என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.

    * இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.

    * வாழைப்பூ நறுக்கும்போது உப்புக்கலந்த தண்ணீரில் வாழைப்பூவை வெட்டிப்போட்டால் வாழைப்பூ கறுத்து போகாமல் இருக்கும்.

    * கடல் பாசி காய்ச்சும்போது இறுதியாக சில சொட்டு எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால் கடல் பாசி கண்ணாடி போல தெளிவாக இருக்கும்.

    * அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.

    * ஸ்வீட் வகைகள் செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக தெரியும்.

    * தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    * துவரம் பருப்பை வேகவைக்கும் பொழுது தண்ணீரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பொங்காது.

    * பருப்புக் குழம்பில் இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.

    * வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.

    * தேங்காய்ப் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி.

    * சாதம் மஞ்சளாக இருந்தால் சாதம் வடிக்கும் நேரத்தில் ஒரு துண்டு புளியை சேர்த்து பிறகு வடித்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.

    * மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொதித்தவுடன் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு போல இருக்கும்.

    • காப்பாற்றச் சென்ற கணவருக்கும் காயம்
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆழ்வார்கோயில் நடுத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 35). இவரது மனைவி மாரிபொண்ணு(26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன.

    நேற்று காலை மாரி பொண்ணு சமையல் செய்வதற்காக வீட்டில் உள்ள விறகு அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் எண்ணை கேன், மாரிபொண்ணு மீது விழுந்ததால் அவர் மீதும் தீப்பிடித்தது.

    இதனால் தீக்காயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு கணவர் சண்முகராஜ் ஓடி வந்தார். அவர் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவரது கை, நெஞ்சு, முகம் ஆகிய பகுதிகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவரையும் மாரிப் பொண்ணுவையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சண்முகராஜ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆருத்ரா தரிசனம் அன்று இறைவனுக்கு இந்த களி நைவேத்தியமாக படைக்கப்படும்.
    • இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்

    பச்சரிசி - 1 கப்

    வெல்லம் - 200 கிராம்

    துருவிய தேங்காய் - கால் கப்

    முந்திரி - தேவையான அளவு

    திராட்சை - தேவையான அளவு

    நெய் - ¼ கப்

    ஏலக்காய் பொடி - கால் மேசைக்கரண்டி

    செய்முறை

    அடுப்பில் கடாய் வைத்து அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ½ கப் தண்ணீரை எடுத்து தனியே வைத்து விடவும்.

    * கொதிக்கும் தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். இவ்வாறு கிளறும் போது, களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

    * தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ¼ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்து பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும். பிறகு, அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளற வேண்டும்.

    மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும், அதை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதில் ஏலப்பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

    * மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும். இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.

    * இப்போது சுவையான திருவாதிரை களி ரெடியானது.

    திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்ட போல, எளிமையாக செய்யலாம்.

    • பெண் மூதாட்டியை அமர வைத்துவிட்டு வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்து அவரை சாப்பிட வைத்தார்.
    • திடீரென காந்தி அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறித்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் அடுத்த விஜயராகவபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் காந்தி (வயது 85). தனியாக வசித்து வரும் மூதாட்டி காந்தியின் வீட்டிற்கு நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். மேலும் தன்னை உறவுக்கார பெண் என்று கூறி மூதாட்டி காந்தியிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

    இதை உண்மை என்று நம்பிய காந்தி அவரை வீட்டிற்குள் அனுமதித்தார். பின்னர் அந்த பெண், மூதாட்டியை அமர வைத்துவிட்டு வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்து அவரை சாப்பிட வைத்தார்.

    பின்னர் அந்த பெண் அவரது அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென காந்தி அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறித்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி காந்தி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சமையல் செய்தபோது உடையில் தீப்பிடித்தது
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரிய ரோஸ் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வெள்ளிச் சந்தை அருகே உள்ள முட்டம் ஓடை தெருவை சேர்ந்தவர் புருனோ, மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி மரிய ரோஸ் (வயது 57). சம்பவத்தன்று மதியம் மரிய ரோஸ் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீப்பிடித்தது. இதனால் அலறி துடித்த அவர் கூச்சலிட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் தீக்காயம் அடைந்த மரியரோசை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரிய ரோஸ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வெள்ளிச் சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். மரியரோசின் 2 மகள்களும் திருமணமாகி கோவளம் மற்றும் முட்டத்தில் வசித்து வருகின்றனர்.

    • நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை தயாரித்தார்.
    • ஹில்டா பாசியின் அற்புதமான முயற்சியை நாங்கள் அறிவோம்.

    அபுஜா:

    நைஜீரியாவை சேர்ந்த பெண் சமையல் நிபுணர் ஹில்டா பாசி (வயது27). தொழில் அதிபரான இவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமைத்து சாதனை படைக்க முடிவு செய்தார்.

    அதன்படி அவர் கடந்த 11-ந்தேதி மாலை 4 மணிக்கு சமைக்க தொடங்கினார். அவர் பெரும்பாலும் நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை தயாரித்தார்.வெளிநாட்டு உணவு வகைகளையும் சமைத்தார்.

    லாகோஸ் நகரில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியில் சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை உற்காசப்படுத்தியபடி இருந்தனர்.

    அவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்தார். ஹில்டா பாசி, 110 உணவு வகைகளை சமைத்தார். இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த பெண் சமையல் நிபுணர் லதா டாண்டன் கடந்த 2019-ம் ஆண்டு தொடர்ந்து 87 மணி நேரம் 45 நிமிடங்கள் சமைத்து இருந்தார். அந்த சாதனையை ஹில்டா பாசி முறியடித்தார்.

    இதையடுத்து அவருக்கு ஜனாதிபதி முகம்மது புகாரி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இது தொடர்பாக ஹில்டா பாசி கூறும்போது, அன்பின் வெளிப்பாடு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அன்புக்கும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார். ஹில்டா பாசியின் சாதனை சமையல் நிகழ்ச்சி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.

    இது தொடர்பாக கின்னஸ் சாதனை நிறுவனம் கூறும் போது, ஹில்டா பாசியின் அற்புதமான முயற்சியை நாங்கள் அறிவோம். அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் முன் முதலில் அனைத்து ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான சமையல் பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு வாய்ந்த திட்டமாக செயல்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் முதலமைச்ச ரின் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு பணி மேற்கொள்ளும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளுக்கான சமையல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்று பயிற்சி பெற வந்துள்ள மகளிர்குழுவை சேர்ந்த உறுப்பினர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு வழங்கும் திட்டம் பிற மாநிலங்களே போற்றுகின்ற வகையிலும் தமிழகத்தில் அனைத்து மக்களின் வரவேற்பை பெற்ற சிறப்பு வாய்ந்த திட்டமாக இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

    இத்தகைய திட்டம் முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வந்த நிலையில் மேலும் நகராட்சி, பேரூராட்சி களிலும் இத்திட்டம் செயல் பட உள்ளன. இப்பணியில் ஈடுபட உள்ள மகளிருக்கு சிறந்த சமையல் கலைஞர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படு கிறது. அதன்படி நீங்கள் சிறந்த முறையில் உணவு களை தயாரித்து குழந்தை களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், கடலாடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முத்துலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யும் நெய் பிஸ்கட்.
    • ஓவன் இல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:-

    நெய் - ஒரு கப்

    கோதுமை மாவு-ஒரு கப்

    நாட்டு சர்க்கரை - ஒரு கப்

    உப்பு -ஒரு சிட்டிகை

    ஏலக்காய் - 4 நம்பர்

    செய்முறை:-

    ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் நெய் சேர்த்து அதனை நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை கலவையை அதனுடன் சேர்க்க வேண்டும். அதனையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.நிறைய நேரம் கிளர வேண்டாம்.

    அடித்து வைத்த கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவை கட்டி இல்லாமல் சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவு கலவையை நன்றாக பிசைந்து உருண்டைகளாக்கி அதனை ஒரு தட்டில் வைத்து, அதனை பிஸ்கட் வடிவத்திற்கு உருட்டி தட்டையாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இதையடுத்து ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி அதனை 5 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் நாம் தயார் செய்து வைத்த பிஸ்கட்களை ஒரு தட்டில் வைத்து அதனுள் வைத்து 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்துக்கொள்ளவும். நெய் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பரிமாறலாம்.

