என் மலர்
நீங்கள் தேடியது "ரேசன் அரிசி"
- பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு
- கடத்தல் வாகனத்தை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைப்பு
கன்னியாகுமரி:
தமிழக கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் கல்லுக்கட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக 2 லாரிகள் வந்துகொண்டிருந்தன. லாரிகளை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். அந்த லாரிகள் நிற்காமல் சென்று விட்டன. உடனடியாக போலீசார் தொடர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று திருத்தோபுரம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
டிரைவர்கள் லாரிகளை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் லாரிகளை சோதனை செய்த போது அதில் சுமார் 26 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும், அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தப்பியோடிய ஓட்டுநர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில், திருப்பூர் குடிமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சாந்தி ,சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும், ரமேஷ் சரவணன், சரவணகுமார், உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவரை கைது செய்த போது, தஞ்சாவூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அந்த ரேசன் அரிசிகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு அனுப்பியது தெரியவந்தது .இதை யடுத்து சுமார் 6 டன் ரேஷன் அரிசி மற்றும் குருணை அரிசி உள்ளிட்ட 14.5 டன் அரிசி மூட்டைகள்,லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி மூட்டைகளை விற்பனைக்கு அனுப்பிய மாரிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.
- பால் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
- 5 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் குடிமை பொருள் வழங்க ல்குற்றப்புலனாய்வுத்துறை போலீசார்ப ண்ருட்டி,புதுப்பேட்டை சிறுகிராமத்தில்இ ன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுஅந்தவழியாக வந்த பால் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில்மூட்டை, மூட்டையாக ரேசன்அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரி ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்திருவண்ணாமலை மாவட்டம்நாச்சியார் பேட்டை மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த சரவணன் (34) என்பது தெரியவந்தது. அவர்திருவண்ணாமலையி ல்கள்ளச்ச ந்தையில்விற்பனைசெய்ய 5 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்துசரவணனை போலீசார் கைது செய்து 5 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் பால் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. இது தொடர்பாக போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
நேற்று தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் பரசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு ஜீப் வேகமாக வந்தது.
அந்த ஜீப்பினை நிறுத்தும்படி அதிகாரிகள் கை காட்டினர். ஆனால் ஜீப் நிற்காமல் சென்றது. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் விரட்டிச் சென்று ஜீப்பை மடக்கினர். அப்போது ஜீப்பை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இதனை தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் மற்றும் ஊழியர்கள் ஜீப்பை சோதனை செய்தனர். அப்போது ஜீப்பில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்து டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கபட்டது. ஜீப் வட்ட வழங்கல் அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது
- சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவெண்கொண்ட காரை கை காட்டி நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது
- சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது
கன்னியாகுமரி :
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் திக்கணங்கோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவெண்கொண்ட காரை கை காட்டி நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.உடனே அலுவலர்கள் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும், அந்த வழியாக அதிக கனிம பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் சோதனை செய்து கொண்டிருந்த கல்குளம் வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர் ரமேசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவரும், நிற்காமல் சென்ற வாகனத்தினை பின் தொடர்ந்து துரத்தி சென்றார். சினிமாவில் வரும் சம்பவம் போல இந்த சேசிங் அமைந்தது.
கருங்கல், பள்ளியாடி, இரவிபுதூர்கடை, சுவாமி யார்மடம், வேர்கிளம்பி வழியாக சுமார் 25 கிலோமீட்டர் தூரம் அதிகாரிகள் காரை துரத்தி சென்றனர். கண்ணனூர் என்னுமிடத்தில் செல்லும்போது எதிரே அப்பகுதி கோவிலிலிருந்து சாமி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.இதனால் காரை தொடர்ந்து இயக்க முடியாமல் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் உட்பட இருவர் இறங்கி ஓடிவிட்டனர்.
பின்னர் காரை சோதனை செய்ததில் அதில் மறைத்து வைத்திருந்த சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட கார் வட்டவழங்கல் அலுவ லகத்திற்கு கொண்டு செல் லப்பட்டது.
- ஒரு வாரத்தில் 447 குவிண்டால் ரேசன் அரிசி கடத்தல்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்கள் பறிமுதல்,
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் உணவு பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
இதை தடுக்கும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு, ரேசன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 14.11.2022 முதல் 20.11.2022 வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்தப்பட இருந்த ரூ, 53,71,209/- மதிப்புள்ள 9447 குவிண்டால் ரேசன் அரியை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் 25 லிட்டர் ரேசன் மண்ணெண்ணெய், 144 கிலோ கோதுமை, இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த 41 எரிவாயு உருளைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 193 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் புலியூர்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சந்தேகத்துக்கு இடமாக நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் வாகனத்தை சோதனை செய்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.
நேற்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜி தலைமையில் போலீசார் புலியூர்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கண்டெய்னர் வாகனம் ஒன்று சாலை ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்தது.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 190 மூடையில் சுமார் 9 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்க பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வாகனத்தின் ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
- 1 டன் சிக்கியது
- தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது
நெமிலி:
சோளிங்கர் ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி கடத்துவதாக அரக்கோணம் ெரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ெரயில்வே பாதுகாப்பு படை சப் - இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் வின்சன், ரைட்டர் பாஸ்கரன் ஆகியோர் சோளிங்கர் ெரயில்வே நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ெரயிலில் ஏற்ற வைத்திருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியை 37 மூட்டைகளில் இருந்தது. அதனை பறிமுதல் செய்து பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியன் அவர்களின் ஒப்படைத்தனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கியது
- வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ஆற்காடு மற்றும் விஷாரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப் போது கீழ் விஷாரம் பகுதியைச் சேர்ந்த அகமத் பாஷா (வயது 61) என்பவர் அவரது வீட்டின் அருகில் தலா 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதைத்தொ டர்ந்து அகமத் பாஷாவை போலீசார் கைது செய்தனர். அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
- காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிபகிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
- கைது செய்யப்பட்ட டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் மூலச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டியும் கார் நிறுத்தாமல் சென்றுவிட்டது.
தொடர்ந்து போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று வேர்கிளம்பி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். காரை ஓட்டி வந்த ஓட்டுநரையும் கைது செய்தனர். மேலும் காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. காரில் இருந்து கைப்பற்றப் பட்ட ரேஷன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர் வோர் வாணிபகிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் திருவட்டார் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது. மேலும் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ½ டன் சிக்கியது
- குன்னத்தூர் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில பெங்களூர் வரை செல்லும் பாசஞ்சர் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் பிளாட்பாரத்தில் மறைத்து வைத்து இருந்த சிறு சிறு மூட்டைகளில் சுமார் ½ டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வருவாய் துறையினர் திருப்பத்தூர் அருகே குன்னத்தூர் பகுதியில் உள்ள நுகர்வோர் பொருட்கள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
- ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கேரளா மாநிலம் ஐரா பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழிலாளி. இவர் நேற்று மாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருவனந்தபுரம் நோக்கி வேகமாக சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தில் சிக்கிய காரை விட்டு விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினcர்.
அப்போது விபத்துக் குள்ளான காரில் சோதனை செய்தபோது ஒரு டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் மற்றும் அரிசியை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவரை போலீசாரை வலைவீசி தேடி வருகினறனர்.