search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் ஒழிப்பு"

    • பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஈடுபட உள்ளனர்.
    • 4 நாட்கள் தொடர்ந்து சோத னை நடத்த வேண்டும்.

    ஈரோடு, 

    அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவற்றை ஒழிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய நடைமுறையை மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கூறியதாவது:-

    ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 4 நாட்கள் அரசின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஈடுபட உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகளில் சோதனை நடத்தி பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்ய வேண்டும்.

    மறுநாள் பிளாஸ்டிக் பொருட்களை (பைகளை), வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வைத்திருப்பதை ஆய்வு செய்து அறிந்து, அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். இதே போல 4 நாட்கள் தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதே போல் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் இந்த புதிய நடைமுறையை தொடங்கிய உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
    • தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம், ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ஏப்ரல் 3 ம் தேதி பிளாஸ்டிக் விழிப்புணர்வை வலியுறுத்தி சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி சுமார் 350 கி.மீ., தூரம் ராமஜெயம்(வயது 70), ரங்கசாமி,(63), மகேஷ்(30), தரணி(19) ஆகிய 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் . தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.சைக்கிள் பயணம் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், ஆறுமுகம், கதிர், திருமூர்த்தி மற்றும் தன்னார்வலர்கள், சித்தம்பலம் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூரில் பொதுமக்கள் வரவேற்பு
    • நெல்லூரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் பெஞ்சாலா சைதன்யா (வயது 22). இவர் பிளாஸ்டிக் ஒழிப்பையும், பிளாஸ்டிக் மறுசுழற்சி, பசுமை இந்தியாவை வலியுறுத்தி, ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இவர் ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள், தமிழகம் வழியாக இதுவரை 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திற்கு இன்று வந்தார் அவருக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சைதன்யா கூறுகையில்:-

    'மரம் நடுதலை' வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே முதல் ஜூன் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும், அதே ஆண்டில், 'உணவை வீணாக்கக் கூடாது' என்பதை வலியுறுத்தி, நெல்லூரிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.

    தற்போது, 'பிளாஸ்டிக் மறுசுழற்சியை' வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூ ழலுக்கு மாசு ஏற்படுகிறது.

    அதன் புழக்கம் தவிர்க்க முடியாமல் உள்ள நிலையில் அதை மறு சுழற்சி மூலம் மாசை கட்டுப்படுத்த முடியும். இதை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கி யுள்ளேன்.

    625 நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் பயணத்தில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் உள்ள 700 மாவட்டங்களில் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

    நெல்லூரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன் என்றார்.

    • தேன்மொழி,ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பானுமதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சித்தம்பலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியாக சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

    சித்தம்பலம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி,ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல். ஏ.,வும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.செல்வராஜ் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்.

    பின்னர் ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு விளம்பரத்தை துவக்கி வைத்தார். இதே போல மோட்டார் சைக்கிளில் சென்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக துணிப்பை வழங்கும் ரோட்டரி சங்க உறுப்பினர் ஆறுமுகத்தின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வைத்தார். பின்னர் அங்குள்ள பொது மக்களுக்கு இலவச துணிப்பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், பொங்கலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகன், முன்னாள் பல்லடம் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர்,ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கவிதா,இளைஞர் அணி ராஜேஸ்வரன், தொண்டரணி பானுமதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டியில் ரூ.388.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை பார்வையிட்டனர்.
    • மசினகுடியில் நடைபெறுகின்ற 150 மெகாவாட் மின் உற்பத்தி திறனை ஆய்வு செய்துள்ளோம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்களின் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில், அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), அருண்மொழி தேவன்(புவனகிரி) தமிழரசி (மானாமதுரை), வி.பி.நாகைமாலி (கீழ்வேலூர்), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்பூர்), எஸ்.ஜெயகுமார் (பெருந்துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் எஸ்.ஆர்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மின்சாரத்துறை சார்பில் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். ஊட்டியில் ரூ.388.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை பார்வையிட்டு, தேவையான அடிப்படை ஆலோசனைகளை வழங்கினர்.

    மின்சாரத்துறை சார்பில் மசினகுடியில் நடைபெறுகின்ற 150 மெகாவாட் மின் உற்பத்தி திறனை ஆய்வு செய்துள்ளோம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பதவியேற்ற நாள் முதல் தேயிலை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். தேயிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த மஞ்சப்பை திட்டத்தால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலேயே நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி பிளாஸ்டிக் ஒழிப்பில் முதன் மாதிரியான நகராட்சியாக உள்ளது. இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பில் முதன் மாதரியான நகராட்சியாக வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து தாட்கோ துறையின் மூலம் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.4.45 லட்சம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு வாகனத்தின் சாவிகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களான பொருளாதார கடனுதவி திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் மதிப்பீட்டிற்கான 2 மகளிருக்கு தேயிலைத் தோட்டம் குத்தகை அமைக்க ஆணைகளையும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் வழங்கினார்.

