என் மலர்
நீங்கள் தேடியது "கார் கண்ணாடி"
- கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடப்பட்டது.
- இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
கப்பலூர் அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது28). இவர் சம்பவத்தன்று தனது காரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், ஐபேட், ஸ்மா ர்ட் வாட்ஸ், ஹெட்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி னான். இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் போலீ சார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 4 பேர் மீது வழக்குப்பதிவு
- சி.சி.டி.வி. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
நாகர்கோவில் :
தென்தாமரைகுளம் அருகே கோவில் விளையை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மனைவி சஜிதா (வயது 32). இவர்கள் சம்ப வத்தன்று வீட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் அந்த வழியாக சென்றனர். அவர்க ளை பார்த்து ராஜலிங்கத்தின் வீட்டில் உள்ள நாய் குறைத்த தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டனர். இருவரையும் அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கணவன்- மனைவி இருவரும் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் உள்ள கேட்டை பூட்டி விட்டு வீட்டிற்குள் சென்றனர். அதன் பிறகு அந்த வாலிபர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து சென்று அவதூறாக பேசியதுடன் வீட்டின் முன்பு நின்ற காரின் கண்ணாடியையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
மேலும் வீட்டிலிருந்த வெளியே இருந்த பொருட்களையும் சூறையாடினர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசில் சுஜிதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை யும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் வீட்டை சூறையாடுவது போன்ற காட்சிகளும் ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவியிடம் அந்த கும்பல் தகராறில் ஈடுபடுவது போன்ற காட்சி களும் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் போலீ சார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொட ர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நட வடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
தற்பொழுது ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவி சஜிதாவிடம் தகராறில் ஈடுபட்ட சி.சி.டி.வி. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீட்டில் இருந்த நாய் குரைத்ததற்காக வீட்டை சூறையாடியதுடன் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் தென்தாமரைகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர்.
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
ஈத்தாமொழி பகுதி யைச் சேர்ந்தவர் சிவகுமார் டாக்டர். இவர் ஈத்தாமொழி மற்றும் நாகர்கோவில் பகுதியில் ஆஸ்பத்திரி வைத்துள்ளார்.
நேற்று மாலை டாக்டர் சிவக்குமார் அவரது மருத் துவமனை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஆகிய இருவரும் நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர்.
பின்னர் அவர்கள் வந்தபோது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பேக் மற்றும் அதிலிருந்து ரூ.85 ஆயிரம் ரொக் கப்பணம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை திருடப்பட்டிருந்தது.
மேலும் மருத்துவ ஆவ ணங்கள் சிலவற்றையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். இது குறித்து அரவிந்த், நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் நகர பகுதியில் இதேபோல் கார்களின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற னர். அதே கும்பல் தற்பொ ழுது மீண்டும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார் கள்.
அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். டாக்டர் காரின் கண்ணாடி உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு
- படுகாயமடைந்தவர்களுக்கு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளையை சேர்ந்தவர் அருமைநாயகம்.இவரது மகன் சேகர் (வயது 37). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன் (32) ஆகியோர் பைக்கில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினர். வீட்டுக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34), அஜித்ராம் (34), பிரதீப் (32), ஸ்டாலின் (31) ஆகியோர் காரை நிறுத்தியிருந்தனர்.இதை பார்த்த சேகர், காரை வழிவிட்டு நிறுத்துமாறு கூறினார்.
அப்போது 4 பேரும் மது அருந்துவதற்கு சேகரிடம் பணம் கேட்டதாக கூறப்ப டுகிறது. இதற்கு சேகர் மறுத்தார். இது சம்பந்தமாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனது.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.கலைந்து சென்ற 4 பேரும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து சேகரின் வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்து கார் கண்ணாடி மற்றும் சி.சி.டி. கேமராக்களை அடித்து உடைத்தனர். இதை தடுத்த சேகர் மற்றும் உறவினர் அஜயன் ஆகியோரை அவர்கள் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர்.
படுகாயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிப்பாக குளச்சல் போலீசார் மேற்கூறிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பஸ் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம். மையம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த இடத்தில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். கார்டை பெற்று பணம் எடுத்து தருவதாக கொள்ளையடித்து செல்வது கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
அழகாபுரியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தை தாலுகா அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். முன்னாள் ராணுவ வீரர் உள்பட பலரிடம் இதுபோன்ற கொள்ளை நடந்து உள்ளது. இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டபோதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை.
கரட்டுப்பட்டி டாஸ்மாக் கடையில் உள்ள விற்பனை மேலாளர் சதீஷ்குமார் கடையில் விற்பனையான ரூ.3 லட்சம் பணத்தை வங்கியில் கட்டுவதற்காக காரில் வந்தார். அந்த பணத்தை கட்டிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் இருந்த ரூ.7 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சதீஷ்குமார் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் முன்பு இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இங்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.