியம், மனதையும் உருக்குலைக்கும். போலீஸ் சூப்பிரண்டு என்ற முறையில் சொல்கிறேன், போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்கி, அதனை அடியோடு வேறறுக்க வேண்டும்.
இப்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போதை பொருட்கள் இல்லாத சமூதாயத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி எடுத்து பின்பற்றினால் நமது நாடு அசுர வேகத்தில் தலைசிறந்த நாடாக மாறிவிடும். போதை பொருட்கள் தடுப்பு குறித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- விடுமுறை நாட்களில் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள்.
- துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள்.
காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள் தங்கள் காதலை உயிர்ப்புடன் பின் தொடர்வதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும். குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என எதிர்கொள்ளும் வாழ்க்கை மாற்றங்கள் காதல் தீயை கட்டுப்படுத்தக்கூடும். வேலைக்கு செல்லுதல், குடும்பத்தை நிர்வகித்தல் என ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு மாறக்கூடும். அப்படி ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு பழகிவிடும்போது ஒருவித சலிப்பு எட்டிப்பார்க்கும். காதலிக்கும்போது தன்னிடம் காண்பித்த அன்பை இப்போது வெளிப்படுத்துவதில்லை என்ற எண்ணம் துணையிடம் குடிகொண்டுவிடும். சின்னச் சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் போதும். அதுபோன்ற எண்ணங்கள் தோன்றாது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
வாரத்திற்கு ஒருமுறை, இல்லாவிட்டால் மாதம் ஒருமுறையாவது வெளி இடங்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவை ஷாப்பிங், சுற்றுலா, கடற்கரை, பூங்கா, காபி ஷாப் என எந்த இடமாகவும் இருக்கலாம். அங்கு குடும்ப விஷயங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுங்கள். காதலித்த நாட்களை பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த நாட்களை மீண்டும் அன்றாட வாழ்வில் நினைவுபடுத்தும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அவ்வப்போது காதலை வெளிப்படுத்துங்கள். அரவணையுங்கள். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல், அன்பு, அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.
மாதம் ஒருமுறையேனும் துணைக்கு ஆச்சரியம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். பரிசு வழங்குவது, திடீரென சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது, துணைக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது, பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுப்பது என `சர்ப்ரைஸ்' கொடுக்கும் விதத்தில் செயல்படுங்கள். அவை இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.
விடுமுறை நாட்களில் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள். இந்த செயல் அவரின் வேலையை எளிமைப்படுத்தும். அவருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பையும் வழங்கும். குழந்தைகள், குடும்பத்தினருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். குழுவாக நடனம் ஆடலாம். அவை உடல் மற்றும் மன ரீதியாக உற்சாகத்தை வழங்கும். உணர்வு ரீதியாக ஒன்றிணைந்து செயல்படவும் வழிவகுக்கும்.
காதலித்த சமயத்தில் நடை, உடை, அழகை பராமரிப்பதற்கு எவ்வளவு ஆர்வம் காட்டினீர்களோ அதனையே இப்போதும் பின் தொடருங்கள். மற்றவர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுக்கொடுக்கவும் அவை உதவும். துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் அவரது செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டுங்கள். இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவியுங்கள். அவை கடந்த கால காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க பக்கபலமாக அமைந்திருக்கும்.
- இருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காதவைகளைப் பற்றி முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.
- வீட்டு வேலைகளில் கணவன்-மனைவி இருவரின் பங்களிப்பும் அவசியம்.
திருமண பந்தத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது உண்டாகும் ஏமாற்றம், தம்பதிகளை பிரிவு வரை கொண்டு செல்கிறது. இதைத் தவிர்க்க, மணவாழ்க்கையில் இணையப்போகும் இருவரும், திருமணத்திற்கு முன்பே சில விஷயங்களைக் கலந்து பேசி முடிவு செய்து கொள்வது அவசியம். அதில், சிலவற்றை இங்கே காணலாம்.