    கூட்டத்தில், கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனக்குழுவின் செயலாளர் டாக்டர்.கி.சீனிவாசன், இணைச்செயலாளர் பாண்டியன், மாவட்ட வன அலுவலர்கள் கவுதம்,(நீலகிரி), கொம்மு ஒம்காரம், (கூடலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரசு வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி (ஊட்டி), குந்தா புனல் மின் உற்பத்தி வட்டம் மேற்பார்வை பொறியாளர் செந்தில்ராஜ், பைக்காரா இறுதி நிலை நீா்மின் நிலையம் செயற்பொறியாளர் திரு.சசிசேகரன், ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மசினகுடி ஊராட்சித்தலைவர் மாதேவி மோகன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் என்ற மாதன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் சுனிதா நேரு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு) மணிகண்டன், குன்னூர் டேன்சு பொது மேலாளர் ஜெயராஜ், தாட்கோ பொது மேலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செயல்திட்டத்தை உருவாக்கி, காலக்கெடுவுக்குள் செயல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
    • பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்ற தொழில்களில் ஈடுபட அரசு உதவி.

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு, மத்திய சுற்றுச்சுழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ திறம்பட செயல் படுத்துவதற்கு, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர் அல்லது நிர்வாகி தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேசிய அளவிலான பணிக்குழுவும் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள், தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் ஒரு விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி, அதனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைக்காக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கூடுதலான உதவிகளை வழங்குகிறது. தூய்மை இந்தியா திட்டம் 2.௦ வின் கீழ், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிற பொருட்களை தயாரிப்பதற்கும், மற்ற தொழில்களில் ஈடுபடுவதற்கும் மத்திய அரசு உதவி செய்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பங்கேற்றார்.
    • பேரணியில் பள்ளி மாணவ- மாணவிகள் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள கண்ணாரம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பொதுமக்க ளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சப்பை பயன்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அன்புக்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பள்ளி மாணவ- மாணவிகள் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார், ஊராட்சி எழுத்தர் தண்டபாணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோவிந்தன், அமிர்தவள்ளி கார்த்திகேயன், வீரம்மாள், ராஜவேல், கிராம உதவியாளர் லட்சுமி, துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
    • தாராபுரம் தேன்மலர் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    தாராபுரம்:

    தாராபுரத்தை பிளாஸ்டிக் இல்லாத தூய்மை நகராக மாற்ற பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தாராபுரம் நகராட்சி கமிஷனர் ராமர் கொடியரசு பேரணியை துவக்கி வைத்தார் .இதில் தாராபுரம் தேன்மலர் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியானது தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக பூக்கடை கார்னர் சர்ச் வீதி ,தாலுகா அலுவலகம் வரை சென்றது. பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். 

    திருவெண்ணைநல்லூர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என் குப்பை என் பொறுப்பு, எனது நகரம் தூய்மையாக மாற்றி மக்கள் இயக்கமாக மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு சம்மந்தமாக பள்ளி மா ணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவி களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் பரிசுகளை வழங்கினார். அதன்பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

    மாணவிகள் பேரூராட்சி பகுதி முழுவதும் சைக்கிளில் ஊர்வலமாக சென்று கையில் பதாகைகள் ஏந்தியபடி மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும், பொதுமக்கள் மஞ்சள் துணிப்பையை பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூக்கடை கணேசன், துணைத் தலைவர் ஜோதி, தலைமை ஆசிரியர் விஜயன், இளநிலை உதவியாளர் பாலமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாசர், வரித்தண்டலர் ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
    • வீடு, வீடாக சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இந்தப் பேரணியில் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, பழந்தின்னிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் நல்லதம்பி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வீடு வீடாகச் சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதேபோல் வெண்ணந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    • கீரனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
    • இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பழனி:

    பழனி அருகே கீரனூர் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில தூய்மை திட்டம் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் பேரூராட்சி தலைவர் கருப்புச்சாமி, செயல் அலுவலர் அன்னலட்சுமி, கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியைகள், தொண்டு அமைப்பினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து ெகாண்டனர்.

    ஊர்வலத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக மஞ்சள்பை பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    • மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
    • உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலகு 2 மாணவா்கள் சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பது தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இடுவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் க.கணேசன் பேசியதாவது:-

    மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இவை மண்ணின் வளத்தை சிதைப்பதுடன், நிலத்தடி நீா்மட்டத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. உணவகங்களில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்களை வாங்குவதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகவே நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மளிகைக் கடைகள், உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    ×