search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரட்"

    • கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன.

    தற்போது கேரட் விளைச்சல் அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது,இன்னும் ஓரிரு வாரங்களில் கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை காரணமாக மலைகாய்கறிகள் அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோ ஒன்று ரூ.90 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதே கொள்முதல் விலை நீடித்தால் கேரட் பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார். கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • பொள்ளாச்சியில் காய்கறி மார்கெட்கள் உள்ளது.
    • ய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டடு விற்பனையாகி வருகிறது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் காய்கறி மார்கெட்கள் உள்ளன இந்த மார்க்கெட்டு களுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோபா லபுரம், ஆனை மலை, வேட்டைக்காரன்புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டடு விற்பனையாகி வருகிறது.

    தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் போன்றவை பொள்ளாச்சி சுற்றுப்பகுதி களிலேயே உற்பத்தி நடைபெற்று வருகிறது. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையில் உள்ள பகுதிகளில் நன்கு வளரும் என்பதால் ஊட்டி, மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதனால், அந்த பகுதிகளில் இருந்து பொள்ளாச்சிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் பீன்ஸ், கேரட் பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வரத்து இருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் கேரட் ரூ.24 முதல் 30 வரையிலும் விற்கப்பட்டது. ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்ததால் பீன்ஸ், கேரட் விவசாயம் பாதிக்கப்பட்டது.

    இதனால், ஜூலை மாதத்தில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு பீன்ஸ், கேரட் வரத்து குறைந்தது. இதனால், விலை அதிகரித்து ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    ×