குழந்தைகள்: திருமண வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் குழந்தைகளை எப்போது பெற்றுக்கொள்வது என்பதில் எந்த முடிவை எடுத்தாலும், அதை தம்பதியாகப் போகும் இருவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது, அவர்களை எப்படி வளர்ப்பது, நெறிப்படுத்துவது? என்பதைப் பற்றிப் பேசி, முடிவு செய்ய வேண்டும். இதில், வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியான கருத்து இருவருக்கும் வேண்டும். திருமணத்திற்கு முன்பு இது குறித்து விவாதிப்பது, எதிர்காலத்தை இனிமையாக்கும்.
நிதி சார்ந்தது:குடும்பத்தின் வளர்ச்சிக்கு பணம் அவசியம். ஒருவரைத் திருமணம் செய்வதற்கு முன்பு அவரது பொருளாதார நிலைமை எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தால், அதை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி இருவரும் கலந்தாலோசித்து செயல்படலாம்.
வேலை சார்ந்தது: வீட்டு வேலைகளில் கணவன்-மனைவி இருவரின் பங்களிப்பும் அவசியம். குடும்பப் பொறுப்புகளைப் பிரித்து செயல்படுவதற்கு இருவரும் தயாராக இருக்க வேண்டும். இதுபற்றி முன்கூட்டியே ஆலோசித்து முடிவு செய்வது, திருமணத்துக்கு பின்பு வாழ்க்கை சுலபமாக செல்வதற்கு வழிவகுக்கும்.
பழக்கவழக்கம்: இருவருக்கும் உள்ள தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், அவற்றில் நன்மை தருபவை, இருவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துபவை, எதிர்மறையான பழக்கங்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் என அனைத்தையும் பேசி முடிவு செய்ய வேண்டும். இது குறித்து எதிர்காலத்தில் இருவருக்கும் பாதிப்பு வராமல் கவனமுடன் முடிவெடுக்க வேண்டும்.
விருப்பு, வெறுப்புகள்: இருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காதவைகளைப் பற்றி முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. இதன் மூலம் திருமணத்துக்கு பின்பு ஏற்படும் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.
அந்தரங்கம்: தம்பதிக்குள் இருக்கும் நெருக்கம் தனிப்பட்டது. இதில் பிறரின் தலையீடு எப்போதும் இருக்கக்கூடாது. கணவன்-மனைவி இருவருக்குமான தனிப்பட்ட விஷயங்களில் வேறு எந்த நபரையும் நுழைய விடாமல் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இது குறித்து முன்கூட்டியே பேசி முடிவு செய்வது சிறந்தது.
- கணவன் - மனைவி இடையே எந்த விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது.
- தனி மனித சுதந்திரம், சுய மரியாதை, உரிமை, உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
கணவன் - மனைவி இடையேயான பரஸ்பர புரிதலை பொறுத்தே திருமண பந்தம் வலுப்படும். இன்பம், துன்பம், துக்கம், சுகம், வெற்றி, தோல்வி போன்ற கலவையான சூழல்களை எப்படி கையாள் கிறார்கள் என்பதை பொறுத்தும் இருவருக்குமிடையேயான உறவு பிணைப்பு கட்டமைக்கப்படும். ஜாதக பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதை விட இருவருக்குமிடையே மன பொருத்தம் எப்படி அமைந்திருக்கிறது என்பதில்தான் இல்லறத்தின் இனிமை அடங்கி இருக்கிறது. இருவருடைய குணாதிசயங்களும் ஒத்திருக்க வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் பரிவு, அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். தனி மனித சுதந்திரம், சுய மரியாதை, உரிமை, உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கேற்ப கணவன் - மனைவி இருவரின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
மகிழ்ச்சியான தருணமே இல்லறத்திற்கு இனிமை சேர்க்கும். திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்பாராதவிதமாக மகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தால் அதனை இருவரும் உணர்வுப்பூர்வமாக ரசித்து மகிழலாம். அப்போது இந்த மகிழ்ச்சிக்கு யார் காரணம்? என்பது பற்றி விவாதிப்பதில் தவறில்லை. ஆனால் தான் மட்டுமே அதற்கு காரணம் என்ற கர்வம் இருவருக்கும் எழுந்துவிடக்கூடாது. மகிழ்ச்சியான தருணத்தை இருவரும் மன நிறைவோடு அனுபவித்தாலே உறவு வலுப்படத்தொடங்கிவிடும். அதைவிடுத்து, 'தன்னால்தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது' என்ற எண்ணம் உறவை சிதைத்துவிடும்.
குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகளைத்தான் தேட வேண்டும். அதைவிடுத்து பிரச்சினைக்கு யார் காரணம் என்று சிந்திக்கக்கூடாது. சம்பந்தப்பட்டவரிடம், 'நீ தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். உன்னால்தான் என் நிம்மதியே கெட்டுப்போகிறது' என்று குற்றம் சாட்டுவது கூடாது. அது ஒட்டுமொத்த குடும்ப நிம்மதியையுமே சீர்குலைத்துவிடும்.
உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு தயக்கம் காட்டக்கூடாது. மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேச வேண்டும். உணர்வுகளை நேர்மையாக வெளிப் படுத்தவும் வேண்டும். அதுதான் துணை மீது நம்பிக்கையை வளர்த்தெடுக்கும். கணவன் - மனைவி இடையே எந்த விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது.
கணவன் - மனைவி இருவரில் யாரேனும் மன குழப்பத்துடனோ, ஏதேனும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் தவிப்புடனோ இருக்கும்போது ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை உடன் இருந்து உதவிகரமாக செயல்பட வேண்டும். இந்த குணாதிசயம்தான் உறவு பாலத்தை வலுவாக்க உதவும்.
கணவன் - மனைவி இருவருக்குள் 'நான் பெரியவன். நீ சாதாரணமானவன்' என்ற எண்ணம் ஒருபோதும் எழக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், மரியாதை கொடுத்தல் என அனைத்திலும் சமமாக நடந்துகொள்ள வேண்டும். தன்னை மதிப்பு, மரியாதையுடன் நடத்துகிறார் என்ற எண்ணம் துணையின் ஆழ் மனதில் பதிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப கணவரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.
தம்பதியருக்குள் எந்தவொரு சூழலிலும் கருத்து மோதல் எழுந்துவிடக்கூடாது. அன்பும், அக்கறையும், அரவணைப்பும் எப்போதும் பின்தொடர வேண்டும். அவை எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாததாகவும் அமைந்திருக்க வேண்டும். அதுவே உறவை வலுப்படுத்தும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போதும், முக்கியமான முடிவுகளை எடுக்கும்போதும் அதில் இருவரின் பங்கீடும் இருக்க வேண்டும். அப்போதுதான் தனக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற எண்ணம் துணையிடம் நிலைத்திருக்கும். இருவரும் சமமாக மகிழ்ச்சியை உணர முடியும். அதைவிடுத்து 'எல்லாமே என்னால்தான் நடக்கிறது. நீ எதுவுமே செய்யவில்லை' என்று கூறுவது மகிழ்ச்சியை மட்டுமல்ல உறவையும் சிதைக்க ஆரம்பித்துவிடும்.
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தவறு நடப்பது இயல்புதான். அப்படி தவறு நிகழும் பட்சத்தில் அதனை ஒப்புக்கொள்ளும் பக்குவம் இருவரிடமுமே இருக்க வேண்டும். அதுதான் இருவருக்குமிடையே சரியான புரிதலை ஏற்படுத்திக் கொடுக்கும்.
வீட்டில் மட்டுமல்ல பொது இடங்கள், உறவுகள் கூடும் இடங்களில் துணைக்கு உரிய மதிப்பு, மரியாதையை கொடுக்க வேண்டும். எங்கும் சம உரிமை கொடுப்பதன் மூலம் துணை மீதான மதிப்பும் உயரத்தான் செய்யும். அதனை நினைவில் கொள்ள வேண்டும்.
வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் என அனைத்தையும் ஒரே விதமான மனோ பாவத்துடன் அணுகும் பக்குவம் கொண்டவர்களாக இருவரும் இருக்க வேண்டும். இந்த குணாதிசயம் வாழ்க்கையில் எப்போதும் நிம்மதியை தழைத்தோங்க செய்யும்.