    இந்த நெய் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீட்டுக்கும் வந்ததும் கொடுக்கலாம். செய்து பாருங்கள். https://www.maalaimalar.com/health


    • பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
    • சத்தான ஊட்டச்சத்து நிறைந்தது, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:-

    பாசி பயறு - 200 கிராம்

    நாட்டுச்சர்க்கரை 250 கிராம்

    வேர்கடலை - 100 கிராம்

    ஏலக்காய் - 4 நம்பர்

    உப்பு -ஒரு சிட்டிகை

    நெய் - 3 கரண்டி

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் பாசிபயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு வானொலியில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 நம்பர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு தயார். https://www.maalaimalar.com/health

    • சத்தாண சிமிலி உருண்டை பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

    தேவையான பொருட்கள்:-

    கேழ்வரகு (ராகி) மாவு - 250 கிராம்

    வெல்லம் -300 கிராம்

    வேர்கடலை - 200 கிராம்

    ஏலக்காய்- 4 நம்பர்

    நெய் - தேவையான அளவு

    உப்பு- ஒரு சிட்டிகை

    செய்முறை:-

    ஒரு கடாயில் 200 கிராம் வேர்கடலையை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 250 கிராம் கேழ்வரகு (ராகி) மாவு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு தோசை தவாவில் எண்ணை அல்லது நெய் சேர்த்து ரொட்டி அளவிற்கு திரட்டி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வேக வைத்து ராகி ரொட்டி துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்சி ஜாரில் 300 கிராம் வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த வெல்லம், பொடித்த வேர்கடலை, வேகவைத்து பொடித்த ராகி ரொட்டிகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையுடன் ஏலக்காய் பொடி, 3 கரண்டி நெய் சேர்த்து அனைத்தையும் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும். சுவையான சிமிலி உருண்டை தயார்.

    90-களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிமிலி உருண்டைகளை ஸ்நாக்காக செய்து கொடுப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    • குழந்தைகள் ஸ்கூலுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்ல ஏற்றது.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ராகி மாவு -கால் கப்

    கோதுமை மாவு - கால் கப்

    நாட்டு சர்க்கரை - அரை கப்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு - ஒரு சிட்டிகை

    கோகோ பவுடர்- 2 ஸ்பூன்

    பேக்கிங் பவுடன் -1 ஸ்பூன்

    நெய்- 100 கிராம்

    முந்திரி - 10 நம்பர்

    காய்ச்சாத பால் - 100 மி.லி

    செய்முறை:-

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்திரத்தில் கோதுமை மாவு கால் கப், ராகி மாவு கால் கப், நாட்டு சர்க்கரை, கோகோ பவுடர் 2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன், ஏலக்காய் ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு டம்ளர் பாலில், 100 கிராம் நெய் சேர்த்து கலந்து இரண்டையும் கலந்து வைத்துள்ள மாவுக்கலவையில் சேர்க்கவும். இதனை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறுது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 5 நிமிடங்கள் மூடி போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.

    அதன்பிறகு மாவுக்கலவையை எடுத்து அதனை உருண்டைகளாக உருட்டி பிஸ்கட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிஸ்கட் அச்சு இருந்தால் அதிலும் வடிவமாக தட்டிக்கொள்ளலாம். அதன் நடுவே முந்திரிகளை உடைத்து அலங்கரித்துக்கொள்ளலாம்.

    பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு மூடி இதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.

    அதன்பிறகு தயாராக வைத்துள்ள பிஸ்கட்டுகளை ஸ்டாண்ட் மீது வைத்து பாத்திரத்தை மூடி ஒரு 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி பிஸ்கட் தயார். ஓவனில் பேக் செய்வதாக இருந்தால் 180 டிகிரியில் பேக் செய்து கொள்ளுங்கள். சூடு ஆறியதும் எடுத்து பரிமாறலாம்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்பதற்கு ஒரு சிறந்த ஸ்நாக்காக இந்த ராகி பிஸ்கட் இருக்கும். சுகர் நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம். செய்து பாருங்கள்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா- ஒரு கப்

    முட்டை- 1

    உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை

    ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

    பால்- அரை கப்

    தேங்காய் பால்- ஒரு கப்

    தேங்காய் துருவல் ஒரு கப்

    நெய்- தேவையான அளவு

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.

    ×